சாவித்திரி (நடிகை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாவித்திரி கணேஷ் (Savithri Ganesh, தெலுங்கு: సావిత్రి కొమ్మారెడ్డి; டிசம்பர் 6, 1936 – டிசம்பர் 26, 1981), புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.
சாவித்திரி సావిత్రి | |
---|---|
![]() 1951 இல் சாவித்திரி | |
பிறப்பு | சரசவாணிதேவி ரெட்டி திசம்பர் 6, 1936 சிரவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா ![]() |
இறப்பு | திசம்பர் 26, 1981 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 46)
மற்ற பெயர்கள் | நடிகையர் திலகம் மகா நடிகை |
வாழ்க்கைத் துணை | ஜெமினி கணேசன் (1955-1981) |
பிள்ளைகள் | மகள்:விஜயசாமுண்டீஸ்வரி மகன்:சதீஷ்கிருஷ்ணா |
வாழ்க்கைச் சுருக்கம் தொகு
சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திாியின் இயற்பெயர் சரசவாணிதேவி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்[1]. 1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் செமினி கணேசனை மணந்தார்.
இறப்பு தொகு
19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 திசம்பர் 26-ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. அப்போது அவருக்கு நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் இருந்தன. இந்திய அரசு அவரது நினைவாக 2011-ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள் தொகு
1951 – 1960 தொகு
- கல்யாணம் பண்ணிப்பார் (1952)
- தேவதாஸ் (1953)
- வஞ்சம் (1953)
- பரோபகாரம் (1953)
- மனம்போல் மாங்கல்யம் (1953)
- சுகம் எங்கே (1954)
- செல்லப்பிள்ளை (1955)
- குணசுந்தரி (1955)
- மாமன் மகள் (1955)
- மகேஸ்வரி (1955)
- மிஸ்ஸியம்மா (1955)
- மாதர் குல மாணிக்கம் (1956)
- அமரதீபம் (1956)
- பெண்ணின் பெருமை (1956)
- யார் பையன் (1957)
- மாயா பஜார் (1957)
- மகாதேவி (1957)
- இரு சகோதரிகள் (1957)
- எங்கள் வீட்டு மகாலட்சுமி (1957)
- கற்புக்கரசி (1957)
- சௌபாக்கியவதி (1957)
- வணங்காமுடி (1957)
- காத்தவராயன் (1958)
- கடன் வாங்கி கல்யாணம் (1958)
- அன்னையின் ஆணை (1958)
- திருமணம் (1958)
- பதி பக்தி (1958)
- பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)
- களத்தூர் கண்ணம்மா (1960)
- குறவஞ்சி (1960)
- பாட்டாளியின் வெற்றி (1960)
- புதிய பாதை (1960)
1961 – 1970 தொகு
- எல்லாம் உனக்காக (1961)
- பாசமலர் (1961)
- பாவ மன்னிப்பு (1961)
- பாத காணிக்கை (1962)
- பார்த்தால் பசி தீரும் (1962)
- காத்திருந்த கண்கள் (1962)
- கொஞ்சும் சலங்கை (1962)
- படித்தால் மட்டும் போதுமா (1962)
- பந்த பாசம் (1962)
- வடிவுக்கு வளைகாப்பு (1962)
- பரிசு (1963)
- கற்பகம் (1963)
- இரத்தத் திலகம் (1963)
- நவராத்திரி (1964)
- ஆயிரம் ரூபாய் (1964)
- கை கொடுத்த தெய்வம் (1964)
- கர்ணன் (1964)
- வேட்டைக்காரன் (1964)
- திருவிளையாடல் (1965)
- ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965)
- அண்ணாவின் ஆசை (1966)
- தட்டுங்கள் திறக்கப்படும் (1966)
- கந்தன் கருணை (1967)
- திருடாத திருடன் (1970)
1971 – 1980 தொகு
விருதுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ http://www.savithri.info பரணிடப்பட்டது 2020-10-21 at the வந்தவழி இயந்திரம் Savithri's Profile
வெளி இணைப்புகள் தொகு
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சாவித்திரி (நடிகை)
- Savithri's profile Upperstall.com இல்
- Savithri's Official Website பரணிடப்பட்டது 2012-07-06 at the வந்தவழி இயந்திரம்
- Savithri's Profile பரணிடப்பட்டது 2020-10-21 at the வந்தவழி இயந்திரம்
- சாவித்ரி தகவல்கள்