திருவிளையாடல் (திரைப்படம்)
திருவிளையாடல் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர் வேடத்தில் தோன்றினார். இத்திரைப்படம் திருவிளையாடல் புராணம் எனும் புகழ் பெற்ற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.[2]
திருவிளையாடல் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஏ. பி. நாகராஜன் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சாவித்திரி நாகேஷ் |
வெளியீடு | சூலை 31, 1965[1] |
நீளம் | 4450 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுதிருவிளையாடல் புராணத்தில் மொத்தமுள்ள 64 தொகுப்புகளில் 4 தொகுதிகளை மட்டும் தொகுத்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் - இறைவன் சிவபெருமானாக
- சாவித்திரி - பார்வதி/சக்தி/கயற்கண்ணி/தாட்சாயணி
- ஆர். முத்துராமன் - மதுராபுாி (மதுரை) அரசர் செண்பக பாண்டியன்
- நாகேஷ் - தருமி
- தேவிகா - அரசர் செண்பக பாண்டியனின் மனைவி
- மனோரமா - கயற்கண்ணியின் தோழியாக
- கே. பி. சுந்தராமபாள் - ஔவையார்
- டி. எஸ். பாலையா - ஹேமநாத பாகவதர்
- டி. ஆர். மகாலிங்கம் - பான பத்தர்
- ஏ. பி. நாகராஜன் - நக்கீரராக
பாடல்கள்
தொகுபத்து பாடல்கள் இடம்பெற்ற இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் ஆவார். கவியரசு கண்ணதாசன் எழுதிய இத்திரைப்படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாதவை.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியவர்கள் | நீளம் | |||||||
1. | "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா" | கே. பி. சுந்தராம்பாள் | ||||||||
2. | "இன்றொறு நாள் போதுமா" | எம். பாலமுரளிகிருஷ்ணா | ||||||||
3. | "இசைத்தமிழ் நீ செய்த" | டி. ஆர். மகாலிங்கம் | ||||||||
4. | "பார்த்தால் பசுமரம்" | டி. எம். சௌந்தரராஜன் | ||||||||
5. | "பாட்டும் நானே" | டி. எம். சௌந்தரராஜன் | ||||||||
6. | "பொதிகை மலை உச்சியிலே" | பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி | ||||||||
7. | "ஒன்றானவன் உருவில்" | கே. பி. சுந்தராம்பாள் | ||||||||
8. | "இல்லாத தொன்றில்லை" | டி. ஆர். மகாலிங்கம் | ||||||||
9. | "வாசி வாசி" | கே. பி. சுந்தராம்பாள் | ||||||||
10. | "ஓம் நமசிவாய" | சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா |
வெளியீடு
தொகுசிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும்.[4] இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்களான ஆர். முத்துராமன், நாகேஷ், டி. எஸ். பாலையா, டி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் கொஞ்ச நேரமே திரையில் தோன்றினாலும் அவர்களது கதாபாத்திரங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. சினிமா சாட் தனது விமர்சனத்தில் இத்திரைப்படத்திற்கு 5நட்சத்திரங்கள் கொடுத்தது. மேலும் இத்திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத்தூண்டும் திரைப்படம் எனப் பாராட்டியது."[5] தி இந்து பத்திரிக்கைக்கு இயக்குநர் அமீர் அளித்த பேட்டியில் திருவிளையாடல் பக்தித் திரைப்படமாக இருந்தாலும், இதன் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் இத்திரைப்படத்தை ரசிக்கும்படியாக அமைத்திருப்பார். இதுவரை தமிழில் வெளிவந்துள்ள சிறந்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும் என பாராட்டுகிறார்.[6]
வசூல் சாதனை
தொகு1965-ம் ஆண்டில் வெளியானத் இத்திரைப்படம் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது.[7] நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சென்னை சாந்தி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்த இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும்.[8][9]
விருதுகள்
தொகுஇத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது. 1965 வது ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுள் இத்திரைப்படத்திற்கு மூன்றாவது இடமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thiruvilayadal – Movie Reviews, Videos, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis on". Oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
- ↑ "Thiruvilayadal – 64 Sacred sports of Shiva – Part 1 | கற்க... நிற்க ..." Karkanirka.org. பார்க்கப்பட்ட நாள் 17 April 2012.
- ↑ "Thiruvilayadal Songs – Thiruvilayadal Tamil Movie Songs – Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
- ↑ http://iffi.nic.in/Dff2011/40th_nff/40th_nff_1993_img_88.jpg
- ↑ Thiruvilayadal | Cinema Chaat. Cinemachaat.wordpress.com (15 January 2012).
- ↑ Friday Review Chennai : Filmmakers' favourites பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம். The Hindu.
- ↑ "Paattum Naane Bhavamum Naane – Thiruvilayadal – Sivaji Ganesan & T.S. Baliah". YouTube. 1 February 2010. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
- ↑ Mohan Raman (17 January 2011). "Life & Style / Society : Movie hall crosses a milestone". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 17 April 2012.
- ↑ Chennai Shanthi theatre. Chennaispider.com.
நூல் பட்டியல்
தொகு- David, C. R. W. (1983). Cinema as Medium of Communication in Tamil Nadu. Christian Literature Society.
- Ganesan, Sivaji; Narayana Swamy, T. S. (2007) [2002]. Autobiography of an Actor: Sivaji Ganesan, October 1928 – July 2001. Sivaji Prabhu Charities Trust. இணையக் கணினி நூலக மைய எண் 297212002.
- Guy, Randor (1997). Starlight, Starbright: The Early Tamil Cinema. Amra Publishers. இணையக் கணினி நூலக மைய எண் 1129588233.
- Nagarajan, A. P. (1965). Thiruvilayadal (motion picture). India: Sri Vijayalakshmi Pictures.
- Panikkar, K. N. (2002). Culture, Ideology, Hegemony: Intellectuals and Social Consciousness in Colonial India. Anthem Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-039-6.
- Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
- Rajya V. R., Rashmi (2014). "Narrative Strategies and Communication of Values in Tamil Epic Tradition Films of A. P. Nagarajan" (PDF). University of Madras.
- Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Chennai: Pichhamal Chintamani. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
- Thiagarajan, K. (1965). Meenakshi Temple, Madurai. Meenakshi Sundareswarar Temple Renovation Committee.