விஜயகுமார்

தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

விஜயகுமார் (Vijayakumar, பிறப்பு: 29 ஆகத்து 1943) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு (குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில்) நடித்துள்ளார். ஒரு சில இந்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 1961இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக அறிமுகமான இவர், 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]

விஜயகுமார்
பிறப்புபஞ்சாக்சரம் ரங்கசாமி பிள்ளை
ஆகத்து 29, 1943 (1943-08-29) (அகவை 81)
நாட்டுச்சாலை, பட்டுக்கோட்டை, தமிழ்நாடு[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1961, 1973 – தற்போது வரை
பெற்றோர்ரங்கசாமி பிள்ளை
சின்னம்மாள்[2]
வாழ்க்கைத்
துணை
  • முத்துக்கண்ணு (1969–தற்போது)
  • மஞ்சுளா (1976–2013)
பிள்ளைகள்அருண் விஜய்
பிரீத்தா
ஸ்ரீதேவி விஜயகுமார்
கவிதா
வனிதா
அனிதா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாருக்கு அருண் விஜய் என்ற மகனும், கவிதா, அனிதா, வனிதா, பிரீத்தா, சிறீதேவி என ஐந்து மகள்களும் உள்ளனர்.

சின்னத்திரையிலும் நடிக்கத் தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' என்ற தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.

இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.

தொழில் வாழ்க்கை

தொகு

1961 ஆம் ஆண்டில் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் குழந்தை நடிகராக இவரது பயணம் தொடங்கியது . சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் நடித்த இப்படத்தில் சிறுவயது முருகனாக விஜயகுமார் நடித்தார். அதன் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லையென்றாலும், இவர் கந்தன் கருணை திரைப்படத்தில் முருகக் கடவுளாக நடிக்கவிருந்தார். ஆனால் அதற்குப் பதிலாக சிவகுமார் அந்த வேடத்தில் நடித்தார். சூரபத்மனால் கைது செய்யப்பட்ட பிரபுகளில் ஒருவராக விஜயகுமார் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

1973 ஆம் ஆண்டில், தேவராஜ்-மோகன் இயக்கிய பொண்ணுக்குக் தங்க மனசுவில் விஜயகுமார் தனது முதல் வெற்றியைப் பெற்றார். இப்படத்தின் மற்றொரு நாயகன் சிவகுமார். பொண்ணுக்கு தங்க மனசு திரைப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்தது. முன்னணி நடிகர்களுடன் எழுபதுகளில் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். குறிப்பாக எம்.ஜி.ராமச்சந்திரன் உடன் இன்று போல் என்றும் வாழ்க,சிவாஜி கணேசன் உடன் தீபம், கமல்ஹாசன் உடன் நீயா போன்ற திரைப்படங்களில் நடித்தார். 1970களில் விஜயகுமார் ஒரு பிரபலமான துணை நடிகராக இருந்தபோது, அவள் ஒரு தொடர்கதை, மதுர கீதம், அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

1980களின் முற்பகுதியில் ஒரு சிறிய சரிவைச் சந்தித்த பிறகு, விஜயகுமார் இரண்டாவது 1988 ஆம் ஆண்டில் நடிக்கத் தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில், பிரபு, கார்த்திக் இருவருக்கும் தந்தையாக நடித்தார். 1990களில், இவர் நடித்த நாட்டாமை, கிழக்குச் சீமையிலே, பாட்ஷா ஆகிய திரைப்படங்கள் இவர் திரைப்பயணத்தில் முக்கியமானவை. கடந்த சில ஆண்டுகளில், திரைப்படங்களை விட தொலைக்காட்சித் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜயகுமார் இதுவரை மொத்தமாக 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

அவர் 2015 அக்டோபர் 18 வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராகவும் இருந்தார்.

2016 மார்ச் 16 அன்று, விஜயகுமார் பாஜகவில் இணைந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

விஜயகுமாரின் மனைவிகள் முத்துகண்ணு, மஞ்சுளா.

முத்துக்கண்ணுவின் வழியே வந்த பிள்ளைகள் கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோராவர்.

மஞ்சுளாவின் வழியே வந்த பிள்ளைகள் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோராவர்.

இதுவரை, அருண் விஜயும் அவரது தந்தையான விஜயகுமாரும் நான்கு முறை மட்டுமே திரையில் ஒன்றாக நடித்துள்ளனர். அவை, பாண்டவர் பூமி, மலை மலை , மாஞ்சா வேலு, குற்றம் 23.

