பொன்வண்ணன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

பொன்வண்ணன் (பிறப்பு: மே 06, 1964)[1] முழு பெயர் பொன்வண்ணன் தேவர். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தார். பல தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் சக நடிகையான சரண்யாவைத் திருமணம் செய்துக்கொண்டார். பலராலும் பாராட்டப்பட்டு விருது பெற்ற ஜமீலா என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

பொன்வண்ணன்
பிறப்பு6 மே 1964 (1964-05-06) (அகவை 60)
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987 - நடப்பு
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சரண்யா (1995-நடப்பு)

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

தொகு

நடிகராக

தொகு
ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்பு
1991 புது நெல்லு புது நாத்து தமிழ் வசனகர்த்தாவாகவும்
1992 அன்னை வயல் தமிழ் திரைக்கதை மற்றும் இயக்கம்
1994 கருத்தம்மா தவசி தமிழ்
1995 பசும்பொன் தமிழ்
1997 பெரிய இடத்து மாப்பிள்ளை செல்லப்பா தமிழ்
1998 வேலை தமிழ்
1999 பூமகள் ஊர்வலம் தமிழ்
2007 பருத்திவீரன் கழுவா தேவன் தமிழ்
நம் நாடு இளமாறன் தமிழ்
பிளாஷ் மலையாளம்
2008 அஞ்சாதே கீர்த்தி வாசன் தமிழ்
வள்ளுவன் வாசுகி தலைவர் தமிழ்
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு முத்துமணி தமிழ்
சிலம்பாட்டம் வீரைய்யன் தமிழ்
2009 அயன் பார்த்திபன் தமிழ்
மாயாண்டி குடும்பத்தார் தவசி மாயாண்டி தமிழ்
முத்திரை ஆதிகேசவன் தமிழ்
பேராண்மை கணபதி ராம் தமிழ்
யோகி தமிழ்
கந்தக்கோட்டை தமிழ்
2010 பொற்காலம் பசுபதி தமிழ்
மாத்தி யோசி தமிழ்
2011 சீடன் தமிழ்
பொன்னர் சங்கர் சின்னமலை கவுண்டர் தமிழ்
சங்கரன்கோவில் மகாலிங்கம் தமிழ்
கதிர்வேல் வேலுச்சாமி தமிழ் படப்பிடிப்பில்

இயக்குனராக

தொகு
ஆண்டு திரைப்படம் நடிப்பு மொழி குறிப்பு
1992 அன்னை வயல் ராஜ்முரளி, வினோதினி தமிழ்
2003 ஜமீலா சுவலட்சுமி, ராம்ஜி தமிழ்

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்வண்ணன்&oldid=3888806" இலிருந்து மீள்விக்கப்பட்டது