களத்தூர் கண்ணம்மா

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1960இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

களத்தூர் கண்ணம்மா (Kalathur Kannamma) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, டி. எஸ். பாலையா போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். தகாத சூழ்நிலைகளினால் பிரிந்து போகும் இளவயதுத் தம்பதிகளையும், அவர்களுக்குப் பிறக்கும் அப்பாவி மகனையும் அவன் அநாதை இல்லத்தில் வளர்வதைப் பற்றியும் இப்படம் தத்ரூபமாக எடுத்தியம்புகின்றது.

களத்தூர் கண்ணம்மா
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
(ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்)
ஏ. வீரப்பன்
எம். குமரன்
கதைஜாவர் சீதாராமன்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுடி. முத்துராஜ்
படத்தொகுப்புஎஸ். சூர்யா
கலையகம்ஏவிஎம்
வெளியீடுஆகத்து 12, 1960 (1960-08-12)
ஓட்டம்176 நிமிடங்கள்
நீளம்17570 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கண்டது. அத்துடன் மட்டுமன்றி 1960 ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது 3 ஆம் பரிசு பெற்றது மற்றும் கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருது பெற்றார்.

இப்படம் தெலுங்கு, ஹிந்தி மற்றும் சிங்கள மொழியில் மீண்டும் எடுக்கப்பட்டது.

நடிப்புதொகு

தயாரிப்புதொகு

களத்தூர் கண்ணம்மா ஏவிஎம் நிறுவனம் சார்பில் ஏ. வி. மெய்யப்பன் தயாரித்தார். இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஜாவர் சீதாராமன் எழுதினார்.[1] இப்படத்தை முதலில் இயக்கியவர் பிரகாஷ் ராவ், ஆனால் படத்தை முடித்தது பீம்சிங். திருப்தியாக வராத காட்சியை ஏ.வி.எம் செட்டியார் திரும்பவும் எடுக்கச் சொன்னபோது பிரகாஷ் ராவ், 'படமாக்கி முடித்த காட்சியை மீண்டும் படமாக்குவதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை, பாதி படத்திலேயே இப்படி சொன்னால், மீதமுள்ள காட்சிகளில் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, அதனால் இந்தப் படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன், நீங்கள் வேறு யாரை வேண்டுமானாலும் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்' என்று தன் எண்ணத்தை செட்டியாரிடம் தெரிவித்தார். செட்டியாரும் 'இனி அவர் எப்படி எடுத்தாலும் அது நமக்கு விருப்பமில்லாத மாதிரியே தெரியும், அவர் விருப்பப்படியே விட்டுவிடலாம்' என்று அவர் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டார். இருவரும் உட்கார்ந்து பேசி சுமூகமாக தீர்த்துக்கொண்டனர்.[2]

இப்படத்தில் ஒளிப்பதிவு டி.முத்துசாமி, எடிட்டிங் எஸ்.சூர்யா, கலை எச்.சாந்தாராம் மற்றும் நடனம் கே.என்.தண்டாயுதபாணிபிள்ளை ஆகியோர் பணியாற்றினர்.[3] எஸ். பி. முத்துராமன் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.[1]

ஏ.வி.எம் குடும்ப மருத்துவர் சாரா ராமச்சந்திரன் மூலம் 4 வயது கமல்ஹாசன் ஏ.வி.மெய்யப்பனிடம் அவரது வீட்டில் அறிமுகமானார். கமல் பலவிதமாக வசனம் பேசி ஆடிப் பாடி நடித்துக் காட்டினார். அந்தப் பையனின் நடிப்பு பிடித்துப்போக, ஏற்கனவே சிறுவன் பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட டெய்சி ராணி என்ற குழந்தைக்கு பதில் கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

பாடல்கள்தொகு

ஆர். சுதர்சனம் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல்வரிகள் கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கு. மா. பாலசுப்பிரமணியம், எம். கே. ஆத்மநாதன் மற்றும் டி. கே. சுந்தர வாத்தியார் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.[5]

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 கண்களின் வார்த்தைகள் ... ஏ. எம். ராஜா, பி. சுசீலா கண்ணதாசன் 3:33
2 சிரித்தாலும் ... சி. எஸ். ஜெயராமன் கண்ணதாசன் 3:30
3 ஆடாத மணமும் ... ஏ. எம். ராஜா, பி. சுசீலா கு. மா. பாலசுப்பிரமணியம் 3:19
4 அருகில் வந்தால் ... ஏ. எம். ராஜா கண்ணதாசன் 3:23
5 அம்மாவும் நீயே ... எம். எஸ். இராஜேஸ்வரி டி. கே. சுந்தர வாத்தியார் 2:47
6 உன்னைகண்டு மயங்காத ... எஸ். சி. கிருஷ்ணன், டி. எம். சௌந்தராஜன், எம். எஸ். இராஜேஸ்வரி, ஏ. பி. கோமளா கொத்தமங்கலம் சுப்பு 6:58
7 மலர்களில் மது எதற்கு ... ஜிக்கி எம். கே. ஆத்மநாதன் 2:93
8 அம்மாவும் நீயே ... எம். எஸ். இராஜேஸ்வரி டி. கே. சுந்தர வாத்தியார் 1:26

