லுகாயன் தீவுக்கூட்டம்

லுகாயன் தீவுக்கூட்டம் (Lucayan Archipelago) அல்லது பகாமா தீவுக்கூட்டம் (Bahama Archipelago) பகாமாசு பொதுநலவாயத்தையும் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களில் ஒன்றான துர்கசு கைகோசு தீவுகளையும் அடக்கிய தீவுக் குழு ஆகும். இந்தத் தீவுக்கூட்டம் மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், அண்டிலிசுக்கு வடக்கே, புளோரிடாவிற்கு கிழக்கு, தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.

லுகாயன் தீவுக்கூட்டம்
Lucayan Archipel
கரிபியனில் அமைவிடம்
கரிபியனில் அமைவிடம்
மண்டலம்கரிபியன்
நாடுகளும் ஆட்புலங்களும்
பரப்பளவு
 • மொத்தம்14,308 km2 (5,524 sq mi)
மக்கள்தொகை
 (2009)
 • மொத்தம்3,67,536
 • அடர்த்தி24.6/km2 (64/sq mi)
நேர வலயம்ஒசநே−5 (ஈஎஸ்டி)
 • கோடை (பசேநே)ஒசநே−4 (EDT)

பகாமா தீவுக்கூட்டத்தில் உள்ள தீவுகள் அரசியல்வழியே பிரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டும் பொதுவான நிலவியல், சூழலியல்,பண்பாட்டுக் கூறுகளை கொண்டுள்ளன என்று வில்லியம் கீகன் கூறுகிறார். [1] இத்தீவுக் கூட்டத்தில் உள்ள இரு நாடுகளும் கரிபியக் கடலை எல்லையாகக் கொண்டில்லாமையால் இவை மேற்கிந்தியத் தீவுகளாக இருப்பினும் கரிபியத் தீவுகளாக கருதப்படுவதில்லை. இருப்பினும் வசதிக்காக பெரும்பாலும் கரிபியன் நாடுகளுடன் சேர்க்கப்படுகின்றன.

கூட்டரசுக்கான முன்மொழிவு

தொகு

பகாமாசு மற்றும் துர்கசு கைகோசு தீவுகளின் தலைவர்கள் இவை இரண்டும் இணைந்து கூட்டரசு நிறுவதற்கான வாய்ப்புக்களை 2010இல் விவாதித்தனர்.[2]

நாடுகளும் ஆட்புலங்களும்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு

மேலும் அறிய

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுகாயன்_தீவுக்கூட்டம்&oldid=3352067" இலிருந்து மீள்விக்கப்பட்டது