அன்னை வயல்

1992இல் வெளியானத் திரைப்படம்

அன்னை வயல் (Annai Vayal) என்பது 1992 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான திரைப்படமாகும். இதை பொன்வண்ணன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விக்னேஷ், ராஜ் முரளி, வினோதினி மற்றும் ராயல்சிறீ ஆகியோர் நடித்துள்ளனர். இது 1992 செப்டம்பர் 25 அன்று வெளியிடப்பட்டு திரையரங்க வசூலில் தோல்வியடைந்தது.

அன்னை வயல்
இயக்கம்பொன்வண்ணன்
தயாரிப்புகுருஜி
கதைபொன்வண்ணன்
இசைசிற்பி
நடிப்பு
ஒளிப்பதிவுகே. வி. மணி
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்சிறீ ராஜராஜேஸ்வரி பிலிம் கார்பொரேஷன்
வெளியீடு27 செப்டம்பர் 1992 (1992-09-27)
நாடுஇந்தியா
மொழிதமிழ்ல்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படத்தின் மூலம் பொன்னண்ணன் இயக்குநராக அறிமுகமானார்.[1] மேலும் படத் தயாரிப்பாளர் குருஜியின் மகன் ராஜ் முரளியும் இந்த படத்தின் மூலம் அறிமுகமானார். வினோதினிக்கு சவிதா ராதாகிருஷ்ணன் பின்னணி குரல் அளித்திருந்தார்.[2]

ஒலிப்பதிவு

தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்திருந்தார்.[3] படம் திரையரங்கில் போதுமான வசூலிலை ஈட்டவில்லை என்றாலும். இரண்டு பாடல்களின் வரிகளை எழுதிய பழநிபாரதிக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.[4]

வெளியீடும் மற்றும் வரவேற்பும்

தொகு

அன்னை வயல் திரைப்படம் 1992 செப்டம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது.[5] இந்தியன் எக்சுபிரசு பத்திரிக்கையின் விமர்சகர் மாலினி மன்னத், முதன்மையாக பொன்னண்ணனின் உரையாடல்கள், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு மற்றும் இசைக்கு நேர்மறையான விமர்சனங்களை வழங்கினார். விக்னேஷ் மற்றும் வினோதினியின் நடிப்பையும் அவர் பாராட்டினார், ஆனால் ராஜ் முரளி "தனது நடிப்பில் அதிக கவனம் கொள்ள வேண்டும்" என்று எழுதினார். தயாரிப்பாளருடனான படைப்பு வேறுபாடுகள் காரணமாக படம் தான் எதிர்பார்த்தபடி வெளிவரவில்லை என்றும் அதனால் படம் திரையரங்கில் தோல்வியடைந்தது என்றும் பொன்வண்ணன் கூறியிருந்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "நடிகர் பொன்வண்ணனின் திருமண ரகசியம் குறித்து பகிரும் எழுத்தாளர் சுரா!". நக்கீரன் (இதழ்). 13 November 2021. Archived from the original on 24 November 2021. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  2. "Women Behind Many Actress Voices | Dubbing Artist Savitha Interview | Simran, Jyothika, Laila, Ivana". IndiaGlitz.com. 9 June 2023. Archived from the original on 3 May 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  3. "Annai Vayal (1992)". Raaga.com (in ஆங்கிலம்). Archived from the original on 7 December 2023. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  4. "ஜெயித்த கதை!" (PDF). Kalki. 21 February 1999. pp. 13–20. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024 – via இணைய ஆவணகம்.
  5. "Annai Vayal (1992)". Screen 4 Screen. Archived from the original on 3 May 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  6. "மறுமுகம் - ஓவியர் பொன்வண்ணன்". Kungumam. 20 December 2019. Archived from the original on 17 July 2024. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னை_வயல்&oldid=4121610" இலிருந்து மீள்விக்கப்பட்டது