நள தமயந்தி (1959 திரைப்படம்)
நள தமயந்தி (Nala Damayanthi) 1959இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் இப்படத்தை இயக்கி தயாரித்திருந்தார். இப்படத்தில் கெம்பராஜ் பானுமதி ராமகிருஷ்ணா ஆகிய இருவரும் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர்.. இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியில் இதே பெயரில் 1957 இல் வெளியிடப்பட்டது.[1][2]
நள தமயந்தி | |
---|---|
இயக்கம் | கெம்பராஜ் |
தயாரிப்பு | கெம்பராஜ் |
மூலக்கதை | மகா பாரத கதைகள் |
திரைக்கதை | ஆரூர்தாஸ் |
இசை | பி. கோபாலன் |
நடிப்பு | பானுமதி ராமகிருஷ்ணா கெம்பராஜ் சித்தூர் வி. நாகையா ரேலங்கி முக்கமாலா |
ஒளிப்பதிவு | பி. டி. மாத்தூர் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
கலையகம் | கெம்பராஜ் புரடக்ஷன்ஸ் |
விநியோகம் | சித்ரவாணி புரடக்ஷன்ஸ் |
வெளியீடு | 1959 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுமகாபாரதத்தில் வரும் வன பருவத்தில் உள்ள ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது. தமயந்தி விதர்ப்ப நாட்டு இளவரசியாவார். நளன் நிசாத தேசத்தின் அரசனாவார். இவர் சிறந்த சமையல் கலைஞருமாவார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்து, திருமணம் செய்துகொண்டு இரு பிள்ளைகளை வளர்க்கிறார்கள். விரைவில் நளன் பகடைப் போட்டியில் தனது இராச்சியத்தை இழந்ததால் அவர்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பிரிந்து செல்ல நேரிடுகிறது. தமயந்தி தனது இரண்டு குழந்தைகளுடன் தனது தந்தையை வந்தடைகிறாள். நளனை பாம்பு ஒன்று கடித்ததால் அவன் குள்ளமாகி விடுகிறான். தன் கணவனைக் கண்டுபிடிக்க ஒரு போலி சுயம்வரதிற்கு தமயந்தி ஏற்பாடு செய்கிறாள். நளன் தனது குள்ள உருவத்துடனே , அவ்விழாவில் கலந்து கொள்கிறான். தமயந்திக்கு அவனால் தயாரிக்கப்பட்ட உணவை வைத்து நளனை அடையாளம் காண்கிறாள். நளன் தனது முன்னாள் உருவத்தை அடைய அந்த இணை மீண்டும் ஒன்றுபடுகிறது.
நடித்தவர்கள்
தொகு- பானுமதி ராமகிருஷ்ணா - தமயந்தி
- கெம்பராஜ் - நளன்
- சித்தூர் வி. நாகையா - பாதுகன்
- ரேலங்கி - விதூஷகன்
- முக்காமலா - புஷ்கரன்
- ஜெயலட்சுமி - நீலவேணி
- காமேஸ்வரம்மா - கௌரி
- ரமாதேவி - கண்ணம்மா
- சீதா - வண்ணாரலட்சுமி
- லங்காசத்யம் - வண்ணார சின்னான்
- ஸ்ரீவஸ்தா - ருதுபமன்
- வெங்கரா - சுதேவன்
- லஷ்மைய்யா - கலி புருஷன்
படக்குழு
தொகு- வசனங்கள்: ஆரூர்தாஸ்
- பாடல்கள்: பாபநாசம் சிவன், குயிலன், புரட்சிதாசன், எம். சுந்தரன்.
- பின்னணிப் பாடகர்கள்: டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, கே. ராணி, எஸ். ஜானகி, பி. பி. ஸ்ரீனிவாஸ், கோபாலன் சீர்காழி கோவிந்தராஜன்
- இசை: பி. கோபாலன்
- இசைக்குழு: தம்பு பார்ட்டி
- கலை: வர்தூக்கர்
- ஒளிப்பதிவு: பி. டி. மாத்தூர்
- படத்தொகுப்பு: பி. கந்தசாமி
- புகைப்படம்: ஆர். வெங்கடாச்சாரி
- படபிடிப்புத் தளம்: ரேவதி, பரணி
- ஆய்வகம் : விஜயா
- தயாரிப்பு மற்றும் இயக்கம் - கெம்பராஜ்
ஒலித்தொகுப்பு
தொகுஇப்படத்தின் இசை பி. கோபாலம், பாடல்களை பாபநாசம் சிவன், பாபநாசம் சிவன், குயிலன், புரட்சிதாசன், எம். சுந்தரன் போன்றோர் எழுதியிருந்தனர். பானுமதி ராமகிருஷ்ணா. பின்னணிப் பாடகர் டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, கே. ராணி, எஸ். ஜானகி, பி. பி. ஸ்ரீனிவாஸ், பி.கோமளம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடல்களை பாடியிருந்தனர்.
வரிசை எண் | பாடல் | பாடியோர் | எழுதியோர் | நேரம்(m:ss) |
---|---|---|---|---|
1 | "சரசம் செய்யாதே மனமே" | பானுமதி ராமகிருஷ்ணா | புரட்சிதாசன் | 02:53 |
2 | "அன்னமே தேன் பிறையிலே" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | 01:25 | |
3 | "ஜெய் பவானி" | பானுமதி ராமகிருஷ்ணா | 00:55 | |
4 | "இளந்தார் நீராடும் தேன் சுவை" | ஏ. பி. கோமளா | 03:20 | |
5 | "நான் கொண்ட கோயில் எந்த" | பானுமதி ராமகிருஷ்ணா | 03:14 | |
6 | "நின் பாத தாஸி" | பானுமதி ராமகிருஷ்ணா | 03:41 | |
7 | "கருணாபரனே" | பி. கோமளம் | சமுத்ரலா | 01:26 |
8 | "வினைப் பயன் இதுதானா" | பி. கோமளம் | குயிலன் | 02:36 |
9 | "சிங்கார தமயந்தி சீமந்தம்" | ஏ. பி. கோமளா | 03:31 | |
10 | "தீ வினையோ நெஞ்சம் மாறியதோ" | பி. பானுமதி | 03:39 | |
11 | "அம்மா புவியாளும் மாதா" | பி. பானுமதி | 03:37 | |
12 | "வருனாதி தேவனே" | பி. கோமளம் | 02:39 | |
13 | "சீன சியானா சிறிச்சா" | எஸ். ஜானகி | 03:06 | |
14 | "பிரபோ ஏ பிரபோ" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | 02:15 | |
15 | "தப்பி போட்டு தப்பு" | பி. கோமளம், கே. ராணி | எம். சுந்தரம் | 03:34 |
16 | "மலி புகழ் நள சரிதை" | சீர்காழி கோவிந்தராஜன் | பாபநாசம் சிவன் | 02:22 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1959-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" [List of films released in 1959 – Producers]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 27 December 2017. பார்க்கப்பட்ட நாள் 12 January 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "சகலகலா வல்லி பானுமதி (3)". தினமலர். 3 January 2021. Archived from the original on 8 August 2022. பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.
- Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 1 October 2010.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)