தேவிகா (25 ஏப்ரல் 1943 – 2 மே 2002) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.

தேவிகா
பிறப்புபிரமீளா தேவி
ஏப்ரல் 25, 1943(1943-04-25)
சென்னை
இறப்பு2 மே 2002(2002-05-02) (அகவை 59)
சென்னை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1954–1986
வாழ்க்கைத்
துணை
தேவதாஸ் (தி. 1972-1990)
(மணமுறிவு)
பிள்ளைகள்கனகா (பி. 1973)

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார். தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார். தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட அனுபவம்தொகு

தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், குலமகள் ராதை, பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த சுமைதாங்கி ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு, வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். தேவிகா நடித்த கடைசிப்படம் இப்படியும் ஒரு பெண் ஆகும்.

திரைப்படங்கள்தொகு

தமிழ்தொகு

தெலுங்குதொகு

  • நாட்டியதாரா

மேற்கோள்கள்தொகு

  • "Blend of grace and charm". தி இந்து. 10 மே 2002. 21 ஜூன் 2002 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  • "Devika Biography". India Movies Database. 18 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிகா&oldid=3587279" இருந்து மீள்விக்கப்பட்டது