பி. வாசு

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

பி. வாசு என அறியப்படும் வாசுதேவன் பீதாம்பரம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றவையாகும். என் தங்கச்சி படிச்சவ, பொன்மன செல்வன், பணக்காரன், நடிகன், சின்னத் தம்பி, மன்னன், செந்தமிழ் பாட்டு, இது நம்ம பூமி, உழைப்பாளி, உடன் பிறப்பு, வால்டர் வெற்றிவேல், சேதுபதி ஐ.பி.எஸ், சந்திரமுகி ஆகியத் திரைப்படங்கள் ஆகும். இவரின் தந்தை பீதாம்பரம் நடிகர் எம்ஜிஆரின் ஒப்பனைக் கலைஞராகவும், நெருங்கிய நண்பராகவும் இருந்தார். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது[சான்று தேவை], தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்[சான்று தேவை].

பி. வாசு
பிறப்புவாசுதேவன் பீதாம்பரம்
செப்டம்பர் 15, 1954 (1954-09-15) (அகவை 69)[1]
கேரளா, இந்தியா
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கதாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1981–லிருந்து -
வாழ்க்கைத்
துணை
சாந்தி
பிள்ளைகள்சக்தி வாசு, அபிராமி வாசு

இயக்கியத் திரைப்படங்கள் தொகு

மேற்கண்ட தமிழ்த் திரைப்படங்கள் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. P Vasu – Man with a Midas touch – Tamil Movie News. IndiaGlitz (2006-09-16). Retrieved on 2012-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வாசு&oldid=3920653" இலிருந்து மீள்விக்கப்பட்டது