விஸ்வநாதன்-ராமமூர்த்தி
விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்பவர்கள் தென்னிந்தியத் திரையுலகின் இணைகளான ம. சு. விசுவநாதன் மற்றும் டி. கே. ராமமூர்த்தி ஆவர். இவர்கள் 1952 லிருந்து ஒன்றாக இணைந்து பணியாற்றத் தொடங்கி 100 க்கும் அதிகமான படங்களில் பணியாற்றினர். 1965ல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு பிரிந்தார்கள். அதன் பிறகு ராமமூர்த்தி 1966 – 1986 வரை 16 திரைப்படங்களில் பணியாற்றினார். இவர்கள் மீண்டும் 30 வருடங்களுக்குப் பிறகு 1995 எங்கிருந்தோ வந்தான் திரைப்படத்தில் இணைந்தார்கள்.
2012ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியின் 14-வது ஆண்டு தொடக்கவிழாவில் முதல்வர் ஜெயலலிதா விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைக்கு 60 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியும், இருவருக்கும் மகிழுந்துகளையும் பரிசாக தந்தார்.[1]
தொடக்க வாழ்க்கை
தொகுராமமூர்த்தி
தொகுடி. கே. ராமமூர்த்தி திருச்சியில் பிரபல இசைக்குடும்பத்தில் பிறந்தார். சிறுவயது முதலே வயலின் வாசிப்பவராக இருந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணசாமி பிள்ளை மற்றும் தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை ஆகியோரும் வயலின் வாசிப்பில் சிறந்தவர்கள். ராமமூர்த்தி சிறுவயதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 1940களில் அவிச்சி மெய்யப்பச் செட்டியார் அவர்களிடம் பணியாற்றினர். பி. எஸ் திவாகர், ஆர் சுதர்சனம் போன்றோரின் நட்புடன் திரையுலகத்தில் வாய்ப்புகளைத் தேடினார். சி. ஆர். சுப்பராமன், டி. ஜி. லிங்கப்பா போன்ற வயலினிஸ்டிடம் பணியாற்றினார்.
விஸ்வநாதன்
தொகுஎம். எஸ். விஸ்வநாதன் நடிகராகவும், பாடகராகவும் ஆசைகொண்டிருந்தார். 1940 களில் மேடை நாடகங்களில் நடித்தார். 1950 களில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கிய டி. ஆர். பாப்பா அவர்கள், இசையமைப்பாளராகுமுன் எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசைக்குழுவில் ஒரு வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவர் எம். எஸ். விஸ்வநாதனை அந்தக் குழுவில் ஒரு எடுபிடி வேலைகள் செய்யும் உதவியாளராக இணைத்து விட்டார். விஸ்வநாதனுக்கு இசையமைப்பதில் ஆர்வம் இருந்தது. அதனால் இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களுடன் சேர்ந்தார். அதன் பின் சி. ஆர். சுப்புராமன் குழுவில் ஆர்மோனியம், பியானோ என்பவற்றை வாசிக்கும் கலைஞராக முன்னேறினார். டி. ஜி. லிங்கப்பா மற்றும் டி. கே. ராமமூர்த்தி ஆகியோரும் இவருடன் இணைந்து பணியாற்றினார்கள்.
எம். எஸ். விஸ்வநாதன் 15 வயதிலேயே மூன்று இசைக்கருவிகளை இசைக்கும் திறனைப் பெற்றிருந்தார். டி. கே. ராமமூர்த்தி 16 வயதிலிருந்து வயலின் இசைக் கலைஞராக இருந்தார்.
