பி. ஏ. பெருமாள் முதலியார்
பி. ஏ. பெருமாள் முதலியார் (P. A. Perumal Mudaliar, மே 10, 1916 - டிசம்பர் 07, 1978) என்பவர் பல தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான அவர். நேஷனல் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர். சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா போன்றவர்களை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.[1][2][3]
பிறப்பு
தொகுஅன்றைய வடக்கு வட ஆற்காடு மாவட்டத்தில் வேலூர் வட்டம் பூட்டுத்தாக்கு என்ற கிராமத்தில் நெசவாளர் அருணாசலர் செங்குந்தர் - சிந்தாமணி அம்மாள் தம்பதியருக்கு ஒரே மகனாக 1919 ஆம் ஆண்டு பிறந்தார்
வாழ்க்கை
தொகுதனது பள்ளிப்படிப்பை வேலூரில் முடித்தார் பின்பு லுங்கி ஏற்றுமதியாளராக தொழில் செய்தார் பிறகு மீனாட்சி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
சிறுவயதிலேயே பெரியார் அண்ணா ஆகியோரிடம் ஈர்ப்பு கொண்டு அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்தார். மேலும் திராவிடக் கட்சி , கலைஞர், எம்ஆர் ராதா, கே.வீரமணி, கண்ணதாசன், ஏஎல்எஸ்., சுந்தர்லால், டிஎஸ் துரைராசு, சுப்பையா செட்டியார், பட்சி ராஜா அதிபர் முதலியவர்களிடம் நெருங்கிய நண்பராக இருந்தார்
அக்காலத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்த தந்தை பெரியார் ரயில் மூலம் ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருக்கு முதன்முதலில் கார் வாங்கிக் கொடுத்தவர் பெருமாள் முதலியார் ஆவார்.
கலைத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் தனது குலத் தொழிலான ஜவுளித்துறையில் சம்பாதித்ததை வைத்து 1948ல் வேலூரில் நேஷனல் தியேட்டர் என்ற திரையரங்கத்தை கட்டினார் மிகுந்த கலை ஆர்வம் கொண்டவர் வேலூரில் சக்தி நாடக சபாவில் ரோஜாநாடகம் நடைபெற்றபோது அதில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகம் ஏற்பட்டு தேவி நாடக மன்றம் நடத்திய பராசக்தி நாடகத்தில் நடிக்க திரைப்படமாக தயாரிக்கும் எண்ணம் கொண்டார்.
இவர் பராசக்தி படத்தை ஏவிஎம் ஸ்டூடியோவில் திரைப்பட முயற்சியில் ஈடுபட்டார்.
வசனம் கலைஞர் கருணாநிதி அவர்கள் இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு என முடிவானது. சிவாஜி கணேசனுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துள்ளார்கள் சிவாஜி கணேசன் அவர்கள் சக்சஸ் கண்ட வசனத்தில் சட்டென்று பேசியுள்ளதாக சவுண்ட் என்ஜினியர் கூறியுள்ள நிலையில் முகம் சரியில்லை எனவும் சிலர் கூறியுள்ளனர்
வேறு யாரையாவது வைத்து படத்தை முடியுங்கள் என்று பேசியுள்ளனர். மனம் தளராத திருப்பி இதில் மாணவர்கள் சிவாஜியை வேறு ஒரு ஊருக்கு அழைத்து வந்து உடல் தேற்றி சிலம்பம் போன்ற பயிற்சிகளை அளித்து மீண்டும் சென்னை வரவழைத்து உத்வேகத்துடன் படத்தைத் தயாரித்தார் 1952 திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. [4]
பெருமாள் முதலியார் நிலம் 9 ஏக்கரை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. பூட்டுதாக்கு கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க இடம் கொடுத்தார்
ஏழை பள்ளி மாணவர்களுக்கு நிறைய உதவி செய்வார். அவரால் படித்த மாணவர்கள் இன்று அரசு வேலையில் உள்ளார்கள்.[5][6]
இவர் விநியோகம் செய்த படங்கள்
தொகு200க்கும் மேற்பட்ட படங்களில் உரிமையைப் பெற்று விநியோகம் செய்தார் அதில் பிரபலமான படங்களில் சில
பதிபக்தி,
விடிவெள்ளி,
நாமிருவர்,
வேதாள உலகம்,
ரங்கோன் ராதா,
சாரதா,
கிழக்கே போகும் ரயில்,
சில நேரங்களில் சில மனிதர்கள்(1974),
அன்னை இல்லம்(1964) ,
பாசமலர் போன்ற பல படங்களுக்கு விநியோகஸ்தர் உரிமம் பெற்று விநியோகம் செய்தார்.
16 வயதினிலே
கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள்
சட்டம் என் கையில்
இளமை ஊஞ்சலாடுகிறது[7]
இவர் தயாரித்த படங்கள்
தொகுபராசக்தி (திரைப்படம்) (1952) - சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த முதல் படம். படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்
ரத்தக்கண்ணீர் (1954) - எம் ஆர் ராதா கதாநாயகனாக நடித்த முதல் படம் இப்படத்தின் பிரமாண்ட வெற்றியால் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்
பெற்ற மனம் (1960) - சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த படம்
மறைவு
தொகுதொடர்ந்து வெற்றிகரமாக படம் விநியோகம் செய்து வந்த நிலையில் அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு சிறிது காலம் படங்கள் வாங்கவில்லை. 1978 டிசம்பர் 7-ஆம் தேதி இறையருள் அடைந்தார். பெருமாள் முதலியார் மனைவி பி. மீனாட்சி அம்மாள் 9.4.2014 இல் மறைந்து விட்டார்கள்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கண்டதும் கேட்டதும்" (in தமிழ்). தினமணி. 2017. https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/oct/04/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---16-2784352.html.
- ↑ தமிழ் நாடக வரலாறு. Pustaka Digital Media.
- ↑ திரைப்படங்கள். Pustaka Digital Media.
- ↑ "சக்கரவர்த்தி சிவாஜி" (in தமிழ்). தி இந்து. 2021. https://www.hindutamil.in/news/blogs/137219-.html.
- ↑ "தயாரிப்பாளர் ஏ.வி.எம்.குமரன் பேட்டி" (in தமிழ்). தினமலர். 2017. https://m.dinamalar.com/weeklydetail.php?id=39357.
- ↑ "கண்டதும் கேட்டதும்" (in தமிழ்). தினமணி. 2017. https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/oct/04/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---16-2784352.html.
- ↑ "கண்டதும் கேட்டதும்" (in தமிழ்). தினமணி. 2017. https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/oct/04/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---16-2784352.html.
- ↑ "பராசக்திக்காக சிவாஜியை தேர்வு செய்த காமக்கூர் வீடு: சிவாஜி பிறந்த தினத்தில் சில நினைவுகள்". பாலிமர். 2020. http://www.puthiyathalaimurai.com/newsview/82622/Today-is-Shivaji-Ganesan-s-birthday--Kamakkur-House-who-select-Shivaji-as-a-hero-for-the-film-Parasakthi.
- ↑ "கண்டதும் கேட்டதும்" (in தமிழ்). தினமணி. 2017. https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/oct/04/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---16-2784352.html.