சிரிக்காதே
சிரிக்காதே 1939 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ ரஞ்சனி டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளிவந்தது.
சிரிக்காதே | |
---|---|
தயாரிப்பு | ஸ்ரீ ரஞ்சனி டாக்கீஸ் |
நடிப்பு | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி. எம். ஏழுமலை, டி. எஸ். துரைராஜ், எம். எஸ். முருகேசன், பி. எஸ். ஞானம் |
விநியோகம் | ஜெமினி பிக்சர்ஸ் |
வெளியீடு | 1939 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி. எம். ஏழுமலை, டி. எஸ். துரைராஜ், எம். எஸ். முருகேசன், பி. எஸ். ஞானம் எனப் பலர் இதில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அடங்காபிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன், யம வாதனை, ஆகிய தனித்தனிக் கதைகளின் தொகுப்பாக தயாரிக்கப்பட்டது.[1] எஸ். எஸ். வாசன் இதன் விநியோக உரிமையை பெற்று வெளியிட்டார்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ பலே.. பலே.. 'பஃபே' விருதுகள்!, கட்டுரை, எஸ். எஸ். லெனின், இந்து தமிழ் (நாளிதழ்), 2020 திசம்பர் 4
- ↑ "Tamil cinelma pioneers- S.S. vasan's Chandralekha to chandrahasam - சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை...!- வாசன் விதைத்த பிரம்மாண்டம் ( தொடர்-12)". www.vikatan.com. 2016-04-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 நவம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.