இறப்பு
தொகுநோய்வாய்ப்பட்டிருந்த இராமமூர்த்தி 2013 ஏப்ரல் 17 அன்று சென்னை மருத்துவமனையில் காலமானார்.[2][3] அப்போது அவருக்கு 91 வயது.[4]
விஸ்வநாதன் 2015 சூன் 27 அன்று சென்னை மருத்துவமனையில் சுவாசப் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டார்.[5] 2015 சூலை 14 அன்று மருத்துவமனையில் காலமானார்.[6]
திரைவாழ்க்கை
தொகுஆண்டு | படம் | மொழி | இயக்குனர் | தயாரிப்பு | குறிப்பு |
---|---|---|---|---|---|
1952 | பணம் | தமிழ் | என். எஸ். கிருஷ்ணன் | மதிர் பிச்சர்ஸ் | |
1953 | சண்டிராணி | தமிழ் | பானுமதி ராமகிருஷ்ணா | பரணி கலையகம் | சி. ஆர். சுப்பராமன் |
1953 | சண்டிராணி | தெலுங்கு | பானுமதி ராமகிருஷ்ணா | பரணி கலையகம் | சி. ஆர். சுப்பராமன் |
1953 | சண்டிராணி | ஹிந்தி | பானுமதி ராமகிருஷ்ணா | பரணி கலையகம் | சி. ஆர். சுப்பராமன் |
1953 | மறுமகள் | தமிழ் | டி. யோகானந்த் | கிருஷ்ணா பிச்சர்ஸ் | இணை இசை இயக்குநர் ஜி. ராமநாதன் & சி. ஆர். சுப்பராமன் |
1954 | சொர்க்கவாசல் | தமிழ் | ஏ. காளிங்கம் | பரிமளம்பிச்சர்ஸ் | |
1954 | சொர்க்கவாசல் | தெலுங்கு | ஏ. காசிலிங்கம் | பரிமளம் பிச்சர்ஸ் | |
1954 | சுகம் எங்கே | தமிழ் | கே. ரமனோத் | மாடர்ன் தியேட்டர்ஸ் | |
1954 | வைரமாலை | தமிழ் | என். ஜெகன்நாத் | வைத்தியா திரைப்படங்கள் | |
1954 | ரத்தக்கண்ணீர் | தமிழ் | கிருஷ்ணம்-பஞ்சு | நேசனல் திரைப்படங்கள் | பின்னணி இசை |
1955 | குலேபகாவலி | தமிழ் | டி. ஆர். ராமண்ணா | ஆர்ஆர் பிச்சர்ஸ் | இணை இசை இயக்குநர் கே. வி. மகாதேவன் |
1955 | காவேரி | தமிழ் | டி. யோகானந்த் | கிருஷ்ணா பிச்சர்ஸ் | இணை இசை இயக்குநர் ஜி. ராமநாதன் |
1955 | விஜயா கௌரி | தெலுங்கு | டி. யோகானந்த் | கிருஷ்ணா பிச்சர்ஸ் | இணை இசை இயக்குநர் ஜி. ராமநாதன் |
1955 | நீதிபதி | தமிழ் | ஏ. எஸ். ஏ. சாமி | விஜயா திரைப்படங்கள் | |
1955 | சந்தோசம் | தெலுங்கு | ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் | ||
1955 | போர்டர் கந்தன் | தமிழ் | கே. வீம்பு | நரசு ஸ்டூடியோஸ் | |
1956 | ஜெய கோபி | தமிழ் | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1956 | மா கோபி | தெலுங்கு | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1956 | பாசவலை | தமிழ் | ஏ. எஸ். நாகராஜன் | மாடர்ன் தியேட்டர்ஸ் | |
1956 | தெனாலி ராமகிருஷ்ணா | தெலுங்கு | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1956 | தெனாலி ராமன் | தமிழ் | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1957 | பக்த மார்க்கன்டேயா | தமிழ் | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1957 | பக்த மார்க்கன்டேயா | தெலுங்கு | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1957 | பக்த மார்க்கன்டேயா | கன்னடம் | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1957 | மகாதேவி | தமிழ் | சுந்தர் ராவ் நட்கர்னி | சிறீ கணேஷ் மூவிடோன் | |
