வினோதினி
வினோதினி (Vinodhini) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதற்கு முன்பு முன்னணி மற்றும் துணை பாத்திரங்களில் நடித்தார். [1] கன்னட படங்களில் ஸ்வேதா என்று அழைக்கபட்டார்.
வினோதினி | |
---|---|
மற்ற பெயர்கள் | ஸ்வேதா, பேபி லட்சுமி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1982–தற்போது வரை |
தொழில்
தொகுவினோதினி குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மணல் கயிறு, புதிய சகாப்தம் மற்றும் மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட படங்களில் தோன்றினார். [1] 1992 இல், பாலு மகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிதார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்தது. இது தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது மேலும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. [2] என்றாலும் இப்படம் வினோதினியின் திரைப்பட வாழ்க்கையை உயர்த்துவதில் தோல்வியுற்றது. [3] அந்த ஆண்டு, இவர் மலையாள திரைப்படத்தில் சூர்யா மானசம் மற்றும் கன்னட திரையுலகில் சைத்ரதா பிரேமாஞ்சலி படங்களின் வழியாக அறிமுகமானார். அங்கு இவர் ஸ்வேதா என்ற பெயரில் அறிமுகமானார். இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. [4] [5] பிறகு பாலு மகேந்திராவின் மறுபடியும், விசுவின் பட்டுக்கோட்டை பெரியப்பா, ராம நாராயணன்னின் வாங்க பார்ட்னர் வாங்க, [6] கே. எஸ். ரவிக்குமாரின் இரண்டு படங்களான, சூரியன் சந்திரன் மற்றும் முத்துக்குளிக்க வாரீயளா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களில் பெரும்பாலும் இரண்டாம் நிலை பாத்திரங்களிலேயே நடித்தார். 1990 களின் நடுப்பகுதியில் கன்னட படங்களில் தனது கவனத்தை செலுத்தினார், அங்கு இவர் தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்தார். 90 களின் பிற்பகுதியில் மீண்டும் தமிழ் படங்களில் பணியாற்றிய இவர் சிறிய துணை வேடங்களிலும் கௌரவ வேடங்களிலுமே தோன்றினார். இவர் சிறிய பாத்திரத்தில் தோன்றிய படங்களில் பிரவீன் காந்தியின் அதிரடி திரைப்படமான ரட்சகன், [7] சுந்தர் சி. இன் நகைச்சுவை படமான உனக்காக எல்லாம் உனக்காக, [8] என். மாத்ருபூததின் புதிரா புனிதாமா ஆகியவை அடங்கும் . [9]
வினோதினி விரைவில் தொலைக்காட்சி தொடர்களான சித்தி, அகல் விளக்கு [1] மற்றும் கண்ணாடிக் கதவுகள், [10] கிரேசி மோகனின் நகைச்சுவைத் தொடரான விடாது சிரிப்பு போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினார் . [11] தவிர, இவர் எட்டு ஆண்டுகளாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தினார். 2005 ஆம் ஆண்டில் கஸ்தூரி மான் படத்தில் கதா நாயகியின் ( மீரா ஜாஸ்மின் ) சகோதரியாக துணை வேடத்தின் வழியாக தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க வந்தார். அதன் விமர்சனத்தில், தி இந்து இந்த படத்தில் இவர் "மிகவும் கவரும் நடிப்பை" அளித்ததாக குறிப்பிடப்பட்டார். [12] பின்னர், இவர் கரு பழனியப்பனின் இரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1982 | மணல் கயிறு | தமிழ் | பேபி லட்சுமி குழந்தை நட்சத்தரமாக | |
1985 | புதிய சகாப்தம் | சாந்தி | தமிழ் | |
1986 | மண்ணுக்குள் வைரம் | தமிழ் | பேபி லட்சுமி குழந்தை நட்சத்தரமாக | |
1991 | சித்திரைப் பூக்கள் | பாரதி | தமிழ் | |
1991 | ஆத்தா உன் கோயிலிலே | ஈஸ்வரி | தமிழ் | |
1991 | என் ஆசை ராசாத்தி | ராசாத்தி | தமிழ் | |
1992 | வண்ண வண்ண பூக்கள் | மணோரஞ்சிதம் | தமிழ் | |
1992 | அபிராமி | மகாலட்சுமி | தமிழ் | |
1992 | அன்னை வயல் | தமிழ் | ||
1992 | கிழக்கு வீதி | தமிழ் | ||
1992 | சூரிய மானசம் | சுசி | மலையாளம் | |
1992 | சிவலர் மைக்கலேல் | மலையாளம் | ||
1992 | சைத்ததா பிரேமாஞ்சலி | அஞ்சு | கன்னடம் | |
1993 | மறுபடியும் | பிரியா | தமிழ் | |
1993 | சூரியன் சந்திரன் | தமிழ் | ||
