ஆர். சுதர்சனம்

இந்திய இசை அமைப்பாளர்

ஆர். சுதர்சனம் என அழைக்கப்படும் இராமகிருஷ்ணா சுதர்சனம் (Ramakrishna Sudarsanam; 26 ஏப்ரல் 1914 – 26 மார்ச் 1991) ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், இந்தி, கன்னட மலையாளம், தெலுங்கு மற்றும் சிங்களத் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4]

ஆர். சுதர்சனம்
பிறப்புஇராமகிருஷ்ண சுதர்சனம்
(1914-04-26)26 ஏப்ரல் 1914
இறப்பு26 மார்ச்சு 1991(1991-03-26) (அகவை 76)
சென்னை
தேசியம்இந்தியர்
பணிஇசை இயக்குநர்
பிள்ளைகள்சதானந்தம்

தொழில் தொகு

சுதர்சனம் [1] 1939 இல் திருநீலகண்டர் என்ற படத்துடன் தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். இவர் மிகவும் திறமையான இசைக்கலைஞராக இருந்தார். இவர் இசை இயக்குனர் சர்மா சகோதரர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களது இசை குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். நிறைய அனுபவங்களைப் பெற்ற பிறகு, டி.ஏ. கல்யாணம் என்பவருடன் இணைந்து இசையமைக்கத் தொடங்கினார். 1940இல் வெளியான சகுந்தலை என்றத் திரைப்படத்தில் முழு அளவிலான இசையமைப்பாளராக ஆனார். இவர் இந்த படத்திற்காக ஒரு சில பாடல்களைத் பதிவு செய்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவருக்கு ஏற்பட்ட நோய் காரணமாக அந்தப் படத்தைத் தொடரவில்லை. திரைப்படக் குழு அதே படத்திற்காக மற்றொரு இசை அமைப்பாளரான இராஜகோபால் சர்மாவை அழைத்து வந்து, ஏற்கனவே இயற்றப்பட்ட சுதர்சனத்தின் தாளங்களைப் பயன்படுத்தியது. ஆனால் இவருக்கு பாராட்டு கிடைக்கவில்லை.

பின்னர், இவர் ஏ.வி.எம் திரைப்பட நிறுவனத்தின் சரஸ்வதி இசைக்குழு நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், திரைப்படங்களுக்கு பின்னணிப் பணிகளைத் தொடங்கினார். இவரது பெயர் முதன்முதலில் வெள்ளி திரையில் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் 1945 இல் [5] துரையூர் இராஜகோபால் சர்மாவுடன் சேர்ந்து இடம் பெற்றது. 1947ஆம் ஆண்டில் நாம் இருவர் திரைப்படத்தில் முழு அளவிலான இசையமைப்பாளராக ஆனார். பின்னர் நிறைய படங்களில் பல வெற்றிப்பாடல்களை அளித்தார் .

இவர் பல உச்ச நட்சந்திரங்களுக்காக அவர்களது முதல் படத்தில் இசையமைத்திருந்தார். ராஜ்குமாருக்கு பேடரா கண்ணப்பா (கன்னடப் படம்), சிவாஜி கனேசனுக்கு பராசக்தி, கமல்ஹாசனுக்கு களத்தூர் கண்ணம்மா, வைஜெயந்திமாலாவுக்கு வாழ்க்கை போன்ற அவர்களின் அறிமுகப் படத்திற்கு இசையமைத்த பெருமை இவருக்கு உண்டு. [6][7]

இவர் பல பாடகர்களை தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களில் எஸ். ஜானகி, டி. எம். சௌந்தரராஜன் ஆகியோரும் அடங்குவர்.

இசையமைத்த திரைப்படங்கள் தொகு

தமிழ்த் திரைப்படங்கள் தொகு

ஆர். சுதர்சனம் இசையமைத்த சில தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்:[8][9]

மலையாளத் திரைப்படங்கள் தொகு

ஆர். சுதர்சனம் இசையமைத்த சில மலையாளத் திரைப்படங்களின் பட்டியல்:[10]

 • குடும்பம்
 • திரிச்சடை

பெற்ற விருதுகளும், சிறப்புகளும் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 Narasimham, M. L. (18 March 2019). "'Premanandamaya’ is the song of the besotted" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/rewind-lakshmi-bais-voice-and-r-sudarsanams-music-made-the-song-premanandamaya-a-hit/article26569195.ece. 
 2. "List of Malayalam Songs composed by R Sudarsanam". https://www.malayalachalachithram.com/listsongs.php?md=1121. 
 3. "R.Sudarsanam" (in en-US). https://tamilmoviesdatabase.com/celebrity/r-sudarsanam/. 
 4. "Indian Heritage – Old Thamizh film songs – Music Director – R.Sudarsanam". http://www.indian-heritage.org/flmmusic/rsudars.html. 
 5. "Sri Valli (1945 film)", Wikipedia (in ஆங்கிலம்), 26 May 2020, retrieved 8 September 2020
 6. "Today is the 100th birth anniversary of the legendary composer". https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/today-is-the-100th-birth-anniversary-of-the-legendary-composer.html. 
 7. "AVM, the adventurer" இம் மூலத்தில் இருந்து 6 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606112337/http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2006072802680100.htm&date=2006%2F07%2F28%2F&prd=fr&. 
 8. "Music by R Sudarsanam". http://www.indian-heritage.org/flmmusic/rsudars.html. பார்த்த நாள்: சனவரி 25, 2015. 
 9. "Archives for R.Sudarsanam" இம் மூலத்தில் இருந்து 2015-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150910113634/http://vellitthirai.com/music-director/r-sudarsanam/. பார்த்த நாள்: சனவரி 25, 2015. 
 10. "List of Malayalam Songs composed by R Sudarsanam". http://www.malayalachalachithram.com/listsongs.php?md=1121. பார்த்த நாள்: சனவரி 25, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சுதர்சனம்&oldid=3603610" இருந்து மீள்விக்கப்பட்டது