1957 | பத்தினி தெய்வம் | தமிழ் | சித்ரப்பு நாராயண ராவ் | விஆர்வி புரொடக்சன்ஸ் | |
1957 | புதையல் | தமிழ் | கிருஷ்ணன்-பஞ்சு | கமல் பிரதர்ஸ் | |
1958 | குடும்ப கௌரவம் | தமிழ் | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1958 | குடும்ப கௌரவம் | தெலுங்கு | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1958 | மாலையிட்ட மங்கை | தமிழ் | ஜி. ஆர். நாதன் | கண்ணதாசன் திரைப்படங்கள் | |
1958 | மகாதேவி | தெலுங்கு | சுந்தர் ராவ் நட்கர்ணி | சிறீ கணேஷ் மூவிடோன் | |
1958 | பதி பக்தி (1958 திரைப்படம்) | தமிழ் | ஏ. பீம்சிங் | புத்தா பிச்சர்ஸ் | |
1958 | பதி பக்தி (1958 திரைப்படம்) | தெலுங்கு | ஏ. பீம்சிங் | புத்தா பிச்சர்ஸ் | இணை இசை இயக்குநர் [[
டி. செலபதி ராவ்]] |
1958 | பெற்ற மகனை விற்ற அன்னை | தமிழ் | திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் | மாடர்ன் தியேட்டர்ஸ் | |
1958 | லில்லி | மலையாளம் | எப். நாகூர் | ஹடி பிச்சர்ஸ் | |
1959 | அமுத வள்ளி | தமிழ் | ஏ. கே. சேகர் | ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் | |
1959 | பாகப்பிரிவினை (திரைப்படம்) | தமிழ் | ஏ. பீம்சிங் | சரவணா திரைப்படங்கள் | |
1959 | ராஜா மலைய சிம்மன் | தமிழ் | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1959 | ராஜ மலைய சிம்ஹா | தெலுங்கு | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1959 | சிவகெங்கைச் சீமை (திரைப்படம்) | தமிழ் | கே. சங்கர் | கண்ணதாசன் திரைப்படங்கள் | |
1959 | தாலி கொடுத்தான் தம்பி | தமிழ் | திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் | மாடர்ன் தியேட்டர்ஸ் | |
1959 | தங்கப்பதுமை | தமிழ் | ஏ. எஸ். ஏ. சாமி | ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் | |
1960 | ஆளுக்கொரு வீடு | தமிழ் | எம். கிருஷ்ணன் | சுபா மூவிஸ் | |
1960 | கவலை இல்லாத மனிதன் | தமிழ் | கே. சங்கர் | கன்னடசன் புரொடக்சன்ஸ் | |
1960 | மன்னாதி மன்னன் | தமிழ் | எம். நடேசன் | நடேஷ் ஆர்ட் பிச்சர்ஸ் | |
1960 | ஒன்று பட்டால் உண்டு வாழ்வு | தமிழ் | டி. ஆர். ராமண்ணா | ரங்கா பிச்சர்ஸ் | |
1960 | ரத்தினபுரி இளவரசி | தமிழ் | டி. ஆர். ராமண்ணா | சிறீ விநாயகா பிச்சர்ஸ் | |
1961 | பாக்கிய லட்சுமி | தமிழ் | கே. வி. சீனிவாசன் | கனகா திரைப்படங்கள் | |
1961 | மணப்பந்தல் | தமிழ் | டி. ஆர். ராமண்ணா | ஆர்ஆர் பிச்சர்ஸ் | |
1961 | பாலும் பழமும் | தமிழ் | ஏ. பீம்சிங் | சரவணா திரைப்படங்கள் | |
1961 | பாசமலர் | தமிழ் | ஏ. பீம்சிங் | ராஜமணி திரைப்படங்கள் | |
1961 | பாவமன்னிப்பு (திரைப்படம்) | தமிழ் | ஏ. பீம்சிங் | புத்தா பிச்சர்ஸ் | |
