இளமை ஊஞ்சலாடுகிறது

ஸ்ரீதர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இளமை ஊஞ்சலாடுகிறது (Ilamai Oonjal Aadukiradhu) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

இளமை ஊஞ்சலாடுகிறது
இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்பட ஒலிநாடாவின் அட்டைப்படம்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகண்ணையா,
ஸ்ரீ சித்ரா மஹால்
கதைஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ரஜினிகாந்த்
ஸ்ரீபிரியா
ஜெயசித்ரா
ஒளிப்பதிவுபி. எஸ். நிவாஷ்
படத்தொகுப்புகே. கோபால்ராவ்
வெளியீடுசூன் 9, 1978
நீளம்4084 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படமானது 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் அந்த ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் வென்றது. இத்திரைப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் 'வயசு பிலிசின்டி' மற்றும் இந்தியில் 1982 ஆண்டில் 'தில் இ நடான்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.[2]

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படத்திற்காக இசையமைக்க முதலில் எம். எஸ். விஸ்வநாதன் முடிவு செய்தார் ஸ்ரீதர். பின்னர் மாறுதல் செய்யப்பட்டு இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தில் பி. வாசு மற்றும் சந்தான பாரதி உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.[3]

பாடல்கள்

தொகு

இப்படம் 1978ல் வெளியானது. இளையராஜா இசையமைத்த பாடல்களை எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடியிருந்தனர். பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 ௭ன்னடி மீனாட்சி ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:00
2 ஒரே நாள் உன்னை நான் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் வாலி 4:24
3 கின்னத்தில் தேன்வடித்து ... கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி வாலி 3:54
4 நீ கேட்டால் நான் ... வாணி ஜெயராம் வாலி 4:33
5 தண்ணி கருத்திருச்சு ... மலேசியா வாசுதேவன் வாலி 4:21

மேற்கோள்கள்

தொகு
  1. "தண்ணி கருத்திருச்சு..." தினமலர். 26 டிசம்பர் 2014. Archived from the original on 15 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "மறக்க முடியுமா? இளமை ஊஞ்சலாடுகிறது". தினமலர். 16 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2020.
  3. "இளையராஜா சார் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்துக்கு சம்பளமே வாங்கலை! இயக்குநர் பி.வாசு மனம் திறந்த பேட்டி". இந்து தமிழ். 14 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2020.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமை_ஊஞ்சலாடுகிறது&oldid=3941076" இலிருந்து மீள்விக்கப்பட்டது