1993 | ஆத்மா | பாத்திமா | தமிழ் | |
1993 | கிஜ்ஜி நாடா | கன்னடம் | ||
1993 | பொன்னு சம்மி | மாயா | மலையாளம் | |
1994 | வாங்க பார்ட்னர் வாங்க | வைரம் | தமிழ் | |
1994 | என் ராஜாங்கம் | சுகந்தி | தமிழ் | |
1994 | சின்ன மேடம் | சித்ரா | தமிழ் | |
1994 | பட்டுக்கோட்டை பெரியப்பா | தமிழ் | ||
1994 | நிஜன் கோட்டீஸ்வரன் | மாயா | மலையாளம் | |
1995 | கல்யாணம் | தமிழ் | ||
1995 | இளவரசி | தமிழ் | கௌரவத் தோற்றம் | |
1995 | முத்து குளிக்க வாரீயளா | தமிழ் | ||
1995 | தொண்டன் | செல்வி | தமிழ் | |
1996 | வீட்டுக்குள்ளே திருவிழா | கிருஷ்ணவேணி | தமிழ் | |
1996 | அழகிய ராவணன் | மலையாளம் | ||
1996 | ஹெட்டவரு | கன்னடம் | ||
1996 | கற்பூர கொம்பே | யசோதா | கன்னடம் | |
1996 | மிண்ணுகு தாரே | கன்னடம் | ||
1996 | முத்தின ஆலயா | கன்னடம் | ||
1997 | நோடு பா நம்மூரா | கன்னடம் | ||
1997 | பதுக்கு ஜாடக பண்டி | மாலா | கன்னடம் | |
1997 | லட்சுமி மகாலட்சுமி | அனிதா | கன்னடம் | |
1997 | ரட்சகன் | தமிழ் | ||
1997 | தடயம் | ஜோதி | தமிழ் | |
1998 | அக்னி சக்தி | கன்னடம் | ||
1999 | உனக்காக எல்லாம் உனக்காக | அஞ்சலி | தமிழ் | |
2000 | புதிரா புனிதமா | தமிழ் | ||
2001 | கொட்டிகோபா | கன்னடம் | ||
2001 | நம்ம சம்சாரா ஆந்த்த சாகரா | கன்னடம் | ||
2004 | குடும்பா | மேகா | கன்னடம் | |
2005 | கஸ்தூரி மான் | பிரேமா | தமிழ் | |
2008 | பிரிவோம் சந்திப்போம் | விசாலாட்சியின் அண்டைவீட்டார் | தமிழ் | |
2011 | சதுரங்கம் | சந்தியாவின் மருமகள் | தமிழ் | |
2017 | கொஞ்சம் கொஞ்சம் | தமிழ் |
தொலைக்காட்சி
தொகுதொடர் | பாத்திரம் | அலைவரிசை |
---|---|---|
உடள் பொருள் ஆனந்தி | தூர்தர்ஷன் | |
சித்தி | சாருலதா | சன் தொலைக்காட்சி |
கண்ணாடிக் கதவுகள் | தூர்தர்ஷன் | |
அகல் விளக்குகள் | சன் தொலைக்காட்சி | |
விடாது சிரிப்பு | ஜனகி | ஜெயா தொலைக்காட்சி |
குடும்பம் | சன் தொலைக்காட்சி | |
விரோதி | ||
பெண் பொம்மைகள் | ||
சுகவாசம் (மலையாளம்) | ||
சொர்கம் | சன் தொலைக்காட்சி | |
வா வத்தியரே வா | பாலிமர் தொலைக்காட்சி | |
சிரி சிரி கிரேசி | ஜனகி | கலைஞர் தொலைக்காட்சி |
அக்னி நட்ச்சத்திரம் | நளினி | சன் தொலைக்காட்சி |
ரோஜா | பச்சைகிளி / தங்கபவுணு |
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "The Hindu : Comic interlude". thehindu.com.
- ↑ Dhananjayan, G. (3 November 2014). "PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013". google.co.uk.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Hindu : Young and mature at once". thehindu.com. Archived from the original on 2002-03-25. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
- ↑ "Raghuveer passes away!". Sify.
- ↑ "Chaitrada Premanjali actor Raghuveer no more". The Times of India.
- ↑ Mannath, Malini (21 Jan 1994). "Parting kick". The Indian Express.
- ↑ "A-Z (V)". Indolink Tamil. Archived from the original on 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.
- ↑ "Unkkage Ellam Unakkaga". itgo.com.
- ↑ "Thambathyam Puthira Punithama". chennaionline.com. Archived from the original on 16 March 2001. பார்க்கப்பட்ட நாள் 6 June 2015.
- ↑ "Kannaadi Kadhavugal". The Hindu.
- ↑ "The Hindu : Crazy robot". thehindu.com. Archived from the original on 2014-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
- ↑ "The Hindu : Entertainment Chennai / Film Review : Wholesome treat for the festive occasion". thehindujobs.com. Archived from the original on 5 February 2010.
வெளி இணைப்புகள்
தொகு- Vinodhini
- வினோதினி[தொடர்பிழந்த இணைப்பு] சினிசவுத்தில்
- கூட்டு காட்சியில் வினோதினி