பாரதிதாசன்

தமிழ் இந்திய எழுத்தாளர் (1891-1964)

பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

பாரதிதாசன்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
பிறப்புசுப்புரத்னம்
(1891-04-29)ஏப்ரல் 29, 1891
புதுவை, இந்தியா
இறப்புஏப்ரல் 21, 1964(1964-04-21) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர்பாரதிதாசன், பாவேந்தர்
தொழில்தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
தேசியம்இந்தியர்
கல்விபுலவர்
கல்வி நிலையம்கல்வே கல்லூரி, புதுவை
காலம்20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
வகைதமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை
கருப்பொருள்இனமானம், அரசியல்
இலக்கிய இயக்கம்திராவிட இயக்கம்
செயற்பட்ட ஆண்டுகள்1920-1964
குறிப்பிடத்தக்க படைப்புகள்பாண்டியன் பரிசு
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது
துணைவர்பழநி அம்மையார்
பிள்ளைகள்சரசுவதி கண்ணப்பன்
வசந்தா தண்டபாணி
இரமணி சிவசுப்ரமணியன்
மன்னர் மன்னன்
பெற்றோர்கனகசபை முதலியார், இலக்குமி அம்மையார்
கையொப்பம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு
 

புரட்சிக்கவி பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் செங்குந்தர் கைக்கோள முதலியார்[1] மரபில், பெரிய வணிகராயிருந்த, கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920-ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலேயே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியரானார்.

இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப் பின், சி. சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரைப் பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்கு முன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க் கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!" என்று ஒரு பாடலைப் பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.[2]

"தன் நண்பர்கள் முன்னால் பாடு" என்று பாரதி கூறப் பாரதிதாசன் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டுச் 'சுதேசமித்திரன்' இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார் [3]. மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் [4][3][5]. அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29-இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.

பாரதியார் மீது பற்று

தொகு

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாகப் சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்றுமுதல், அவர் தனது இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

மறைவு

தொகு

பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

தொகு
  • "எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"..
  • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..
  • தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..

இப்பாடலின் ஒரு வரியை குறிப்பிட்டு, ஆஸ்கார் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2022 இல் ழகரத்தை ஆயுதமாக ஏந்திய தமிழணங்கு படம் பதிந்தபோது அதில் இடம்பெற்ற வரிகள் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் என்பதாகும்.

  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..

காலவரிசை

தொகு

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 1891-ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1964-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1969: அவரது மரணத்திற்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

1990: இவருடைய படைப்புகள் தமிழ் நாடு அரசினால் உடைமையாக்கப்பட்டன.

பாரதிதாசனின் ஆக்கங்கள்

தொகு

பாரதிதாசன் தன் எண்ணங்களைக் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:

  1. அம்மைச்சி (நாடகம்) [6]
  2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
  3. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
  4. எது பழிப்பு, குயில் (1948)
  5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
  6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்) [6]
  7. கலை மன்றம் (1955)
  8. கற்புக் காப்பியம், குயில் (1960)
  9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்) [6]
  10. நீலவண்ணன் புறப்பாடு
  11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967) [6]
  12. பெண்கள் விடுதலை
  13. விடுதலை வேட்கை
  14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
  15. ரஸ்புடீன் (நாடகம்) [6]

இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் செப்பலோசையில் அமையப்பெற்ற 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிதாசன் நூல்கள்

தொகு

பாரதிதாசன் பாடல்கள், படைப்புகள் மதுரைத் திட்டத்தில் உள்ளன. பாரதிதாசன் படைப்புகள் பல, அவர் வாழ்ந்தபொழுதும், அவரின் மறைவிற்குப் பின்னரும், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:

வ.எண் நூலின் பெயர் முதற்பதிப்பு ஆண்டு வகை பதிப்பகம் குறிப்பு
01 அகத்தியன்விட்ட புதுக்கரடி 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
02 சத்திமுத்தப்புலவர் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை
03 இன்பக்கடல் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை
04 அமிழ்து எது? 1951 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
05 அமைதி 1946 நாடகம் செந்தமிழ் நிலையம், இராமச்சந்திராபுரம்
06 அழகின் சிரிப்பு 1944 கவிதை முல்லை பதிப்பகம், சென்னை
07 இசையமுது (முதலாம் தொகுதி) 1942 இசைப்பாடல் பாரத சக்தி நிலையம், புதுவை
08 இசையமுது (இரண்டாம் தொகுதி) 1952 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
09 இந்தி எதிர்ப்புப் பாடல்கள் 1948 இசைப்பாடல்
10 இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939 நாடகம் குடியரசுப் பதிப்பகம் 1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
11 இருண்டவீடு 1944 காவியம் முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, புதுக்கோட்டை
12 இலக்கியக் கோலங்கள் 1994 குறிப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
13 இளைஞர் இலக்கியம் 1958 கவிதை
14 உலகம் உன் உயிர் 1994 கவிதை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை வெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு
15 உலகுக்கோர் ஐந்தொழுக்கம் 1994 கட்டுரைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள்
16 எதிர்பாராத முத்தம் 1938 கவிதை -
17 எது இசை? 1945 சொற்பொழிவும் பாடல்களும் கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னை பாரதிதாசனும் பாடல்களும் அண்ணாதுரையின் கட்டுரையும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[7]
18 ஏழைகள் சிரிக்கிறார்கள் 1980 சிறுகதைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு.
19 ஏற்றப் பாட்டு 1949 இசைப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
20 ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது 1978 இசைப்பாடல் பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
21 கடற்மேற் குமிழிகள் 1948 காவியம் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
22 கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962 காவியம் அன்பு நிலையம், சென்னை
23 கதர் இராட்டினப்பாட்டு, 1930 இசைப்பாடல் காசி ஈ லஷ்மண் பிரசாத், ஶ்ரீவேல் நிலையம், புதுச்சேரி
24 கவிஞர் பேசுகிறார் 1947 சொற்பொழிவு திருச்சி அன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது
25 கழைக்கூத்தியின் காதல் 1951 நாடகம்
26 கற்கண்டு 1945 நாடகம் பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது
27 காதலா? கடமையா? 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
28 காதல் நினைவுகள் 1944 கவிதை செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம்
29 காதல் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
30 குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி 1942 காவியம் பாரத சக்தி நிலையம், புதுவை
31 குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல் 1944 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை
32 குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் 1948 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை
33 குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை
34 குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல் 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது.
35 குமரகுருபரர் 1992 நாடகம் காவ்யா, பெங்களூர் 1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது
36 குயில் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
37 குறிஞ்சித்திட்டு 1959 காவியம் பாரி நிலையம், சென்னை
38 கேட்டலும் கிளத்தலும் 1981 கேள்வி-பதில் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
39 கோயில் இருகோணங்கள் 1980 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
40 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930 காவியம் ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
41 சிரிக்கும் சிந்தனைகள் 1981 துணுக்குகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
42 சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930 கவிதை
43 சுயமரியாதைச் சுடர் 1931 பாட்டு கிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல்
44 செளமியன் 1947 நாடகம்
45 சேரதாண்டவம் 1949 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
46 தமிழச்சியின் கத்தி 1949 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
47 தமிழியக்கம் 1945 கவிதை செந்தமிழ் நிலையம், ராயவரம் ஒரே இரவில் எழுதியது
48 தமிழுக்கு அமிழ்தென்று பேர் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
49 தலைமலை கண்ட தேவர் 1978 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
50 தாயின் மேல் ஆணை 1958 கவிதை
51 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு 1930 பாட்டு ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
52 திராவிடர் திருப்பாடல் 1948 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
53 திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் 1949 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
54 தேனருவி 1956 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
55 தொண்டர் வழிநடைப் பாட்டு 1930 பாட்டு
56 நல்லதீர்ப்பு 1944 நாடகம் முல்லைப் பதிப்பகம், சென்னை
57 நாள் மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
58 படித்த பெண்கள் 1948 நாடகம்
59 பன்மணித்திரள் 1964 கவிதை
60 பாட்டுக்கு இலக்கணம் 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
61 பாண்டியன் பரிசு 1943 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை
62 பாரதிதாசன் ஆத்திசூடி 1948 கவிதை
63 பாரதிதாசன் கதைகள் 1955 சிறுகதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி சிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு
64 பாரதிதாசனின் கடிதங்கள் 2008 கடிதங்கள் ச.சு.இளங்கோ பதிப்பு
65 பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) 1938 கவிதை குஞ்சிதம் குருசாமி, கடலூர்
66 பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) 1949 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி இ.பதிப்பு 1952
67 பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) 1955 கவிதை
68 பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) 1977 கவிதை பாரி நிலையம், சென்னை.
69 பாரதிதாசன் நாடகங்கள் 1959 கவிதை பாரி நிலையம், சென்னை
70 பாரதிதாசனின் புதிய நாடகங்கள் 1994 நாடகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
71 பாரதிதாசனின் புதினங்கள் 1992 புதினம் ச.சு.இளங்கோ பதிப்பு
72 பாரதிதாசன் பேசுகிறார் 1981 சொற்பொழிவு ச.சு.இளங்கோ பதிப்பு.
73 பாரதிதாசன் திருக்குறள் உரை 1992 உரை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
74 பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் 2012 திரைக்கதை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும்
75 பிசிராந்தையார் 1967 நாடகம் 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
76 புகழ்மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
77 புரட்சிக் கவி 1937 கவிதை ஶ்ரீசாரதா பிரஸ், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
78 பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
79 மணிமேகலை வெண்பா 1962 கவிதை
80 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926 இசைப் பாடல் காசி-லஷ்மண் பிரசாத், வேல் நிலையம், புதுச்சேரி
81 மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் 1925 கவிதை ஜெகநாதம் பிரஸ், புதுவை
82 மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 1920 இசைப்பாடல் ஜெகநாதம் பிரஸ், புதுவை
83 மானுடம் போற்று 1984 கட்டுரைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
84 முல்லைக்காடு 1948 கவிதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி
85 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
86 வேங்கையே எழுக 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு

திரையுலகில் பாரதிதாசன் [8]

தொகு

திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937-ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்குக் கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு எனப் பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.

திரைக்கதை, உரையாடல்

தொகு

அவ்வகையில் இவர் பின்வரும் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதினார்:

வ.எண். திரைப்படத்தின் பெயர் ஆண்டு இயக்குநர் கதாநாயகன் தயாரிப்பாளர் குறிப்பு
1 பாலாமணி அல்லது பக்காத்திருடன் 1937 - தி. க. சண்முகம் -
2 இராமானுஜர் 1938 வ. ராமசாமி சங்கு சுப்ரமணியம் -
3 கவிகாளமேகம் 1940 எல்லிஸ் ஆர். டங்கன் டி. என். ராஜரத்தினம் -
4 சுலோசனா 1944 டி. ஆர். சுந்தரம் டி. ஆர். சுந்தரம் மார்டன் தியேட்டர்ஸ்
5 ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 - பி. எஸ். கோவிந்தன் -
6 பொன்முடி 1949 - பி. வி. நரசிம்மபாரதி -
7 வளையாபதி 1952 - ஜி.முத்துக்கிருட்டிணன் -
8 குமரகுருபரர் - - - மாடர்ன் தியேட்டர்ஸ்
8 பாண்டியன் பரிசு - சிவாஜி கணேசன் பாரதிதாசன் பிக்சர்ஸ் தொடக்கவிழாவோடு நின்றுவிட்டது
9 முரடன்முத்து - - - பாரதிதாசன் பிக்சர்ஸ் படமாக உருவாகவில்லை
10 மகாகவி பாரதியார் - - - பாரதிதாசன் பிக்சர்ஸ் படமாக உருவாகவில்லை

இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களைத் தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

திரைப்படப்பாடல்கள்

தொகு

பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். இவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றைச் சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு:

