சதுரங்க வேட்டை
வினோத் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சதுரங்க வேட்டை (Sathuranga Vettai) 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எச். வினோத் இயக்கியிருந்தார். நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் இசாரா நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சதுரங்க வேட்டை | |
---|---|
இயக்கம் | எச். வினோத் |
தயாரிப்பு | மனோபாலா சஞ்சய் ராவல் என். சுபாஷ் சந்திரபோஸ் |
கதை | எச். வினோத் |
இசை | ஷான் ரோல்டன் |
நடிப்பு | நடராஜ் இசாரா நாயர் பொன்வண்ணன் இளவரசு |
ஒளிப்பதிவு | வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | ராஜா சேதுபதி |
கலையகம் | மனோபாலா பிச்சர்ஸ் ஹவுஸ் எஸ்ஆர் சினிமா திருப்பதி பிரதர்ஸ் |
விநியோகம் | திருப்பதி பிரதர்ஸ் |
வெளியீடு | சூலை 18, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் போன்ற மக்களை ஏமாற்றும் நபர்களின் உத்திகளை இப்படம் காட்டியது.[1]
நடிகர்கள்
தொகு- நடராஜன் - காந்தி பாபு
- இசாரா நாயர் - பானு
- பொன்வண்ணன் - காவல் அதிகாரி
- இளவரசு - செட்டியார்
- பூக்கடை அ. மனோகரன்.