பங்காளிகள் (திரைப்படம்)

பங்காளிகள் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். டி. கண்மணி, சி. கே. கண்ணன், பி. ரங்கசாமி ரெட்டியார் ஆகியோர் கூட்டாகத் தயாரித்துள்ள இப் படத்தை ஜி. ராமகிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும், அஞ்சலிதேவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவிகா, ஈ. வி. சரோஜா, எம். ஆர். ராதா, எஸ். வி. ரங்கராவ், கே. மாலதி, பி. எஸ். ஞானம், தேவகி, கே. சாரங்கபாணி, கே. சாயிராம், பாலு, "நாஞ்சி"சேட், டி. எஸ். துரைராஜ், டி. எஸ். முத்தையா, "கரிக்கோல்" ராஜ், "சாண்டோ" கிருஷ்ணன், ஏ. கே. குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]

எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைக்க, பாடல்களைக் கண்ணதாசன், அ. மருதகாசி, கு. ம. கிருஷ்ணன் ஆகியோர் இயற்றியுள்ளனர். இப் படத்துக்கான கதை வசனத்தை எம்.எஸ்.சோலைமலை எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. கை, ராண்டார் (2013-06-22). "Pangaaligal (1961)". தி இந்து (ஆங்கிலம்). 2013-09-10 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2017-12-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 31.