சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

2018 திரைப்படம்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (Sivaranjiniyum Innum Sila Pengalum) என்பது 2021 ஆம் ஆண்டு வசந்த் எஸ் சாய் இயக்கிய இந்திய தமிழ்த் தொகுப்புத் திரைப்படமாகும்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
இயக்கம்வசந்த் எஸ் சாய்
தயாரிப்புவசந்த் எஸ் சாய்
திரைக்கதைவசந்த் எஸ் சாய்
இசைஇளையராஜா
நடிப்புலட்சுமி பிரியா சந்திரமெளலி
பார்வதி மேனன்
காளீஸ்வரி சீனிவாசன்
கருணாகரன்
சுந்தர் ராமு
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
வைடு ஆங்கிள் இரவிசங்கர்
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்ஹம்சா புரொடக்சன்ஸ்
விநியோகம்SonyLIV
வெளியீடுஅக்டோபர் 2018 (2018-10)( 26வது மும்பைத் திரைப்பட விழா) நவம்பர் 2021 ( மேலதிக ஊடக சேவை )
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பாடல்கள் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி வடிவமைத்த ஒலிகளைக் கொண்டுள்ளது. படத்தின் தயாரிப்பு 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. 2018இல் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இறுதியாக மேலதிக ஊடக சேவை தளமான SonyLIV மூலம் வெளியிடப்பட்டது. திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்தது.[1]

கதைச் சுருக்கம் தொகு

அசோக மித்திரன் (விமோசனம்), ஆதவன் (ஓட்டம்), ஜெயமோகன் (தேவகி சித்தியின் நாட்குறிப்பு) ஆகிய எழுத்தாளர்கள் எழுதிய மூன்று பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகள் இந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளன.[2] லட்சுமி பிரியா சந்திரமெளலி, பார்வதி மேனன், காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

படத்தின் தயாரிப்பு பணிகள் சனவரி 2015இல் தொடங்கியது. இயக்குநர் வசந்த் எஸ் சாய், பார்வதி மேனன், நடிகர் கருணாகரன் ஆகியோர் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகளைத் தொடங்கினார்.[3] பெண்களை மையமாகக் கொண்ட படம் என்று வசந்த் குறிப்பிட்டார். தனது மறைந்த வழிகாட்டியான கே. பாலச்சந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். பாலச்சந்தர் தனது படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை அடிக்கடி சித்தரித்தார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ஆதவன், அசோகமித்திரன் ஆகியோர் பெண்களை மையமாகக் கொண்ட எழுதிய மூன்று சிறுகதைகள் இந்தப் படத்தில் படமாக்க இருப்பது தெரியவந்தது.[4][5]

செப்டம்பர் 2015 இல் பூஜா குமார் இடம்பெறும் காட்சிகளை வசந்த் படமாக்கினார். ஆனால் பின்னர் திரைக்கதையை மாற்றி அந்த நடிகையை திட்டத்தில் இருந்து நீக்கினார்.[6] தீபன் (2015) திரைப்படத்தின் முன்னணி நடிகையான காளீஸ்வரி சீனிவாசனும் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க நியமிக்கப்பட்டார்.[7] ஆகஸ்ட் 2016 இல், படம் "எழுபது சதவிகிதம்" முடிந்ததாக வசந்த் தெரிவித்தார்.[8] நவம்பர் 2017இல், பார்வதி படத்தின் வேலைகளை முடித்துவிட்டதாகவும், 1990களின் முற்பகுதியில் பணிபுரியும் பெண்ணாக நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் படம் சிறிய தொகையில் எடுக்கப்பட்டதாகவும், பெரிய படத்தொகுப்பைக் காட்டிலும் ஒரே அறையில் ஆக்கப் பணிகள் நடந்ததாகவும் வசந்த் கூறினார்.[9] சல்சன் ஜோஸ் டால்பி அட்மாஸ் கலவை பொறியாளராகப் பணியாற்றினார்.

வெளியீடு தொகு

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரையரங்குகளில் வெளிவருவதைத் தவிர்த்துவிட்டன. ஆனால் 26 நவம்பர் 2021 அன்று SonyLIV இல் வெளியானது.[10][11]

வரவேற்பு தொகு

தி இந்து, இயக்குனர் வசந்த் "மூன்று காலகட்டங்களில் பெண்களின் மனதில் ஆழமாக ஆழமாக ஊடுருவும் ஒரு சக்திவாய்ந்த தொகுப்பை உருவாக்கியுள்ளார்" என எழுதியது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்தைப் பாராட்டி 5க்கு 4.0 மதிப்பீட்டை வழங்கி, "அற்புதமாக தயாரிக்கப்பட்டுள்ளது" எனவும் எழுதியது.[12]

சான்றுகள் தொகு

  1. "Director Vasanth: I want people to remember my films!". சிஃபி. 16 August 2021. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
  2. "இயக்குநர் வசந்த் கைவண்ணத்தில் படமாகிய சிறுகதைகள்!".
  3. "Vasanth, Padmapriya together again - Tamil News". IndiaGlitz.com. 14 January 2015.
  4. Rao, Subha J. (26 January 2015). "A tale inspired by water" – via www.thehindu.com.
  5. "Padmapriya in Vasanth's pro-women film - Times of India". The Times of India.
  6. "Pooja Kumar in Vasanth's film - Times of India". The Times of India.
  7. "'Dheepan' lead pair reunite for Tamil project". 3 November 2015.
  8. "Director's cut". 18 August 2016 – via www.thehindu.com.
  9. Shetty, Karishma. "Exclusive! Parvathy talks about her upcoming film with Anjali Menon and how she deals with social media hate". Pinkvilla.
  10. "https://twitter.com/sonyliv/status/1458426716867682314". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-10. {{cite web}}: External link in |title= (help)
  11. "Vasanth's acclaimed Tamil film Sivaranjaniyum Innum Sila Pengalum to have a direct release on Sony LIV". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  12. M, Suganth (November 28, 2021). "Sivaranjiniyum Innum Sila Pengalum Movie Review". Times of India. https://timesofindia.indiatimes.com/web-series/reviews/tamil/sivaranjiniyum-innum-sila-pengalum/ottmoviereview/87830357.cms. 

வெளி இணைப்புகள் தொகு