ஆரூர்தாஸ்

ஆரூர்தாஸ் (Aaroor Dass, பிறப்பு: செப்டம்பர் 10, 1931), என்பவர் பழைய தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதியவற்றில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் அதிகம். மொத்தம் 500 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.

ஆரூர்தாஸ்
பிறப்புயேசுதாஸ்
10 செப்டம்பர் 1931 (1931-09-10) (அகவை 90)
திருவாரூர், நாகப்பட்டினம்,
சென்னை மாகாணம், இந்தியா
(இன்றைய தமிழ்நாடு)
மற்ற பெயர்கள்ஆரூரான்
பணிகதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்[1]
பெற்றோர்சந்தியாகு
ஆரோக்கியமேரி
வாழ்க்கைத்
துணை
பேபி
பிள்ளைகள்தாரா, உசா, ஆசா
ரவிச்சந்திரன்
விருதுகள்கலைமாமணி விருது
கவிஞர் வாலி விருது (2016)[2]
மக்கள் கவிஞர் விருது

இவரின் சொந்த ஊர் திருவாரூர். அங்கிருந்து தஞ்சை இராமையாதாசிடம் வந்து சேர்ந்து, அவரிடமிருந்து கதை உரையாடல் கலையைக் கற்றுத் தேர்நதார்.[3] தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாசில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக்கொண்டார்.

படித்த பெண் (1956) என்ற படத்தில் என். எல். கானசரஸ்வதி பாடிய ‘வாழ்வில் காணேனே இன்பம்’ என்ற பாடலை இவர் எழுதியுள்ளார்.

வசனம் எழுதிய திரைப்படங்கள்தொகு

இயக்கியத் திரைப்படம்தொகு

சான்றுகள்தொகு

  1. "அவார்டா கொடுக்குறாங்க - ஆரூர் தாஸ் - (Sun TV's) 75 Years of Tamil Cinema". awardakodukkuranga.wordpress. 6 July 2009. 19 May 2019 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "தொடுகறி விக்ரமாதித்யன், ஆரூர் தாஸ் இருவருக்கும் வாலி விருது". தி இந்து. 22 October 2016. 19 May 2019 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. ‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர் பாடலாசிரியர் ஆன கதை, திரூ பாரதி, இந்து தமிழ், 2020 சூன் 5

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரூர்தாஸ்&oldid=3233067" இருந்து மீள்விக்கப்பட்டது