2013 சூலை 23 அன்று, விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா சென்னையில் இறந்தார். அவருக்கு வயது 59.

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு

2010 களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2014 சண்டமாருதம்
ஆம்பள
லிங்கா
2013 சிங்கம் 2 தமிழக அமைச்சர்
சென்னையில் ஒரு நாள் மருத்துவர். அருமைநாயகம்
2011 மம்பட்டியான்
ஒஸ்தி
கண்டேன்
பொன்னர் சங்கர் பெரியமலை கவுண்டர்
2010 சிங்கம் தமிழக உள்துறை அமைச்சர்
மாஞ்சா வேலு வேலுவின் அப்பா
கோவா நாட்டாமை
ஜக்குபாய்

2000 களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2009 பொக்கிஷம் சிறப்புத் தோற்றம்
சொல்ல சொல்ல இனிக்கும்
மலை மலை காவல் ஆய்வாளர்
1977
2008 குசேலன் அவராகவே சிறப்புத் தோற்றம்
கண்ணும் கண்ணும்
வைத்தீஸ்வரன்
ஆயுதம் செய்வோம் உதயமூர்த்தி
'சந்தோஷ் சுப்பிரமணியம் ராஜேஸ்வரியின் அப்பா
2007 தாமிரபரணி பானுவின் தாத்தா
குற்றப்பத்திரிகை
தீபாவளி முதலியார்
2006 குஸ்தி அபி, திவ்யாவின் தாத்தா
தலைமகன்
இளவட்டம்
ஜாம்பவான்
தர்மபுரி
ஆதி ஆதியின் தாத்தா
2005 குருதேவா
ராமகிருஷ்ணா
ஜி
மஜா சிதம்பரம்
லண்டன்
சந்திரமுகி துர்காவின் தாத்தா
2004 ஏய்
வானம் வசப்படும்
மானஸ்தன்
குத்து
2003 சாமி சாமியின் அப்பா
அன்பு
2002 பாபா
ஆல்பம்
ஸ்ரீ
ஆசை ஆசையாய்
துள்ளுவதோ இளமை
என் மன வானில்
வில்லன்
2001 பாண்டவர் பூமி
ஆனந்தம்
ஸ்டார்
ஏழுமலை
2000 குஷி
சந்தித்த வேளை
மாயி

1990 களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1999 மலபார் போலிஸ்
பூவெல்லாம் கேட்டுப்பார்
நீ வருவாய் என
பொண்ணு வீட்டுக்காரன்
ஆனந்த பூங்காற்றே
ஜோடி
சுயம்வரம் குசேலன்
சின்ன துரை
ஆசையில் ஒரு கடிதம்
முதல்வன்
தேசிய கீதம்
சங்கமம் சிவசங்கர மூர்த்தி
1998 என் ஆசை ராசாவே
நட்புக்காக பிரபாவதியின் அப்பா
1997 ஆஹா பரசுராமன்
பாரதி கண்ணம்மா
பாஞ்சாலங்குறிச்சி
புதையல்
அபிமன்யு
பெரிய தம்பி சங்கரபாண்டியன்
பெரிய இடத்து மாப்பிள்ளை பெரியதம்பி
1996 மிஸ்டர் ரோமியோ
அந்திமந்தாரை
லவ் பேர்ட்ஸ்
பூவரசன் உக்கிர பாண்டி
பரம்பரை
பெரிய இடத்து மாப்பிள்ளை
சேனாதிபதி லிங்கப்பன் நாயக்கர்
1995 பாட்ஷா மாணிக்கத்தின் அப்பா
மாண்புமிகு மாணவன்
லக்கிமேன்
முத்துகாளை சங்கையா
பெரிய குடும்பம்
ராசய்யா ராசய்யாவின் தாத்தா
1994 தாய் மாமன்
ச ரி க ம ப த
சக்திவேல் சக்திவேல்
நாட்டாமை பெரிய நாட்டாமை
சாது
அரண்மனை காவலன்
ராஜகுமாரன்
அதிரடிப்படை
அதர்மம்
ரசிகன்
1993 அரண்மனைக் கிளி
எஜமான்
ராக்காயி கோயில்
கட்டபொம்மன்
தாலாட்டு
மறவன்
கிளிப்பேச்சு கேட்கவா
கிழக்குச் சீமையிலே மாயாண்டி தேவன்
உழைப்பாளி தமிழரசுவின் மாமா
1992 வால்டர் வெற்றிவேல் வெற்றிவேலுவின் அப்பா
அமரன்
ஊர் மரியாதை சின்ன ராஜா சிறப்புத் தோற்றம்
சூரியன்
தெய்வ வாக்கு
முதல் குரல்
பட்டத்து ராணி சுந்தரம்
செந்தமிழ் பாட்டு
1991 சத்ருவு வழக்கறிஞர்
கிழக்குக் கரை ரங்கநாதன்
ரிக்சா மாமா
பிரம்மா
இதயம்
சேரன் பாண்டியன்
1990 கிழக்கு வாசல்
பணக்காரன்
சத்ரியன்
பெரிய வீட்டு பண்ணைக்காரன்
வேலை கிடைச்சிருச்சு

