கிழக்கிந்தியத் தீவுகள்

கிழக்கிந்தியத் தீவுகள் அல்லது இந்தியத் தீவுகள் (Indies) அல்லது (East Indies) என்ற சொல்லாடல் இந்திய ஒன்றியம், பாக்கித்தான், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, மாலைத்தீவுகள் மேலும் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், புரூணை, சிங்கப்பூர், பிலிப்பீன்சு, கிழக்குத் திமோர், மலேசியா மற்றும் இந்தோனேசியா உள்ளடக்கிய தெற்கு மற்றும் தென்கிழக்காசியா பகுதிகளைக் குறிக்கும். குறிப்பாக தென்கிழக்காசியாவின் தீவுகளைக் குறிக்க இன்டீசு என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.[1][2] இந்தியப் பண்பாட்டுத் தாக்கம் மிக்க பகுதிகளைக் குறிப்பதற்கான இச்சொல் சிந்து ஆற்றை ஒட்டி ஐரோப்பிய மொழிகளில் உருவாகியுள்ளது.

கிழக்கிந்தியத் தீவுகளின் 1801 வருடத்திய நிலப்படம்.
  கிழக்கந்தியத் தீவுகள்
  இந்தீசு
  மேற்கத்திய நியூ கினியா
  சிலநேரங்களில் மேற்கத்தியத் தீவுகளின் உள்ளடக்கமாக கொள்ளப்படும் நாடுகள்

ஏறத்தாழ 300 ஆண்டுகளாக டச்சுக்காரர்களின் குடிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த பகுதிகள் (தற்போதைய இந்தோனேசியா) டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள் எனப்படுகின்றன. எசுப்பானிய ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் (தற்கால பிலிப்பீன்சு) எசுப்பானியக் கிழக்கிந்தியத் தீவுகள் எனப்பட்டன. கிழக்கிந்தியத் தீவுகளில் பிரான்சிய இந்தோசீனா, புரூணை, சிங்கப்பூர் போர்த்துகேசிய கிழக்குத் திமோர் ஆகியவையும் அடங்கும். ஆனால் டச்சு ஆதிக்கத்தில் இருந்த மேற்கு நியூ கினியா (மேற்கு பப்புவா) புவியியல்படி மெலனீசியாவின் அங்கமாகக் கருதப்படுவதால் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

மேற்சான்றுகள் தொகு

  1. Oxford Dictionary of English 2e, Oxford University Press, 2003, "East Indies/East India"
  2. Britannica.com "East Indies"