பணத்துக்காக
1974 ஆம் ஆண்டு திரைப்படம்
பணத்துக்காக (Panathukkaaga) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். எஸ். செந்தில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, கமல்ஹாசன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]
பணத்துக்காக | |
---|---|
இயக்கம் | எம். எஸ். செந்தில் |
தயாரிப்பு | எம். எஸ். செந்தில் வெற்றி வேல் புரொடக்ஷன்ஸ் |
கதை | என். கோவிந்தன் குட்டி |
திரைக்கதை | ஆரூர்தாஸ் |
வசனம் | ஆரூர்தாஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவகுமார் ஜெயசித்ரா கமல்ஹாசன் ஸ்ரீபிரியா தேங்காய் சீனிவாசன் |
ஒளிப்பதிவு | எம். ஆர். ரவீந்திரன் |
படத்தொகுப்பு | டி. ஆர். நடராஜன் |
நடனம் | கே. தங்கப்பன் |
வெளியீடு | திசம்பர் 6, 1974 |
நீளம் | 3513 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படம் இயக்குனரின் சொந்த மலையாள திரைப்படமான போலீஸ் அரியருத்தே (1973) இன் மறுஉருவாக்கம் ஆகும். கமல்ஹாசன் இப்படத்தின் துணை நடன இயக்குனராக கே. தங்கப்பனிடம் பணியாற்றினார்.[2]
நடிகர்கள்தொகு
- சிவகுமார் - ரமேஷ்
- ஜெயசித்ரா - சித்ரா
- கமல்ஹாசன் - குமார் (சிறப்பு தோற்றம்)
- தேங்காய் சீனிவாசன் - கண்ணன்
- சி. ஐ. டி. சகுந்தலா - கோகிலா
- ஸ்ரீபிரியா - கீதா
- சசிகுமார் - சுந்தர் (காவல் ஆய்வாளர்)[3]
- எஸ். வி. இராமதாஸ் - மாசிலாமணி
- மாஸ்டர் ஸ்ரீதர் - இரவி
பாடல்கள்தொகு
எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
---|---|---|---|---|
1 | "சங்கீதம் எப்போதும் சுகமானது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன் | 4:13 |
2 | "யாருமில்லை இங்கே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 4:15 | |
3 | "மௌனம் இங்கே" | பி. சுசீலா | 4:20 |
மேற்கோள்கள்தொகு
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன். சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ். Archived from the original on 2017-04-05. https://web.archive.org/web/20170405200613/http://www.lakshmansruthi.com/cineprofiles/1974.asp. பார்த்த நாள்: 13 மே 2021.
- ↑ 2.0 2.1 "ஜுபிடர் காசியின் அதிசய அனுபவங்கள்". மாலை மலர். 19 சூன் 2016. 2021-05-13 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "திரைப்படச்சோலை 22: சசிகுமார் வம்சம்". இந்து தமிழ். 12 ஏப்ரல் 2021. 4 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.