கற்பகம் (திரைப்படம்)
1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கற்பகம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது[1].
- இத்திரைப்படத்தின் மூலம் கே. ஆர். விஜயா தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
கற்பகம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். சபரிநாத் அமர் ஜோதி மூவீஸ் |
இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா சாவித்திரி முத்துராமன் எம். ஆர். ராதா எஸ். வி. ரங்கராவ் |
வெளியீடு | நவம்பர் 15, 1963 |
நீளம் | 4567 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆவார்கள். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார். ஒலிப்பதிவில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் ஒரே பின்னணி பாடகி பி. சுசீலா பாடினார். "அத்தை மடி மெத்தையடி" மற்றும் "மன்னவனே அழலாமா கண்ணீரை" பாடல்கள் புகழ் பெற்றன.
மேற்கோள்கள் தொகு
- ↑ "11th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. http://iffi.nic.in/Dff2011/Frm11thNFAAward.aspx. பார்த்த நாள்: September 13, 2011.