கருணாகரன் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
கருணாகரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். சூது கவ்வும் திரைப்படத்தில் அருமை பிரகாசம் என்ற வேடத்தில் நடித்தார். தொடர்ந்து ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி.யின் கலகலப்பு திரைப்படத்தில் அறிமுகமான இவர் ரசினிகாந்தின் லிங்கா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]
கருணாகரன் | |
---|---|
பணி | திரைப்பட நடிகர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2012 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | தென்றல் |