பெற்ற மனம்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பெற்ற மனம் 1960 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் நேசனல் பிக்சர்சு நிறுவனத்தினர் இதனைத் தயாரித்திருந்தனர்.[1] சிவாஜி கணேசன், புஷ்பவல்லி, எஸ். எஸ். ராஜேந்திரன், பத்மினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[2] இது 1953 இல் வெளிவந்த பெம்புடு கொடுக்கு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.

பெற்ற மனம்
1956 திராவிட நாடு இதழில் வெளிவந்த விளம்பரம்
இயக்கம்ஏ. பீம்சிங்
கதைமு. வரதராசன்
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புசிவாஜி கணேசன்
புஷ்பவல்லி
எஸ். எஸ். ராஜேந்திரன்
பத்மினி
ஒளிப்பதிவுஜி. விட்டல்ராவ்
கலையகம்நேஷனல் பிக்சர்ஸ் பி. ஏ. பெருமாள் முதலியார்
வெளியீடுஅக்டோபர் 19, 1960 (1960-10-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

பெற்ற மனம் திரைப்படத்தின் கதையை மு. வரதராசன் எழுதினார். நடனங்களை கே. என். தண்டாயுதபாணி, பிள்ளை தங்கப்பன், முத்துசாமிப் பிள்ளை ஆகியோர் அமைத்திருந்தனர்.[2] பெற்ற மனமும், பெம்புடு கொடுக்கு என்ற தெலுங்குத் திரைப்படமும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டிருந்தாலும்,[3] தெலுங்குத் திரைப்படம் 1953 இலேயே வெளியிடப்பட்டு விட்டது. ஏழாண்டுகளின் பின்னரேயே தமிழ்த் திரைப்படம் வெளியானது.[2]

பாடல்கள் தொகு

எஸ். ராஜேஸ்வர ராவ் இசையமைத்திருந்த பாடல்களை,[4][5] கு. மு. அண்ணல்தங்கோ, எம். கே. ஆத்மநாதன், பாரதிதாசன், கண்ணதாசன், கே. பி. காமாட்சிசுந்தரம் ஆகியோர் எழுதியிருந்தனர். ஜே. பி. சந்திரபாபு, சீர்காழி கோவிந்தராஜன், சி. எஸ். ஜெயராமன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. பி. கோமளா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, கே. ஜமுனா ராணி ஆகியோர் பாடியிருந்தனர்.[6]

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 "அன்புத் தோழா ஓடி வா" சீர்காழி கோவிந்தராஜன் கு. மு. அண்ணல்தங்கோ
2 "புதியதோர் உலகம் செய்வோம்" பாரதிதாசன் 03:14
3 "பாடிப் பாடிப் பாடி" ஜே. பி. சந்திரபாபு, சூலமங்கலம் ராஜலட்சுமி 06:27
4 "மனதிற்குகந்த மயிலே" ஜே. பி. சந்திரபாபு
5 "ஒரே ஒரு பைசா" சூலமங்கலம் ராஜலட்சுமி 03:29
6 "தெற்குப் பொதிகை மலை" டி. எம். சௌந்தரராஜன், கே. ஜமுனா ராணி
7 "சிந்தனை செய்யடா" எம். எல். வசந்தகுமாரி, சிவாஜி கணேசன் (வசனம்) கண்ணதாசன் 06:05
8 "காதல் கரும்பு கண்டேன்" சி. எஸ். ஜெயராமன், ஜிக்கி 03:28
9 "துள்ளித் துள்ளி ஓடும் என்" சிக்கி கே. பி. காமாட்சிசுந்தரம் 02:53
10 "சினிமா கினிமா டிராமா" சீர்காழி கோவிந்தராஜன் எம். கே. ஆத்மநாதன்
11 "கண்ணே நீ சென்று வாடா" ஏ. பி. கோமளா 03:06

வெளியீடு தொகு

பெற்ற மனம் 1960 அக்டோபர் 19 இல் வெளியிடப்பட்டது.[7] வணிக அளவில் இது தோல்வி கண்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. சு. தியடோர் பாஸ்கரன் (2013). Sivaji Ganesan: Profile of An Icon. Wisdom Tree. பக். 88. 
  2. 2.0 2.1 2.2 "filmography p7". nadigarthilagam.com. Archived from the original on 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
  3. 3.0 3.1 Narasimhan, M. L. (24 September 2015). "Blast from the past: Illarikam (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161209140112/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/starring-a-nageswara-rao-jamuna-girja-hemalatha-relangi-gummadi-ramana-reddy-csr-allu-ramalingaiah-r-nageswara-rao/article7685387.ece. 
  4. "Petra Manam (1960)". MusicIndiaOnline. Archived from the original on 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
  5. "Petra Manam". Saavn. Archived from the original on 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
  6. Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1. Chennai: Manivasagar Publishers. பக். 206–207. 
  7. Film News Anandan (2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivagami Publishers இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171016065019/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails36.asp. பார்த்த நாள்: 24 செப்டம்பர் 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெற்ற_மனம்&oldid=3690808" இலிருந்து மீள்விக்கப்பட்டது