சிறீபிரியா

(ஸ்ரீபிரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிறீபிரியா (ஸ்ரீபிரியா) தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார், 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[2] இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.[3]

சிறீ பிரியா
பிறப்புஅலமேலு[1]
5 மார்ச்சு 1956 (1956-03-05) (அகவை 67)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், இயக்குநர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1973–1992
2007-தற்போது வரை
அரசியல் கட்சிமக்கள் நீதி மய்யம்
வாழ்க்கைத்
துணை
ராஜ்குமார் சேதுபதி
(1988-தற்போது வரை)
பிள்ளைகள்சினேகா,
நாகார்ஜூன்

திருமண வாழ்க்கை தொகு

சிறீபிரியா தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளபோதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இராஜ்குமார் என்னும் நடிகரை மணந்தார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூன் என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இரு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார்.[4]

அறிமுகம் தொகு

பி. மாதவன் 1974ஆம் ஆண்டு சிறீ பிரியாவை முருகன் காட்டிய வழி என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.[5] பின்னர் 1974ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர்ரின் அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் நடித்தார். அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்திரத்தை ஏற்று நடித்து சிறீ பிரியா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது முன்னேறி வரும் நடிகராக இருந்த கமல்ஹாசன் அவரிடம் ஒருதலைக் காதல் கொள்பவராக நடித்திருந்தார்.

சிறீ பிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து சிறீ பிரியா நடித்துள்ளார்.

இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது அவள் அப்படித்தான் என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாக சித்தரித்திருந்தார். இப்படத்தின் சிறந்த நடிப்புக்காக தமிழக அரசின் சிறந்த நடிகை விருது பெற்றார்.[6]

முக்கியமான படங்கள் தொகு

தெலுங்கு திரைப்படம்

  • அந்துலேனி கதா
  • சிலகம்மா செப்பந்தி

கன்னட திரைப்படம்

இவற்றில் நீயா மற்றும் நட்சத்திரம் ஆகிய படங்களை இவர் தயாரித்து நடித்திருந்தார்.[7] 'நானே வருவேன்', 'திருஷ்யம்' (தெலுங்கு) போன்ற சில படங்களை இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "350 படங்களில் நடித்து சாதனை படைத்த ஸ்ரீபிரியா". மாலை மலர். 25 செப்டம்பர் 2018. 2 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "80'ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 25 - என் பெயர் இல்லாமல் ரஜினி, கமல் சரித்திரத்தை எழுத முடியாது!". ஆனந்த விகடன். 24 டிசம்பர் 2019. 7 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "சென்னையில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு". (2 மார்ச்சு 2018), புதிய தலைமுறை.
  4. "தி இந்து: தமிழ்நாடு/ சென்னை செய்தி: "I owe what I am today to cinema"". 2007-02-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-29 அன்று பார்க்கப்பட்டது.
  5. "முருகன் காட்டிய வழி - ஸ்ரீபிரியாவின் முதல் படம்". மாலை மலர். 20 சனவரி 2018. 30 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. "கதாநாயகனாக உயர்ந்தபின் ரஜினியின் முதல் கதாநாயகி ஸ்ரீபிரியா". மாலை மலர். 27 செப்டம்பர் 2017. https://cinema.maalaimalar.com/amp/cinema/cinehistory/2018/09/27211610/1194237/cinima-history-sripriya.vpf. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2020. 
  7. "நாகின் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் நீயா". மாலை மலர். 23 சனவரி 2018. https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/01/23222653/1141834/cinima-history-sripriya.vpf. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீபிரியா&oldid=3554436" இருந்து மீள்விக்கப்பட்டது