1980 களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1989 ராஜாதி ராஜா
வெற்றி விழா
1988 அக்னி நட்சத்திரம் விஸ்வநாத்
மதுரைக்கார தம்பி
புதிய வானம்
என் தமிழ் என் மக்கள்
1987 இன்சாப் கி புகார்
விடுதலை
வேலுண்டு வினையில்லை
வைராக்கியம்
1986 மாவீரன்
மௌனம் கலைகிறது
ஒரு இனிய உதயம்
நான் அடிமை இல்லை
உயிரே உனக்காக
1985 ராஜரிஷி
நேர்மை
1984 சுமங்கலி கோலம்
1983 யாமிருக்க பயமேன்
நீதிபதி
சட்டம்
தாய் வீடு
சந்திப்பு
துடிக்கும் கரங்கள்
ஜீத் ஹமாரி
1982 தியாகி
ஊரும் உறவும்
நாயக்கரின் மகள்
தீர்ப்பு
நெஞ்சங்கள்
1981 சத்யம் சுந்தரம்
1980 காளி

1970 களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1979 அழகே உன்னை ஆராதிக்கிறேன்
குப்பத்து ராஜா
வீட்டுக்கு வீடு வாசப்படி
பகலில் ஒரு இரவு
நீயா
கவரி மான்
அடுக்கு மல்லி
1978 சங்கர் சலீம் சியாமன்
ஆயிரம் ஜென்மங்கள்
அல்லிதர்பார்
அவளொரு பச்சைக் குழந்தை
மீனாட்சி குங்குமம்
பைலட் பிரேம்நாத் சிவாஜி கணேசனின் மகன்
சொன்னது நீ தானா
வட்டத்துக்குள் சதுரம்
வருவான் வடிவேலன்
ருத்ர தாண்டவம்
இறைவன் கொடுத்த வரம்
வணக்கத்துக்குரிய காதலியே
என் கேள்விக்கு என்ன பதில்
மாங்குடி மைனர்
1977 ஆறு புஷ்பங்கள்
ரகுபதி ராகவ ராஜாராம்
இன்று போல் என்றும் வாழ்க
இளைய தலைமுறை
1976 துணிவே துணை ஜெய்சங்கரின் சகோதரர்
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
1974 அவள் ஒரு தொடர்கதை
1973 பொண்ணுக்கு தங்க மனசு மறு அறிமுகம்

மாவட்ட ஆட்சியர் வேடம்||(திஞா)

1960 களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1961 ஸ்ரீவள்ளி

தொலைக்காட்சித் தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் கதாபாத்திரம் தொலைக்காட்சி மொழி
2009-2013 தங்கம் ராஜராமச்சந்திர ரகுநாத் ஏலியஸ் ஐயா சன் தொலைக்காட்சி தமிழ்
2013–2014 வம்சம் வெற்றிவேல் அண்ணாச்சி சன் தொலைக்காட்சி தமிழ்
2016-2017 தலம்பிராலு (తలంబ్రాలు) சங்த்யாவின் தாத்தா ஜெமினி தொலைக்காட்சி தெலுங்கு
2017-தற்போது நந்தினி ராஜசேகர் சன் தொலைக்காட்சி தமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-17. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
  2. http://cinema.maalaimalar.com/2013/05/21230519/vijaya-kumar-act-above-400-fil.html
  3. "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". 28 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயகுமார்&oldid=4192270" இலிருந்து மீள்விக்கப்பட்டது