அவள் ஒரு தொடர்கதை
அவள் ஒரு தொடர்கதை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுஜாதா, ஜெய்கணேஷ், கமல்ஹாசன், படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இப்படம் வெற்றியை தொடர்ந்து மேலும் தெலுங்கு, பெங்காலி, இந்தி, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் இத்திரைப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது.
அவள் ஒரு தொடர்கதை | |
---|---|
![]() அவள் ஒரு தொடர்கதை | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ராம அரங்கண்ணன் ஆண்டாள் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சுஜாதா ஜெய்கணேஷ் கமல்ஹாசன் ஸ்ரீபிரியா படாபட் ஜெயலட்சுமி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | நவம்பர் 13, 1974 |
நீளம் | 4554 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்தொகு
வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் தனது குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா நடித்திருந்தார். கமலஹாசன் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.[1]
நடிகர்கள்தொகு
- சுஜாதா - கவிதா
- ஜெய்கணேஷ் - மூர்த்தி
- கமலஹாசன் - விகடகவி கோபால்
- விஜயகுமார் - திலக்[2]
- ஸ்ரீபிரியா - பாரதி
- படாபட் ஜெயலட்சுமி - சந்திரா
- எம் ஜி சோமன் - சந்திரசேகர்
- லீலாவதி - பார்வதி (கவிதாவின் தாயார்)
- ராஜேஷ் - சரவணா
- கோகுல்நாத் - அருண்
- திடீர் கண்ணையா - (பேருந்து நடத்துனர்)
- வினோதினி
- புஷ்பா
- தேவகி
- உமா
பாடல்கள்தொகு
Untitled |
---|
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன், அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ம. சு. விசுவநாதன்.
எண் | தலைப்பு | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|
1. | "அடி என்னடி உலகம்" | எல். ஆர். ஈசுவரி | |
2. | "கடவுள் அமைத்து வைத்த" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3. | "கண்ணில் என்ன" | எஸ். ஜானகி | |
4. | "தெய்வம் தந்தவீடு" | கே. ஜே. யேசுதாஸ் | |
5. | "ஆடுமடி தொட்டில்" | பி. சுசீலா |
மேற்கோள்கள்தொகு
- ↑ "அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் மாலைமலர் நாளிதழ் இணையதளம்". மாலை மலர். பார்த்த நாள் 21 மார்ச் 2016.
- ↑ "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". 29 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html.