ஆடாம ஜெயிச்சோமடா
ஆடாம ஜெயிச்சோமடா 2014 ஆம் ஆண்டு கருணாகரன், பாபி சிம்ஹா மற்றும் விஜயலட்சுமி நடிப்பில், பத்ரி இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3]. அஜித்குமார் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரியான "ஆடாம ஜெயிச்சோமடா" என்பது இப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது. இப்படம் துடுப்பாட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடக்கும் ஊழல் பற்றிக் கூறுகிறது. நடிகர் சிவா இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்[4][5]. படம் வணிகரீதியில் வெற்றி பெற்றது[6].
ஆடாம ஜெயிச்சோமடா | |
---|---|
இயக்கம் | பத்ரி |
தயாரிப்பு | பி. மதுசூதனன் |
கதை | சிவா (வசனம்) |
திரைக்கதை | பத்ரி டி. செந்தில்குமரன் |
கதைசொல்லி | சிவா |
இசை | ஷான் ரோல்டன் |
நடிப்பு | கருணாகரன் பாபி சிம்ஹா விஜயலட்சுமி ஆடுகளம் நரேன் கே. எஸ். ரவிக்குமார் ராதாரவி சேத்தன் |
ஒளிப்பதிவு | துவாரகாநாத் |
படத்தொகுப்பு | கே. ஜே. வெங்கட்ரமணன் |
கலையகம் | பி&சி பிலிம்ஸ் |
வெளியீடு | 19 செப்டம்பர் 2014 |
ஓட்டம் | 133 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கருணாகரன் - பன்னீர்
- பாபி சிம்ஹா - காவல் ஆய்வாளர் பூமிநாதன்
- விஜயலட்சுமி - ரமா
- பாலாஜி வேணுகோபால் - தயாளன்
- கே. எஸ். ரவிக்குமார் - காவல் ஆணையர்
- ஆடுகளம் நரேன் - தயாரிப்பாளர்
- ராதாரவி - தயாரிப்பாளர்
- சேத்தன் - காவலர் மாரிதாஸ்
- கவுதம் சுந்தர்ராஜன் - நாட்டாமை
- தளபதி தினேஷ்
- விச்சு விஸ்வநாத்
இசை
தொகுபடத்தின் இசையமைப்பாளர் சான் ரோல்டன்.[7] இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சுந்தர் சி. வெளியிட கே. பாக்யராஜ் மற்றும் டி. ராஜேந்தர் பெற்றுக்கொண்டனர்[8][9]. பாடலாசிரியர்கள் பா.விஜய், ரமேஷ் வைத்யா, ஜி.கே.பி. மற்றும் சான் ரோல்டன்.
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | நாளெல்லாம் | சக்திஸ்ரீ கோபாலன் | 3:18 |
2 | நல்லா கேட்டுக்க பாடம் | சான் ரோல்டன், ஏ. எல். ராகவன் | 3:29 |
3 | ஓடுற நரி | சான் ரோல்டன் | 4:44 |
4 | ஒன் டே என்னும் மேச் | அல்போன்ஸ் ஜோசப் | 4:02 |
5 | தனியிலே | பிரதீப் குமார், திவ்யா ரமணி | 3:58 |
விமர்சனம்
தொகுதி இந்து தமிழ்: விளையாட்டில் நடக்கும் ஊழல்களை பேசிய படங்களான லீ, வல்லினம், எதிர்நீச்சல் ஆகிய படங் களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது ‘ஆடாம ஜெயிச்சோமடா’[10].
தினமலர்: எல்லோரும் பார்த்து, ரசித்து, சிரிக்க வேண்டிய படம்[11].
தமிழ் வெப்துனியா: திரைப்படத்தில் ஒரு காட்சியில் தனிக் கழிவறை வேண்டும் எனக் கேட்பது, அவரது ஒற்றைக் குரல் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களின் கோரிக்கை. அதை வெட்கப்படாமல் திரையில் நடித்ததன் மூலம், அவர் இந்தத் தேவையை உலகறியச் செய்திருக்கிறார். அதற்காக அவரையும் இயக்குநர் பத்ரியையும் பாராட்டலாம்[12][13].
பிகைண்ட் பிரேம்ஸ்: பொருத்தமான ஆட்டக்காரர்களை தேர்வு செய்ததிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டார் இயக்குனர் பத்ரி[14].
தமிழ்ச்சினிடாக்: கோடிக்கணக்கணக்கான இந்தியப் பெண்களின் மனதில் ஒளிந்திருக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் பதிவு செய்திருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு அன்பான பாராட்டு[15].
அட்ராசக்க.காம்: வசனம் படத்துக்கு பலம்[16].
எழுத்து.காம்: ஆடாமல் எப்படி ஜெயித்தார்கள் என்பதைப் பார்க்கலாம்[17].
நியூ தமிழ் சினிமா: கிரிக்கெட் சூதாட்டம் பற்றி படத்தில் சிறுவர்களின் கிரிக்கெட்டை வைத்தே எளிய விளக்கம் கொடுக்கும் போது நிமிர்கிறார் பத்ரி[18].
டாப்10சினிமா: நகைச்சுவை விளையாட்டு[19].
மாலைமலர்: 100க்கு 51 மதிப்பெண்கள்[20].
நம்ம தமிழ் சினிமா: நேர்மையாக, நியாயமாக, சிரத்தையாக திரைக்கதை மற்றும் வசனத்தில் நன்றாக ஆடியதால் ஜெயித்து இருக்கிறார்கள்[21]
4தமிழ் சினிமா: ஆடாம ஜெயிச்சோமடா இவ்வருடத்தில் வெளியான படங்களில் குறிப்பிடத்தகுந்த படமாகும்[22].
கிறுக்கல்.ப்லாக்ஸ்பாட்: மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதே பாணியில் வெளி வந்திருக்கும் படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா[23].
படவசூல்
தொகுஇப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று முதல் வாரத்தில் ரூ. 4 கோடி வசூல் செய்தது. மொத்ததில் இப்படத்தின் வசூல் ரூ. 10.22 கோடி ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆடாம ஜெயிச்சோமடா".
- ↑ "ஆடாம ஜெயிச்சோமடா".
- ↑ "நடிகர்கள்".
- ↑ "கிரிக்கெட் ஊழல் - மிர்ச்சி சிவா வசனம்". Archived from the original on 2020-09-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "சிவா வசனம்".
- ↑ "வெற்றி விழா".
- ↑ "இசையமைப்பாளர் - பாடலாசிரியர்கள்".
- ↑ "பாடல் வெளியீடு".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பாடல் வெளியீடு".
- ↑ "இந்து - விமர்சனம்".
- ↑ "தினமலர் மற்றும் குமுதம் - விமர்சனம்".
- ↑ "வெப்துனியா - விமர்சனம்".
- ↑ "தமிழ் வெப்துனியா - விமர்சனம் 2".
- ↑ "விமர்சனம்".
- ↑ "விமர்சனம் - தமிழ் சினி டாக்".
- ↑ "விமர்சனம் - அட்ராசக்க".
- ↑ "விமர்சனம் - எழுத்து".
- ↑ "விமர்சனம் - நியூ தமிழ் சினிமா".
- ↑ "டாப் 10 சினிமா - விமர்சனம்". Archived from the original on 2014-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
- ↑ "விமர்சனம் - மாலைமலர்".
- ↑ "நம்மதமிழ்சினிமா - விமர்சனம்".
- ↑ "விமர்சனம்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "விமர்சனம்".