1961 | விஜயேந்திர வீரபத்ரா | கன்னடம் | ஆர். நாகேந்திர ராவ் | ஆர்என்ஆர் பிச்சர்ஸ் | |
1962 | ஆலயமணி (திரைப்படம்) | தமிழ் | கே. சங்கர் | பிஎஸ்வி பிச்சர்ஸ் | |
1962 | பலே பாண்டியா | தமிழ் | பி. ஆர். பந்துலு | பத்மினி பிச்சர்ஸ் | |
1962 | பந்த பாசம் | தமிழ் | ஏ. பீம்சிங் | சாந்தி திரைப்படங்கள் | |
1962 | காத்திருந்த கண்கள் | தமிழ் | தத்தினேனி பிரகாஷ் ராவ் | வசுமதி பிச்சர்ஸ் | |
1962 | நெஞ்சில் ஓர் ஆலயம் | தமிழ் | ஸ்ரீதர் (இயக்குநர்) | சித்ராலயா | |
1962 | நிச்சய தாம்பூலம் | தமிழ் | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1962 | பெல்லி தாம்பூலம் | தெலுங்கு | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1962 | பாத காணிக்கை | தமிழ் | கே. சங்கர் | சரவணா திரைப்படங்கள் | |
1962 | படித்தால் மட்டும் போதுமா | தமிழ் | ஏ. பீம்சிங் | ரங்கநாதன் பிச்சர்ஸ் | |
1962 | பார்த்தால் பசி தீரும் | தமிழ் | ஏ. பீம்சிங் | ஏவிஎம் | |
1962 | பாசம் (திரைப்படம்) | தமிழ் | டி. ஆர். ராமண்ணா | ஆர்ஆர் பிச்சர்ஸ் | |
1962 | போலீஸ்காரன் மகள் | தமிழ் | ஸ்ரீதர் (இயக்குநர்) | சித்திரலேகா பிச்சர்ஸ் | |
1962 | செந்தாமரை | தமிழ் | ஏ. பீம்சிங் | ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ் | |
1962 | சுமைதாங்கி (திரைப்படம்) | தமிழ் | ஸ்ரீதர் (இயக்குநர்) | விசாலாட்சி புரொடக்சன்ஸ் | |
1962 | தென்றல் வீசும் | தமிழ் | பி. எஸ். ரங்கா | விக்ரம் புரொடக்சன்ஸ் | |
1962 | வீரத்திருமகன் | தமிழ் | ஏ. சி. திருலோகச்சந்தர் | முருகன் பிரதர்ஸ் | |
1963 | ஆனந்த ஜோதி | தமிழ் | வி. என். ரெட்டி & ஏ. எஸ். ஏ. சாமி | பிஎஸ்வி பிச்சர்ஸ் | |
1963 | இதயத்தில் நீ | தமிழ் | முக்தா சீனிவாசன் | முக்தா திரைப்படங்கள் | |
1963 | இது சத்தியம் | தமிழ் | கே. சங்கர் | சரவணா திரைப்படங்கள் | |
1963 | கற்பகம் (திரைப்படம்) | தமிழ் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | அமர்ஜோதி மூவிஸ் | |
1963 | மணி ஓசை | தமிழ் | பி. மாதவன் | ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ் | |
1963 | நெஞ்சம் மறப்பதில்லை | தமிழ் | ஸ்ரீதர் (இயக்குநர்) | மனோகர் பிச்சர்ஸ் | |
1963 | பார் மகளே பார் | தமிழ் | ஏ. பீம்சிங் | கஸ்தூரி திரைப்படங்கள் | |
1963 | பணத்தோட்டம் | தமிழ் | கே. சங்கர் | சரவணா திரைப்படங்கள் | |
1963 | பெரிய இடத்துப் பெண் | தமிழ் | டி. ஆர். ராமண்ணா | ஆர்ஆர் பிச்சர்ஸ் | |
1963 | மான்சி சேது | தெலுங்கு | டி. ஆர். ரமணா | ஆர்ஆர் பிச்சர்ஸ் | |
1964 | ஆண்டவன் கட்டளை | தமிழ் | கே. சங்கர் | பிஎஸ்வி பிச்சர்ஸ் | |
1964 | தெய்வத் தாய் | தமிழ் | பி. மாதவன் | சத்யா மூவிஸ் | |
1964 | என் கடமை | தமிழ் | எம். நடேசன் | நடேஷ் ஆர்ட் பிச்சர்ஸ் | |
1964 | கை கொடுத்த தெய்வம் | தமிழ் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | சிறீ பொன்னி புரொடக்சன்ஸ் | |
