ஷான் ரோல்டன்

கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் தமிழ்திரைப்பட பின்னணிப் பாடகர்

ஷான் ரோல்டன் ( Sean Roldan ) என்பவர் கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் தமிழ்திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவரது இயற்பெயர் இராகவேந்திரா ஆகும். இந்தப் பெயரிலேயே கர்நாடக இசைப்பாடகராக மேடையேறுகிறார். இவர் பாலாஜி மோகனின் தமிழ்-மலையாளப் படமான வாயை மூடி பேசவும் / சம்சாரம் ஆரோக்யதின்னு ஹனிகாரம் (2014) படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.[1]

ஷான் ரோல்டன்
பிறப்புசென்னை

வாழ்க்கை

தொகு

இராகவேந்திரனின் பெற்றோர் மிருதங்கக் கலைஞரான ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் மற்றும் பத்மா ஆகியோராவர். இவரின் தாயாரான பத்மா தமிழ் வரலாற்றுப் புதின எழுத்தாளரான சாண்டில்யனின் மகள் ஆவார். தாத்தாவின் பெயரான சாண்டில்யன் என்பதை சான் என சுருக்கிக்கொண்டுள்ளார்.[2] இவர் ஒரு பக்கம், கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடுகிறார். மற்றொரு பக்கம் ‘ஷான் ரால்டன் அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்னும் இசைக் குழுவின் இசையமைப்பாளர், பாடகர், கித்தார் கலைஞர் மற்றும் பாடலாசிரியராக உள்ளார்.[3]

திரையிசையில்

தொகு

இசைக்கலைஞராக

தொகு
ஆண்டு
தமிழ் பிற மொழி குறிப்பு
2014 வாயை மூடி பேசவும்

சம்சாரம்

ஆராக்யதினு
ஹானிகாரம்

சதுரங்க வேட்டை
முண்டாசுப்பட்டி
ஆடாம ஜெயிச்சோமடா
2015 144
2016 ஜோக்கர்
2017 பா பாண்டி
நெருப்புடா
கதா நாயகன்
வேளையில்லா பட்டதாரி 2 தெலுங்கு, இந்தி
2018 காத்திருப்பு பட்டியல்
2019 மெகந்தி சர்கஸ்
ராட்சசி
2020 தாரால பிரபு "காதல் தீவே" பாடல் மட்டும்
2021 கசட தபர "நீ போதும் கண்ணா" பாடல் மட்டும்
ஜெய் பீம்
2022 பறை

பாடகராக

தொகு
ஆண்டு படம் பாடல்
2014 ஜிகர்தண்டா ஹோ ஹா
2014 குக்கூ மனசுல

சூறக் காத்தே

2014 குக்கூ பொட்ட புள்ள
2015 நானும்

ரௌடிதான்

கண்ணானக்

கண்ணே

2016 இறுதிச்சுற்று
வா மச்சானே
ஜில் ஜங் ஜக் ரெட் ரோட் உ
ஒரு நாள்

கூத்து

அடியே

அழகே

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.indiaglitz.com/balaji-mohan-has-a-keen-music-sense-sean-roldan-tamil-news-104731
  2. "புறப்படும் புதிய இசை! - இசை அறை ஒண்ணு விழுந்துச்சு!". தி இந்து (தமிழ்). 1 ஏப்ரல் 2016. Retrieved 23 சூன் 2016.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-28. Retrieved 2016-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷான்_ரோல்டன்&oldid=3754355" இலிருந்து மீள்விக்கப்பட்டது