கே. ராணி
கே. ராணி தென்னிந்தியப் பின்னணிப் பாடகி
கே. ராணி (K. Rani, 1943 - 13 சூலை 2018)[1] தென்னிந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 500 இற்கும் அதிகமான பாடல்களை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளி, சிங்களம், உசுப்பெக் மொழிகளில் பாடியுள்ளார். ராணி இலங்கையின் "சிறீ லங்கா தாயே" என்ற தேசியப் பண்ணைப் பாடியுள்ளார்.[2]
கே. ராணி | |
---|---|
இயற்பெயர் | கே.ராணி |
பிற பெயர்கள் | இன்னிசை ராணி |
பிறப்பு | 1943 |
இறப்பு | சூலை 13, 2018 கல்யாண் நகர், ஐதராபாது |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 1951–1963 |
இந்திய தேசிய காங்கிரசு தலைவர் காமராசர் இவருக்கு "இன்னிசை ராணி" எனப் பட்டம் சூட்டினார்.[3]
பாடல்கள்
தொகுதமிழ்ப் பாடல்கள்
தொகுபாடல் | படம் | இணைந்து பாடியோர் | பாடலாசிரியர் | இசை |
---|---|---|---|---|
கொண்டாட்டம் கொண்டாட்டம் | போர்ட்டர் கந்தன் | திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன் செல்லமுத்து, மாதவன் |
அ. மருதகாசி | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
கண்ணால் நல்லாப் பாரு | சாரங்கதரா (1958) | பி. பானுமதி, ஏ. பி. கோமளா | அ. மருதகாசி | ஜி. இராமநாதன் |
காந்தம் போலப் பாயும் | நல்லகாலம் (1954) | உடுமலை நாராயணகவி | கே. வி. மகாதேவன் |
இசுலாமியப் பாடல்கள்
தொகுநாகூர் ஈ. எம். ஹனீஃபாவுடன் இணைந்து பாடிய சில இசுலாமியப் பாடல்கள்:
- ஓடுவோம் வாருங்கள்
- தீனோரே நியாயமா மாறலாமா
- வாழ வாழ நல்ல வழிகள் உண்டு
- அருள் மேவும் ஆண்டவனே
மேற்கோள்கள்
தொகு- ↑ "Veteran female singer K Rani passes away". Times of India. 14-07-2018. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/veteran-female-singer-k-rani-passes-away/articleshow/64986121.cms.
- ↑ "Raja Music Bank". 2011.
- ↑ இன்னிசை ராணி காலமானார். தினமலர். 14 சூலை 2018.