வெளியீடுதொகு

களத்தூர் கண்ணம்மா ஆகஸ்ட் 12, 1960 ஆண்டில் வெளியாகி 100 நாட்கள் மேல் ஓடியது.[3] 11 செப்டம்பர் 1960 அன்று ஆனந்த விகடன் இதழ் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் களத்தூர் கண்ணம்மா படத்தை வெகுவாக பாராட்டியுள்ளது.[6]

மவூரி அம்மாயி எனும் பெயரில் தெலுங்கு மொழியில் இத்திரைப்படம் மொழி பெயர்க்கப்பட்டு 20 அக்டோபர் 1960 அன்று ஆந்திரா மாநிலத்தில் வெளியானது.[7] மீண்டும் தெலுங்கில் மோக நோமு எனும் பெயரில் படமாக்கப்பட்டது.[8] இத்திரைப்படம் சுனில் தத் மற்றும் மீனாகுமாரி போன்றோரின் நடிப்பில் இயக்குனர் ஏ. பீம்சிங் இயக்க மைன் சுப் ரஹுங்கி (Main Chup Rahungi) எனும் பெயரில் ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்டது.[9] ஹிந்தி மொழியில் மீண்டும் இதே கதை யுடரடா மெனிகி (Udarata Menike) எனும் பெயரில் படமாக்கப்பட்டது.[10] சிங்கள மொழியிலும் கூட இது மங்கலிக்கா (Mangalika) எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.[11]

கமல்ஹாசன் முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி விருது (தேசிய விருது) அப்போதைய ஜனாதிபதியான இராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெற்றார். இப்படம் 1960 ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது 3 ஆம் பரிசு பெற்றது.[12]

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 எஸ். பி. முத்துராமன் (13 மே 2015). "சினிமா எடுத்துப் பார் 8- திரைக்கதை ஜாம்பவான் டி. பிரகாஷ் ராவ்!". இந்து தமிழ். Archived from the original on 18 பிப்ரவரி 2020. https://archive.today/20200218055328/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/43199-8-3.html. பார்த்த நாள்: 6 சூலை 2020. 
 2. எஸ். பி. முத்துராமன் (27 மே 2015). "சினிமா எடுத்துப் பார் 10- களத்தூர் கண்ணம்மா: பெருமையோ பெருமை!". இந்து தமிழ். https://www.hindutamil.in/amp/news/supplements/hindu-talkies/42717-10.html. பார்த்த நாள்: 26 மே 2021. 
 3. 3.0 3.1 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ். Archived from the original on 14 மார்ச் 2017. https://archive.today/20170314090511/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails13.asp. 
 4. எஸ். பி. முத்துராமன் (20 மே 2015). "சினிமா எடுத்துப் பார் 9- 'களத்தூர் கண்ணம்மா' படத்துக்குள் கமல்ஹாசன் வந்த கதை!". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/41602-9.html. பார்த்த நாள்: 26 மே 2021. 
 5. "களத்தூர் கண்ணம்மா - பாடல்கள்". indiancine.ma. 26 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 6. சண்முகம்; மீனாட்சி (11 செப்டம்பர் 1960). "சினிமா விமர்சனம்: களத்தூர் கண்ணம்மா". ஆனந்த விகடன். 16 மே 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 23 மார்ச் 2017 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Movies from AVM Productions". AVM Productions. 23 நவம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
 8. எஸ். பி. முத்துராமன் (29 ஏப்ரல் 2015). "சினிமா எடுத்துப் பார் 6- பட நீளம்!". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/39927-6.html. பார்த்த நாள்: 26 மே 2021. 
 9. "ரோஜா மலரே!: சுனில்தத்துடன் ஹிந்திப் படத்தில் நான்! - குமாரி சச்சு". தினமணி. 27 செப்டம்பர் 2020. 27 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. Coorey, Philip (1970). The Lonely Artist: A Critical Introduction to the Films of Lester James Peries. Lake House Investments. பக். 4. https://books.google.com/books?id=kWpBAQAAIAAJ&q=kannamma. 
 11. E. Weerapperuma (29 அக்டோபர் 2007). "Sri Lankan film industry enters diamond era — Part 4". Daily News Sri Lanka. 2012-10-09 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 18 சூலை 2013 அன்று பார்க்கப்பட்டது.
 12. "8th National Film Awards". International Film Festival of India. 23 நவம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது.

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=களத்தூர்_கண்ணம்மா&oldid=3575082" இருந்து மீள்விக்கப்பட்டது