மாமியார் மெச்சின மருமகள்

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாமியார் மெச்சின மருமகள் ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். 1959-ஆம் ஆண்டு கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், எம். என். ராஜம், ஜி. வரலட்சுமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2]

மாமியார் மெச்சின மருமகள்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஎம். சரவணன்
திரைக்கதைகலைப்பித்தன்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
எம். என். ராஜம்
ஜி. வரலட்சுமி
டி. வி. நாராயணசுவாமி
தாம்பரம் லலிதா
மற்றும் பலர்
ஒளிப்பதிவுஎஸ். மாருதி ராவ்
படத்தொகுப்புபஞ்சாபி
கலையகம்ஏவிஎம்
வெளியீடுசனவரி 23, 1959 (1959-01-23)(இந்தியா)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

வரலட்சுமி ஒரு பணக்காரப் பெண்மணி. அவருக்குக் குழந்தைகள் இல்லை. தனது மருமகன் எஸ். எஸ். ராஜேந்திரனை தன் மகனாக வளர்த்து வருகிறார். மகனுக்குத் திருமணம் செய்து வைத்து ஒரு பேரப்பிள்ளையைக் காணவேண்டும் என்பது வரலட்சுமியின் ஆசை. எஸ். எஸ். ஆர். ஏழைப்பெண்ணான எம். என். ராஜத்தைக் காதலிக்கிறார். ஆனால் வரலட்சுமி அவர்கள் திருமணம் செய்வதை விரும்பவில்லை. அன்னையின் விருப்பத்தை மீறி எஸ். எஸ். ஆர். ராஜத்தைத் திருமணம் செய்கிறார். வரலட்சுமி இருவரையும் வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்.

பின்னர் எம். என். ராஜம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். எப்படி வரலட்சுமியின் அன்பை மீண்டும் வென்றெடுத்து குடும்பம் மீண்டும் ஒன்றாகி மகிழ்ச்சியான வாழ்வுக்குத் திரும்புகிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

நடிகர்கள் தொகு

எஸ். எஸ். ராஜேந்திரன்
எம். என். ராஜம்
ஜி. வரலட்சுமி
டி. வி. நாராயணசாமி
தாம்பரம் லலிதா
‘'அப்பா’' கே. துரைசுவாமி
பக்கிரிசாமி
'லூஸ்’' ஆறுமுகம்
வி. சுசீலா
கே. எம். நம்பிராஜன்
கொட்டாப்புளி ஜெயராமன்
வீரப்பன்
கே. என். கமலம்
கரிக்கோல் ராஜு
ரத்தினம்
எஸ். எல். நாராயண்
தங்கப்பன்
சுப்பையா
சின்னையா
தட்சணாமூர்த்தி
சீதாலட்சுமி
வி. டி. கல்யாணம்
மொஹிதீன்
பேபி விஜயா
நடனம்: சாயி - சுப்புலட்சுமி

தயாரிப்புக்குழு தொகு

தயாரிப்பாளர் எம். சரவணன்
இயக்குநர்: கிருஷ்ணன்-பஞ்சு
கதை வசனம்: கலைப்பித்தன்
ஒளிப்பதிவு இயக்குநர்: எஸ். மாருதி ராவ்
எடிட்டிங்: பஞ்சாபி
நடன ஆசிரியர்: கே. என். தண்டாயுதபாணி பிள்ளை

பாடல்கள் தொகு

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை இயற்றியோர்: உடுமலை நாராயண கவி, கவி ராஜ்கோபால் ஆகியோர்.

மாமியார் மெச்சின மருமகள்
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "யோக்கியன் என்று"  டி. எம். சௌந்தரராஜன் 03:20
2. "ரங்கா, ரங்கா"  எம். எல். வசந்தகுமாரி & சீர்காழி கோவிந்தராஜன் 02:45
3. "இங்கே இருப்பதா, அங்கே வருவதா"  எம். எல். வசந்தகுமாரி 03:24
4. "மழையும் பெய்யுது"  டி. எம். சௌந்தரராஜன் 03:24
5. "மைத்துனரே மைத்துனரே"  எம். எல். வசந்தகுமாரி & ஏ. பி. கோமளா 03:26

மேற்கோள்கள் தொகு

  1. "AVM Movies". Archived from the original on 2017-03-16. பார்க்கப்பட்ட நாள் 2016-10-11.
  2. "Maamiyaar Mecchina Marumagal (1959)". thehindu.com. November 8, 2014. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.