எஸ். வி. சுப்பையா

இந்திய நடிகர்

எஸ். வி. சுப்பையா (1920 - 29 சனவரி 1980) ஒரு இந்திய மேடை நடிகரும் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் முக்கியமாகத் தமிழ் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தார். இவர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். அவை முக்கியத்துவமான கதாபாத்திரங்களான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் பாரதியார் வேடம், ஆதி பராசக்தி திரைப்படத்தில் அபிராமி பட்டர் வேடம் தமிழக ரசிக மக்களிடையே இன்றளவும் பிரபலமான கதாபாத்திரத்தில் சுப்பையா நிலைத்துநிற்கிறார்.

எஸ். வி. சுப்பையா
பிறப்புசெங்கோட்டை வெள்ளையன் ஆசாரி. சுப்பையா
1920 (1920)
செங்கோட்டை, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புசனவரி 29, 1980(1980-01-29) (அகவை 59–60)
ரெட் ஹில்ஸ், சென்னை
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட கலைஞர்
அறியப்படுவதுமுக்கியப் பாத்திரங்கள்
பெற்றோர்தந்தை : வெள்ளையன் ஆசாரி
தாயார் : ராஜவடிவு
வாழ்க்கைத்
துணை
கோமதி
பிள்ளைகள்5 மகள்கள்
1 மகன்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு
  • தமிழ்நாட்டில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் வெள்ளையன் ஆசாரி–ராஜவடிவு இணையாருக்கு மகனாக பிறந்தார்.
  • சுப்பையா ஐந்தாம் வகுப்புவரை படித்தவர் நடிப்பில் ஆர்வம் மேலிட, ‘செங்கோட்டை ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ் கம்பெனி’ யில் 11-வது வயதில் சேர்க்கப்பட்டார். பின்னர் சண்முகானந்தா சபை மற்றும் சக்தி நாடகசபா போன்ற நாடக குழுக்களில் இணைந்து நடித்தார். சக்தி நாடக சபாவில், கவிஞர் எஸ். டி. சுந்தரம் எழுதிய ’கவியின் கனவு’ நாடகத்தில் மகாகவி ஆனந்தனாக நடித்தார். இது இவருக்கு தமிழ் படங்களில் நுழைய வழி வகுத்தது.

திரைப்பட வாழ்க்கை

தொகு
  • ஏ.வி.எம் புரொடசன்சின் முன்னோடியான பிரகதி பிக்சர்ஸ் தயாரித்த விஜயலட்சுமி (1946) படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்து இவர் ஜுபிடர் பிக்ச்சர்ஸ் தயாரித்து கோவை அய்யமுத்து மற்றும் டி. ஆர். கோபு இயக்கிய கஞ்சனில் (1947) நடித்தார்.[1] பின்னர், அவர் அபிமன்யுவில் சகுனியாக நடித்தார், இதில் எம். ஜி. ராமச்சந்திரன் அர்ஜுனனின் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.[2]
  • மேலும் சுப்பையாவுக்கு திருப்புமுனையாக காலம் மாறிப்போச்சு (1956) படம் அமைந்தது. அதில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் இவரது குணச்சித்திர நடிப்புக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தது. இது இவரது எதிர்கால படங்களில் நல்லபாத்திரங்களை பெற்றுத்தர வாய்பாக இருந்தது. தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களிடையே இவரது பாத்திரம் எப்போதும் பசுமையாகவே இருக்கும்படியான பல படங்கள் இருந்தாலும், வரலாற்றுப் படமான கப்பலோட்டிய தமிழன் (1961) படத்தில் இவர் நடித்த பாத்திரம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதியும். இந்தப் படத்தில் இவர் சுப்பிரமணிய பாரதியாக நடித்தார். பாரதியாக நடித்த இவரது பாணியை சிவாஜி கணேசன் முதல் கமல்ஹாசன் வரை, எதிர்கால படங்களில் பாரதி வேடத்தில் தோன்றிய, பல கலைஞர்கள் பின்பற்றினர்.
  • அதன் பிறகு சுப்பையா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அம்பாள் புரொடசன்சில் காவல் தெய்வம் என்ற படத்தை தயாரித்தார்.
  • இப்படத்தில் சிவாஜி கணேசன், ஆர். முத்துராமன், டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார், நாகேஷ், வி. கே. ராமசாமி போன்ற அக்காலத்திய பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் சிறப்புத் தோற்றங்களில் தோன்றினர்.[3]
  • இந்தப் படத்தில் சிவகுமார் மற்றும் லட்சுமி நாயகன் நாயகியாக நடித்தனர். சிவாஜி கணேசன் தனது பாத்திரத்திற்கான ஊதியத்தை பெற மறுத்துவிட்டார்.
  • இதனால் உணர்ச்சி வசப்பட்ட சுப்பையா தன்னைவிட இளம் வயதான நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பார்த்து எனது அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாக மாறி சிவாஜி கணேசனுக்கு சேவை செய்வேன் என்றார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சுப்பையா வேளாண்மையில் ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை செங்குன்றம் அருகிலுள்ள கரணோடையில் நிலத்தை வாங்கி அதை ஒரு பண்ணையாக மாற்றினார். இவருக்கு (திரைப்பட) படப்பிடிப்பு இல்லாதபோது, தனது பண்ணையில் வேலை செய்வார். இவர் ஆழ்ந்த சமய நம்பிக்கைக் கொண்டவராகவும், வாழ்க்கையில் சில கொள்கைகளைக் கொண்டவராகவும் இருந்தார். இரவு 9 மணிக்குப் மேல் இவர் வேலை செய்ய மாட்டார். படிப்பதில் ஆர்வமுள்ளவர் மற்றும் ஜெயகாந்தனின் தீவிர வாசகர்.

