வி. எம். ஏழுமலை
வி. எம். ஏழுமலை (V. M. Ezhumalai) ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1939 ஆம் ஆண்டிலிருந்து 1960 வரை பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். இவரது உடல் மொழி, வாய் மொழி இரண்டிலும் நகைச்சுவை இருக்கும். தனக்கென ஒரு தனிப்பாணி வகுத்து அதன் படி அங்க சேஷ்டைகளின் மூலம் பார்ப்பவர்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பார்.
திரையுலகுக்கு வந்த சிறிது காலம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் நடிகராகப் பணியாற்றினார். அப்போது இவருடன் ஏனைய நகைச்சுவை நடிகர்களான காளி என். ரத்தினம், ஏ. கருணாநிதி போன்றோரும் அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
நடித்த திரைப்படங்கள்
தொகுவரிசை எண் |
திரைப்படம் | கதாபாத்திரம் | வெளியான நாள் |
---|---|---|---|
1 | வள்ளாள மகாராஜா | 1937 | |
2 | சிரிக்காதே | 23.12.1939 | |
3 | ராஜயோகம் | 21.09.1940 | |
4 | தயாளன் | 20.12.1941 | |
5 | நாடகமேடை | 19.04.1942 | |
6 | திவான் பகதூர் | 28.10.1943 | |
7 | பர்மா ராணி | 1945 | |
8 | சண்பகவல்லி | 20.02.1948 | |
9 | காமவல்லி | 20.03.1948 | |
10 | வாழ்க்கை | அசம்பாவிதம் | 22.12.1949 |
11 | திகம்பர சாமியார் | சுந்தரம் பிள்ளை | 31.08.1950 |
12 | தேவகி | வைத்தியர் | 21.06.1951 |
13 | ஜமீன்தார் | 30.08.1952 | |
14 | மதன மோகினி | 14.03.1953 | |
15 | பொன்னி | சொக்கன் | 26.06.1953 |
16 | நால்வர் | 05.11.1953 | |
17 | நல்லகாலம் | 19.05.1954 | |
18 | மாங்கல்யம் | 22.05.1954 | |
19 | மலைக்கள்ளன் | சடையன் | 22.07.1954 |
20 | கூண்டுக்கிளி | 26.08.1954 | |
21 | மிஸ்ஸியம்மா | பள்ளிக்கூட வாத்தியார், வைத்தியர் | 14.01.1955 |
22 | பெண்ணரசி | 07.04.1955 | |
23 | குணசுந்தரி | 02.12.1955 | |
24 | நான் பெற்ற செல்வம் | பொய்யாமொழி | 14.01.1956 |
25 | மக்களைப் பெற்ற மகராசி | 22.02.1957 | |
26 | மாயாபஜார் | சின்னமாயா | 27.03.1957 |
27 | நல்ல இடத்து சம்பந்தம் | 14.02.1958 | |
28 | கடன் வாங்கி கல்யாணம் | 17.09.1958 | |
29 | அதிசய திருடன் | 12.12.1958 | |
30 | கலைவாணன் | மாரி | 09.04.1959 |
31 | எல்லோரும் வாழவேண்டும் | 14.04.1962 |
உசாத்துணை
தொகு- "V.M.Ezhumalai". antrukandamugam.wordpress.com. Archived from the original on 2016-11-06. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.