வ.எண் பாடல்கள் திரைப்படம் ஆண்டு பாடகர் இசையமைப்பாளர்
1 அனைத்துப் பாடல்களும் பாலாமணி அல்லது பக்காத்திருடன் 1937 - -
2 அனைத்துப் பாடல்களும் ஸ்ரீ ராமானுஜர் 1938 - -
3 அனைத்துப் பாடல்களும் காளமேகம் 1940 - -
4 துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... ஓர் இரவு 1951 எம். எஸ். ராஜேஸ்வரி ஆர். சுதர்சனம்
5 அதோ பாரடி அவரே என் கணவர்... கல்யாணி 1952 பி. லீலா எஸ். தட்சிணாமூர்த்தி & ஜி. ராமனாதன்
6 வாழ்க வாழ்க வாழ்கவே... பராசக்தி 1952 எம். எல். வசந்தகுமாரி ஆர். சுதர்சனம்
7 பசியென்று வந்தால் ஒரு பிடி சோறு... பணம் 1952 - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
8 அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?... அந்தமான் கைதி 1952 - ஜி. கோவிந்தராயுலு நாயுடு
9 குளிர்த்தாமரை மலர்ப்பொய்கை... வளையாபதி 1952 டி. எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணி எஸ். தட்சிணாமூர்த்தி
10 குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி... வளையாபதி 1952 டி. எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணி எஸ். தட்சிணாமூர்த்தி
11 தாயகமே வாழ்க தாயகமே வாழ்க... பூங்கோதை 1953 - பி. ஆதி நாராயண ராவ்
12 பாண்டியன் என் சொல்லை..... திரும்பிப்பார் 1953 பி. லீலா ஜி. ராமனாதன்
13 ஆலையின் சங்கே நீ ஊதாயோ… ரத்தக்கண்ணீர் 1954 எம். எல். வசந்தகுமாரி சி. எஸ். ஜெயராமன்
14 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என் மகள் 1954 எஸ். வரலட்சுமி சி. என். பாண்டுரங்கன
15 வெண்ணிலாவும் வானும் போல... கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ராதா ஜெயலட்சுமி டி. ஜி. லிங்கப்பா
16 நீலவான் ஆடைக்குள் உடல் ... கோமதியின் காதலன் 1955 ஏ. எம். ராஜா ஜி. ராமனாதன்
17 ஆடற்கலைக்கழகு தேடப்பிறந்தவள்... நானே ராஜா 1955 பி. லீலா & என். எல். கானசரஸ்வதி டி. ஆர். ராம்நாத்
18 தலைவாரி பூச்சூடி உன்னை-பாட... ரங்கோன் ராதா 1956 பி. பானுமதி டி. ஆர். பாப்பா
19 கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே... குலதெய்வம் 1956 சி. எஸ். ஜெயராமன் ஆர். சுதர்சனம்
20 ஒரே ஒரு பைசா தருவது பெரிசா... பெற்ற மனம் 1960 சூலமங்கலம் ராஜலட்சுமி எஸ். ராஜேஸ்வர ராவ்
21 பாடிப் பாடிப் பாடி வாடி... பெற்ற மனம் 1960 ஜே. பி. சந்திரபாபு & சூலமங்கலம் ராஜலட்சுமி எஸ். ராஜேஸ்வர ராவ்
22 மனதிற்குகந்த மயிலே வான்விட்டு... பெற்ற மனம் 1960 ஜே. பி. சந்திரபாபு எஸ். ராஜேஸ்வர ராவ்
23 தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த... பஞ்சவர்ணக்கிளி 1965 பி. சுசீலா விஸ்வநாதன்-ராமமூர்த்தி
24 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்... கலங்கரை விளக்கம் 1965 சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா எம். எஸ். விஸ்வநாதன்
25 வலியோர் சிலர் எளியோர் தமை... மணிமகுடம் 1966 டி. எம். சௌந்தரராஜன் ஆர். சுதர்சனம்
26 புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட சந்திரோதயம் 1966 சீர்காழி கோவிந்தராஜன் எம். எஸ். விஸ்வநாதன்
27 எங்கெங்குக் காணிணும் சக்தியடா !... நம்மவீட்டு தெய்வம் 1970 டி. எம். சௌந்தரராஜன் குன்னக்குடி வைத்தியநாதன்
28 சித்திரச் சோலைகளே-உமை நன்கு.... நான் ஏன் பிறந்தேன் 1972 டி. எம். சௌந்தரராஜன் சங்கர் கணேஷ்
29 புதியதோர் உலகம் செய்வோம் பல்லாண்டு வாழ்க 1975 டி. எம். சௌந்தரராஜன் & வாணி ஜெயராம் கே. வி. மகாதேவன்
30 காலையிளம் பரிதியிலே ... கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978 எஸ். பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா
31 அம்மா உன்றன் கைவளையாய் ... நிஜங்கள் 1982 வாணி ஜெயராம் எம். பி. சீனிவாசன்
32 கொலை வாளினை எடடா... சிவப்பதிகாரம் 2006 ராகுல் நம்பியார் & கதிர் வித்யாசாகர்
33 அவளும் நானும் அமுதும் தமிழும் அச்சம் என்பது மடமையடா 2016 விஜய் யேசுதாஸ் ஏ. ஆர். ரகுமான்

பாரதிதாசன் கட்டுரைகள்

தொகு

பாரதிதாசன் புதுவை முரசு, குடியரசு, குறள் மலர் மற்றும் குயில் ஆகிய இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[9]