1964 | கலை கோவில் | தமிழ் | ஸ்ரீதர் (இயக்குநர்) | பாக்கியலட்சுமி பிச்சர்ஸ் | |
1964 | கர்ணன் | தமிழ் | பி. ஆர். பந்துலு | பத்மினி பிச்சர்ஸ் | |
1964 | கருப்பு பணம் | தமிழ் | ஜி. ஆர். நாதன் | விசாலாட்சி திரைப்படங்கள் | |
1964 | காதலிக்க நேரமில்லை | தமிழ் | ஸ்ரீதர் (இயக்குநர்) | சித்ராலயா | |
1964 | பச்சை விளக்கு | தமிழ் | ஏ. பீம்சிங் | வேல் பிச்சர்ஸ் | |
1964 | படகோட்டி (திரைப்படம்) | தமிழ் | தத்தினேனி பிரகாஷ் ராவ் | சரவணா திரைப்படங்கள் | |
1964 | பணக்கார குடும்பம் | தமிழ் | டி. ஆர். ராமண்ணா | ஆர்ஆர் பிச்சர்ஸ் | |
1964 | புதிய பறவை | தமிழ் | தாதா மிரசி | சிவாஜி புரொடக்சன்சு | |
1964 | சர்வர் சுந்தரம் | தமிழ் | கிருஷ்ணம்-பஞ்சு | ஏவிஎம் | |
1964 | வாழ்க்கை வாழ்வதற்கே | தமிழ் | கிருஷ்ணம்-பஞ்சு | கமல் பிரதர்ஸ் | |
1965 | பஞ்சவர்ண கிளி | தமிழ் | கே. சங்கர் | சரவணா திரைப்படங்கள் | |
1965 | எங்க வீட்டுப் பிள்ளை | தமிழ் | சாணக்யா | விஜயா புரொடக்சன்ஸ் | |
1965 | ஹலோ மிஸ்டர் ஜெமிந்தார் | தமிழ் | கே. ஜெ. மகாதேவன் | சுதர்சனம் பிச்சர்ஸ் | |
1965 | பணம் படைத்தவன் | தமிழ் | டி. ஆர். ராமண்ணா | ஆர்ஆர் பிச்சர்ஸ் | |
1965 | பழநி | தமிழ் | ஏ. பீம்சிங் | பாரத மாதா பிச்சர்ஸ் | |
1965 | பூஜைக்கு வந்த மலர் | தமிழ் | முக்தா சீனிவாசன் | முக்தா திரைப்படங்கள் | |
1965 | சாந்தி | தமிழ் | ஏ. பீம்சிங் | ஏஎல்எஸ் புரோடக்சன்ஸ் | |
1965 | வாழ்க்கை படகு | தமிழ் | சுப்பிரமணியம் சீனிவாசன் | ஜெமினி ஸ்டூடியோஸ் | |
1965 | வெண்ணிற ஆடை | தமிழ் | ஸ்ரீதர் (இயக்குநர்) | சித்ராலயா | |
1965 | ஆயிரத்தில் ஒருவன் | தமிழ் | பி. ஆர். பந்துலு | பத்மினி பிச்சர்ஸ் | |
1995 | எங்கிருந்தோ வந்தான் | தமிழ் | சந்தான பாரதி | விஎஸ்ஆர் பிச்சர்ஸ் |
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://www.dinamani.com/cinema/article1258273.ece இசையின் பொற்காலம் - தினகரன் 30 ஆகஸ்ட் 2012
- ↑ "TK Ramamurthy, noted music composer, passes away – The Times of India". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130426125705/http://articles.timesofindia.indiatimes.com/2013-04-17/chennai/38615223_1_j-jayalalithaa-jaya-tv-composer.
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-music-composer-ms-viswanathan-dead/article7420180.ece
- ↑ "TK Ramamurthy, noted music composer, passes away - Times Of India". web.archive.org. 2013-04-26. Archived from the original on 2013-04-26. பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.
- ↑ "M S Viswanathan Death". Telangana News Paper.
- ↑ "King of Film Music MS Viswanathan Passes Away". The New Indian Express.