எம். என். ராஜம்

மதுரை நரசிம்ம ஆச்சாரி ராஜம்[2] அல்லது எம். என். ராஜம் தென்னிந்திய திரைப்படங்களில் 1950கள் மற்றும் 1960 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். அவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். ஏழு வயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை பாய்ஸ் கம்பனியில் குருகுலமாக நடிப்புப் பயின்ற இவர்[3] ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடித்த வேடம் இவரது திரை வாழ்விற்கு திருப்பமாக அமைந்தது. முதன்மை நாயகியாக, எதிர்மறை வில்லியாக மற்றும் நகைச்சுவை நடிகையாக அனைத்து துறைகளிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் அங்கத்தினராக 1953இல் பதிந்தவர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர்.

மதுரை நரசிம்ம ஆச்சாரி ராஜம்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1949-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஏ. எல். ராகவன் (1960-தற்போது வரை) [1]
பிள்ளைகள்பிரேமலட்சுமணன் (பி. 1963)
நளினா மீனாட்சி (பி. 1969)

இவரது கணவர் ஏ.எல்.ராகவன் ஓர் பின்னணி திரைப்பட பாடகராவார்.[4][5]

திரைப்படங்கள்

தொகு

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The perfect pair". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.
  2. "All's in a letter". Chennai, India: The Hindu. 25 November 2013. http://www.thehindu.com/features/metroplus/alls-in-a-letter/article5389739.ece. 
  3. http://dinamani.com/cinema/article964760.ece
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-26. பார்க்கப்பட்ட நாள் 2013-03-15.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-02-04. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._என்._ராஜம்&oldid=4083812" இலிருந்து மீள்விக்கப்பட்டது