மாலைக்கண்
மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாமல் போவது.
மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் ‘இணக்கம்’ செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது.
இந்த மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறைதான். குழந்தைகளுக்கு மூன்று வயது முதலே பால், கீரை, பப்பாளி, கேரட், மீன், முட்டை, பழங்கள் கொடுத்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நிறுத்திவிடலாம்.