தொகைத் திரைப்படம்

பல்வேறு குறும்படங்களைக் கொண்ட திரைப்படம்

தொகைத் திரைப்படம் அல்லது தொகுப்புத் திரைப்படம் (Anthology film) என்பது பல குறும்படங்களைக் கொண்ட ஒரு திரைப்படமாகும். ஒவ்வொரு குறும்படமும் தன்னளவில் முழுமையடைந்து மற்றொன்றிலிருந்து வேறுபட்டு இருக்கும். இருப்பினும் சிலசமயங்களில் ஒரே கருப்பொருள் அல்லது ஒரே எழுத்தாளரின் சிறுகதைகளைக் கொண்ட படைப்பாக இருக்கலாம். சில நேரங்களில் ஒவ்வொறு குறும்படமும் வெவ்வேறு இயக்குநரால் இயக்கப்பட்டவை அல்லது வெவ்வேறு ஆசிரியரால் எழுதப்பட்டவை, அல்லது வெவ்வேறு காலங்களில் அல்லது வெவ்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். தமிழில் 1939 இல் வெளியான சிரிக்காதே திரைப்படமே தமிழின் முதல் தொகைத் திரைப்படமாக கருதப்படுகிறது.[1]

தமிழில் சில எடுத்துக்காட்டுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பலே.. பலே.. 'பஃபே' விருதுகள்!, கட்டுரை, எஸ். எஸ். லெனின், இந்து தமிழ் (நாளிதழ்), 2020 திசம்பர் 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகைத்_திரைப்படம்&oldid=3850146" இலிருந்து மீள்விக்கப்பட்டது