மக்களைப் பெற்ற மகராசி
1957 தமிழ்த் திரைப்படம்
மக்களைப் பெற்ற மகராசி (Makkalai Petra Magarasi) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மக்களைப் பெற்ற மகராசி | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | வி. கே. ராமசாமி ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் ஏ. பி. நாகராஜன் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வி. கே. ராமசாமி கே. சாரங்கபாணி வி. எம். ஏழுமலை எம். என். நம்பியார் பி. டி. சம்பந்தம் சாய்ராம் பானுமதி டி. பி. முத்துலட்சுமி எம். என். ராஜம் சி. டி. ராஜகாந்தம் பி. கண்ணாம்பா சாய் சுப்புலட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 22, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 15523 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் - செங்கோடன்
- ரங்கம்மாவாக பி. பானுமதி
- ப. கண்ணாம்பா -அங்கம்மா
- எம். என். நம்பியார் - கண்ணன்
- எம். என். ராஜம் - தங்கம்
- வி. கே. ராமசாமி - பண்ணையார்/கண்ணனின் தந்தை
- ரங்கம்மாவின் தந்தையாக கே. சாரங்கபாணி
- மாயாண்டியாக ஈ. ஆர். சகாதேவன்
- காடுவெட்டி கணக்குப் பிள்ளையாக பி. டி. சம்பந்தம்
- பவழ மாலையாக வி. எம். ஏழுமலை
- பாவாயி கதாபாத்திரத்தில் டி. பி. முத்துலட்சுமி
- அகிலாண்டமாக சி. டி. ராஜகாந்தம்
- எம். ஆர். சந்தானம்
தயாரிப்பு
தொகுமக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தை வி. கே. ராமசாமியும் இயக்குநர் ஏ. பி. நாகராஜனும் (அப்போது பெரும்பாலும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியவர்) தயாரித்த முதல் திரைப்படமாகும் .[1]
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[2] பாடல்களை அ. மருதகாசி, தஞ்சை இராமையாதாஸ், கா. மு. ஷெரீப், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[3] "மணப்பாறை மாடு கட்டி" என்ற பாடல் சிந்து பைரவி இராகத்தில் அமைக்கப்பட்டது.[1][4]
பாடல். | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம் |
---|---|---|---|
"மணப்பாறை மாடு கட்டி" | டி. எம். சௌந்தரராஜன் | அ. மருதகாசி | 03:25 |
"சொன்ன பேச்சக் கேக்கனும்" | பி. பானுமதி | 03:29 | |
"வந்தது யாருனு" | 02:50 | ||
"மக்களைப் பெற்ற மகராசி" | ஜிக்கி | 02:00 | |
"சீமைக்கு போய் படிச்சவரு" | எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. பி. கோமளா | 04:08 | |
"செந்தாழம் பூவைப் போலே" | கே. ஜமுனா ராணி & ஏ. ஜி. ரத்னமாலா | 03:01 | |
"அடி தாராபுரம் தாம்பரம்" | எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. ஜி. ரத்னமாலா | தஞ்சை இராமையாதாஸ் | 02:41 |
"போறவளே போறவளே பொன்னுரங்கம்" | டி. எம். சௌந்தரராஜன் & பி. பானுமதி | 03:15 | |
"ஓ மல்லியக்கா ஓ ரோஜாக்கா" | ஜிக்கி, கே. ஜமுனா ராணி & ஏ. ஜி. ரத்னமாலா | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 05:55 |
"ஒன்று சேர்ந்த அன்பு" | பி. பி. ஸ்ரீனிவாஸ் & உடுத சரோஜினி | ஏ. மருதகாசி | 03:22 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 ராமசாமி, வி. கே. (6 April 1997). "சாவித்திரி கொடுத்த ஷாக்!" (PDF). Kalki. pp. 32–35. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
- ↑ "Makkalai Petra Maharasi". JioSaavn. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.
- ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. pp. 130–131.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Charulatha Mani (10 May 2013). "Light and melodious". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180723083947/https://www.thehindu.com/features/friday-review/music/light-and-melodious/article4702358.ece.