பப்பாளி

பழவகைத்தாவர இனங்களில் ஒன்று
பப்பாளி
கோயெலர்-ன்மெடிசினல்-ப்லான்ட்ஸ்-லிருந்து (1887), பப்பாளிப் பழமும் மரமும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Brassicales
குடும்பம்:
Caricaceae
பேரினம்:
Carica
இனம்:
C. papaya
இருசொற் பெயரீடு
Carica papaya
L.
பப்பாளியின் குருத்துகள்

பப்பாளி அல்லது பப்பாசி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. எளிதில் கிடைப்பது விலை மலிவானது எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.

பப்பாளி மரத்தின் தோற்றம்

தொகு

பப்பாளி மரத்தின் இலைகள் ஆமணக்கு செடியின் இலைகளின் வடிவத்தை ஒத்திருக்கும். நெடு நெடு என்று விரைவாக வளரக் கூடிய மரமாகும். பப்பாளி மரம் இலைகளை உதிா்த்து தழும்புகளை உண்டாக்கி விடுவதால் அடி முதல் நுனி வரை சொரசொரப்பான மேடு பள்ளங்களை கொண்டிருக்கும். இது சுமாா் பத்து மீட்டா் வரை வளரும்.பப்பாளி மரம் இருபது ஆண்டுகள் வரை உயிா் வாழும்.

பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள்

தொகு

பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது [1].இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் சி யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும்.[2]

பப்பாளியின் வகைகள்

தொகு
  • வாஷிங்டன் பப்பாளி
  • கனி டியு
  • சோலா சன்ரைஸ்
  • சோலா வைமினாலோ
  • கோவை பப்பாளி
  • கூா்க் பப்பாளி
  • பாங்காக் பப்பாளி
  • சிலோன் பப்பாளி
  • பிலிப்பைன்ஸ் பப்பாளி

கனி டியு பப்பாளி வகையானது விதைகளற்றதால் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பாளி&oldid=3896396" இலிருந்து மீள்விக்கப்பட்டது