மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடல், கரிபியன் கடல் பகுதிகளிலுள்ள மண்டலம் ஆகும்; இது அண்டிலிசு, லுகாயன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தீவுகளையும் தீவு நாடுகளையும் உள்ளடக்கி உள்ளது.[1] அமெரிக்காக்களுக்கான கொலம்பசின் முதல் கடற்பயணங்களை அடுத்து ஐரோப்பியர்கள் மேற்கிந்தியத் தீவுகள் என்ற இந்தப் பொருந்தாப் பெயரை கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து (தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா) வேறுபடுத்திக் குறிப்பிட பயன்படுத்தினர்.

  மேற்கிந்தியத் தீவுகள்
  மேற்கிந்தியத் தீவுகளில் சில நேரங்களில் சேர்க்கப்படும் நாடுகள்
  மேற்கத்திய நியூகினியா
சிறிய அண்டிலிசு தீவுகள் (மேற்கிந்தியா)

வடக்கில் பெரிய அண்டிலிசு, தெற்கிலும் கிழக்கிலும் சிறிய அண்டிலிசு உள்ளடக்கிய கரிபியன் தீவுகள், பெரிய மேற்கிந்தியத் தீவுகள் தொகுப்பில் அடக்கமாகும். மேற்கிந்தியத் தீவுகளில் இத்தீவுக்கூட்டங்களைத் தவிர பெரிய அண்டிலிசுக்கும் கரிபியக் கடலுக்கும் வடக்கே உள்ள லுகாயன் தீவுக்கூட்டத்தையும் (பகாமாசு மற்றும் துர்கசு கைகோசு தீவுகள்) உள்ளடக்கியது. பரந்த கோணத்தில் பெருநிலப் பகுதியில் உள்ள பெலீசு, வெனிசுவேலா, கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானா நாடுகளும் மேற்கிந்தியத் தீவுகள் வரையறைக்கு உட்படுகின்றன. .

உள்ளடக்கியவை தொகு

தற்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எனக் குறிப்பிடப்படுபவை:

மேற்சான்றுகள் தொகு

  1. Caldecott, Alfred (1898). The Church in the West Indies. London: Frank Cass and Co.. பக். 11. https://books.google.com/books?id=kMUSAAAAYAAJ&pg=PA11. பார்த்த நாள்: 12 December 2013.