வரிசை எண் கட்டுரைத் தலைப்பு வெளியான இதழ் நாள்
1 பெண்களின் சமத்துவம் விபரம் இல்லை விபரம் இல்லை
2 கடவுள் ஒன்று புதுவை முரசு 22.12.1930
3 ஜாதிச் சண்டை புதுவை முரசு 12.01.1931
4 குழந்தை இந்தியா புதுவை முரசு 19.01.1931
5 வைர மணிகள் புதுவை முரசு 09.02.1931
6 சனியனை வணங்குவது சரியா புதுவை முரசு 16.02.1931
7 ஊழ் புதுவை முரசு 16.02.1931
8 வெண்ணெய் வாழைதான் புதுவை முரசு 16.02.1931
9 சீர்திருத்தக்காரர்களின் கஷ்டம் புதுவை முரசு 09.03.1931
10 டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? புதுவை முரசு 22.03.1931
11 துக்கடா புதுவை முரசு 30.03.1931
12 சுயமரியாதைக்காரர்களே தொலைந்து போய்விடுங்கள்! புதுவை முரசு 06.04.1931
13 மானுடம் போற்று! புதுவை முரசு 18.05.1931
14 ஆஸ்திகமே அறிவைக் கெடுத்தது புதுவை முரசு 20.07.1931
15 கடவுள் சிருஷ்டியா? புதுவை முரசு 16.11.1931
16 குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் புதுவை முரசு 22.02.1932
17 இனி என்ன செய்யப் போகிறீர்கள்? புதுவை முரசு 22.02.1932
18 சமத்துவம், சகோதரத்துவம், சுத்ந்திரம் புதுவை முரசு மார்ச்சு,1932
19 லெளகிகத்தின் துஷ்டப் பிள்ளை வைதிகம் புதுவை முரசு மார்ச்சு, 1932
20 சேசுநாதர் வருகை புதுவை முரசு 21.03.1932
21 அம்மியும் நகரும் குடியரசு 26.03.1933
22 பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம் புதுவை முரசு மார்ச்சு, 1932
23 அன்பே சிவம் என்பது ஆத்திகர் கரடி குடியரசு 09.04.1933
24 எழுத்துச் சிக்கனம் குயில் 15.05.1948
25 குள்ளநரியின் குதிப்புக்கு மறுப்பு குயில் 15.05.1948
26 மறைமலை அடிகளார் குறள் மலர் 29.09.1950
27 தமிழன் யார்? குயில் 01.06.1958
28 இவர்களைப் பாருங்கள் குயில் 16.06.1959
29 பாருங்கள் அவர்களை குயில் 16.06.1959
30 அவர்களைப் பாருங்கள் குயில் 16.06.1959
31 ஏழ்மை ஒழியுமா? குயில் 02.02.1960
32 உண்டு என்பார்! இல்லைஎன்பார்! குயில் 10.05.1960
33 பொன்னும் தங்கமும் குயில் 02.08.1960
34 உருசியாவில் திருக்குறள் விளக்கம் குயில் 13.09.1960
35 செங்கோன் தரைச் செலவு தமிழுக்கு வரலாறு உண்டு குயில் 04.10.1960
36 தமிழகத்தில் பஞ்சாயத்து ஆட்சி குயில் 04.10.1960
37 தெய்வமிகழேல் குயில் 11.10.1960
38 கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் குயில் 18.10.1960
39 அரிசி சோம்பலை உண்டாக்குமா? குயில் 08.11.1960
40 தமிழன் வெற்றி எங்கிருக்கிறது? கலைக்கதிர் 1962
41 அடி; நொறுக்கிவிடு விபரம் இல்லை 15.09.1969
42 சாதி ஏன்? குயில் 10.02.1962

பாரதிதாசன் எழுதிய முன்னுரைகள்

தொகு
  1. வள்ளுவர் கண்ட நாடு, மு.த.வேலாயுதனார், சரோஜினி பதிப்பகம் புதுச்சேரி, 1951 [10]

பாரதிதாசன் பற்றிய நூல்கள்

தொகு
  1. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ரஜீத், 1945, மின்னல் பதிப்பகம், புஸ்லி வீதி, புதுச்சேரி.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. Kōpati Pārati (1988). Pāvēntar pānayam kaṭṭurait tiraṭṭu. Pūṅkoṭi Patippakam. p. 48.
  2. "தராசு". 10 மார்ச்சு 2020. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச்சு 2020.
  3. 3.0 3.1 "Bharathidasan's Biography". Tamil Virtual University; tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
  4. "Self respect movement (Dravida Iyakkam) plays by Bharathidasan, C.N. Annadurai, M. Karunanidhi and others". Tamil Virtual University. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
  5. "Bharathidasan (பாரதிதாசன்)". goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2022.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "p10243". www.tamilvu.org.
  7. குடிஅரசு, 1945-01-27, பக்.10
  8. பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையம் விளக்கக்கையேடு, கலை பண்பாட்டுத்துறை, புதுச்சேரி அரசு
  9. பாரதிதாசன் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: சி. துரைசாமி, பதிப்பு 1998 திசம்பர், கார்த்திகா பதிப்பகம், 17ஏ, முத்துமாரியம்மன் கொயில் தெரு, இலட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை 600 044.
  10. திராவிடநாடு (இதழ்) நாள்:10-6-1952, பக்கம் 8
  11. குடிஅரசு, 18-8-1945, பக்.11

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாரதிதாசன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிதாசன்&oldid=4087430" இலிருந்து மீள்விக்கப்பட்டது