உடல்நலக்குறைவு காரணமாக 1980 சனவரி 29 அன்று இவர் இறந்தார். செங்கோட்டையில் பிறந்தவர் செங்குன்றத்தில் உள்ள தனது பண்ணையில் இறந்தார் என்பது ஒரு விசித்திரமான தற்செயல் நிகழ்வு.

திரைப்படக் குறிப்பு

தொகு
  • சுப்பையா அவர்கள் சற்று வயோதிக கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும். அவர் அப்போது தமிழ்த் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக இருந்த பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி ஆகியோருடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.
  • அது மட்டும் இல்லாமால் இவருடன் சேர்ந்து நடிக்கும் கதாநாயகிகள் இவருடனே சேர்ந்து வசனம் பேசம் காட்சியில் சரியாக வசனம் பேசி நடிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த கதாநாயகிகளின் கண்ணம் இவர் கையால் வீங்கி விடுமாம்.
  • ஆனால் இவருடன் சேர்ந்து நடித்த பழம்பெரும் நடிகைகள் சரியாக நடித்து விடுவார்கள் ஆனால் இளம் கதாநாயகிகள் ஆன நடிகைகள் இவர் கையால் சரியான பூசை வாங்கி உள்ளனர்.
  • குறிப்பாக இவர் நடித்த கண் கண்ட தெய்வம் என்ற திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை பத்மினி இவருடன் சேர்ந்து வசனம் பேசி நடித்த முதல் திரைப்படம் என்பதால் அவர் கொஞ்சம் சரியாக பேசவராததால் அவரை ஓங்கி அரைந்தவுடன் அவர் சரியாக பேசி நடித்தார்.
  • பின்பு கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான குலவிளக்கு திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி வசன காட்சியில் அந்த தவறை செய்ததால். சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. ஆனால் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அப்போது சரோஜாதேவி செய்தது தவறுதான் ஆனால் இப்போது சரோஜாதேவி தற்போது திருமணத்திற்கு பிறகு நடிக்கின்றார். நீங்கள் கோபத்தால் அடிக்க முயன்றார் ஆனால் அதை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தடுத்து நிறுத்த மீண்டும் அந்த காட்சியில் சுப்பையாவிடம் வசன காட்சியில் சரோஜாதேவி தவறு செய்துவிட சுப்பையாவுக்கு வந்த கோபம் பிரசவமாக இருந்த சரோஜாதேவி என்று கூட பாராமல் முதுகை நோக்கி ஒரு உதைவிட்டார். அதன் பிறகு அந்த காட்சியில் சரியாக நடித்தார் சரோஜாதேவி.
  • இதே போல் ஜக்கம்மா என்ற படத்தில் நடிகை சாவித்திரி சரியாகவே சுப்பையாவுடன் சேர்ந்து பேசிவராததால் சாவித்திரி சரமாரியாக அடி பின்னி விட்டார்

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 305.
  2. Guy, Randor (2 October 2009). "Blast from the Past - Abhimanyu 1948". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170530043249/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/abhimanyu-1948/article3021993.ece. 
  3. Nadigar Thilagam Filmography
  4. Sivakumar. Idhu Raajapaattai Alla [This is not Royal Highway] (in Tamil). Alliance Company, Mylapore, Chennai 600004, 13th edition, 2014. pp. 137–140.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. ராண்டார் கை (6 ஏப்ரல் 2013). "Thirumazhisai Aazhvaar 1948". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/thirumazhisai-aazhvaar-1948/article4588185.ece. பார்த்த நாள்: 5 அக்டோபர் 2016. 
  6. ராண்டார் கை (30 ஆகத்து 2014). "Koodi Vaazhnthaal Kodi Nanmai 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past/article6365115.ece. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2016. 
  7. ராண்டார் கை (31 சனவரி 2015). "Bhagapirivinai 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-bhagapirivinai-1959/article6842599.ece. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2016. 
  8. ராண்டார் கை (11 மே 2013). "Vaazhavaitha Deivam (1959)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/vaazhavaitha-deivam-1959/article4706180.ece. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2016. 

நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வி._சுப்பையா&oldid=4091291" இலிருந்து மீள்விக்கப்பட்டது