ரோஜா (தொலைக்காட்சித் தொடர்)
ரோஜா என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 9, 2018 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3,2022 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2][3]
ரோஜா | |
---|---|
வகை | காதல் சட்டம் நாடகத் தொடர் |
எழுத்து | சரிகம கதை குழு |
திரைக்கதை | எஸ்.ஸ் சேக்கிழார் (1-410) வி. பத்மாவதி (411-) |
கதை | வாசுபராதி |
இயக்கம் | தனுஷ் (பகுதி:1-48) வ.சதாசிவம் (பகுதி:49-தற்போது) |
படைப்பு இயக்குனர் | பிரின்ஸ் |
நடிப்பு | பிரியங்கா நல்கார் சிபு சூர்யன் வெங்கட் ரங்கநாதன் ஷாமிலி சுகுமார் வடிவுக்கரசி காயத்ரி சாஸ்திரி சிவா |
இசை | ரவி ராகவ் |
முகப்பிசை | "கவிதை போல வந்தாள் ரோஜா" மானசி (பாடகி) அருண் பாரதி (பாடல்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 1316 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சரிகம |
ஒளிப்பதிவு | ஆர்.வி.பார்த்திபா கிருஷ்ணன் |
தொகுப்பு | கே. சங்கர் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சரிகம |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 9 ஏப்ரல் 2018 3 திசம்பர் 2022 | –
நடிகர்கள் தொகு
முதன்மை கதாபாத்திரம் தொகு
- பிரியங்கா நல்கார் - ரோஜா அர்ஜுன்
- மாணிக்கத்தின் உண்மையான மகள், அர்ஜுனின் மனைவி.
- சிப்பு சூர்யன் - அர்ஜுன்
- கல்பனா மற்றும் பிரதாப்பின் மூத்த மகன் மற்றும் ரோஜாவின் கணவர்
- ஷாமிலி சுகுமார் / அக்சயா - பிரியா / அனு
- ரோஜாவுடன் ஒன்றாக அனாதை ஆசிரமத்தில் வளந்தவள்,
உண்மையில் இவள் ஜெ.எஸின் தோலைந்து போன மூத்த மகள், மாணிக்கத்தின் பொய்யான மகள். இந்த தொடரின் வில்லி.
அர்ஜுன் மற்றும் ரோஜாவின் குடும்பத்தினர் தொகு
- வடிவுக்கரசி - அன்னப்பூரணி
- பிரதாப், செண்பகம் மற்றும் யசோதாவின் தாய். அர்ஜுன், அஸ்வின், தீபா மற்றும் ரோஜா பாட்டி. கனடா காமாட்சியின் சகோதரி.
- லதா - கனடா காமாட்சி
- அன்னப்பூரணியின் சகோதரி.
- சிவா - பிரதாப்
- அன்னபூரணியின் மகன், கல்பனாவின் கணவர், அர்ஜுன், அஸ்வின் மற்றும் தீபாவின் தந்தை, ரோஜாவின் தாய்மாமா மற்றும் மாமனார்.
- காயத்ரி சாஸ்திரி - கல்பனா பிரதாப்
- அர்ஜுனின் அம்மா, பிரதாப்பின் மனைவி, ரோஜாவின் அத்தை மற்றும் மாமியார். ரோஜாவை தன் மகளை போல அன்பு செலுத்தும் மாமியார்.
- வெங்கட் ரங்கநாதன்/ சங்கரேஷ் குமார்-அஸ்வின்
- அர்ஜுனின் சகோதரன், பிரதாப்பின் இரண்டாவது மகன், பூஜாவின் கணவர்
- அகிலா ரமணமூர்த்தி- தீபா
- அர்ஜுனின் சகோதரி.
- ரம்யா ராமகிருஷ்ணன் / காவ்யவர்சினி - யசோதா பாலசந்தர்
- அன்னபூரணியின் மகள், பிரதாப்பின் சகோதரி மற்றும் பாலச்சந்திரன் மனைவி. ரோஜாவை வெறுப்பதால் அனுவுடன் சேர்ந்து ரோஜாவுக்கு பல பிரச்சனைகள் குடுக்கிறார். இறுதியில் திருந்தியதோடு, தன் கணவனான பாலுவை கொன்ற சாக்ஷியை கொன்றார்.
- தேவ் ஆனந்த் ஷர்மா - பாலசந்தரன்(பாலு)
- யசோதாவின் கணவர்.
- சுமதி ஸ்ரீ - சுமதி
- அர்ஜுனின் வீட்டு பணிப்பெண்
- ராஜேஷ்[4] - டைகர் மாணிக்கம்
- பிரபல வக்கீல், ரோஜாவின் உண்மையான தந்தை, செண்பகத்தின் கணவர்.
- ஷர்மிளா - செண்பகம் மாணிக்கம்
- ரோஜாவின் தாய், மிகவும் பரிவுமிக்கவர் மற்றும் நற்குணமுள்ளவர்.
டைகர் மாணிக்கத்தின் குடும்பம் தொகு
- கிரிஷ் - சேது
- மாணிக்கத்தின் சகோதரன்.
- சோபா ராணி → ரேகா சுரேஷ் - தெய்வானை சேது
- கணேஷ் - ரஞ்சித்
- சேது மற்றும் தெய்வானையின் மகன்
பூஜா குடும்பத்தினர் தொகு
- ஸ்மிருதி கஷ்யாப் - பூஜா
- அஸ்வினின் மனைவி.
- கவிதாலயா கிருஷ்ணன் - புருஷோத்தமன்
- பூஜாவின் தந்தை.
- சாந்தி ஆனந்தராஜ் - பிரேமா புருஷோத்தமன் (தாய்)
- பூஜ்ஜி
- பூஜாவின் தம்பி
பிரியா/அனுவின் குடும்பத்தினர் தொகு
- வாசு விக்ரம்- ஜெயசீலன் (ஜெ.எஸ்)
- ஒரு வழிக்கறிஞர், பிரியா/அனுவின் உண்மையான அப்பா
- பத்மனி சந்திரசேகரன்- கமலா ஜெயசீலன்,
- ஜெ.எஸின் மனைவி, அனு/பிரியாவின் உண்மையான அம்மா மற்றும் நற்குணமுள்ளவர்.
துணை கதாபாத்திரம் தொகு
- சௌமியா சாரதா (2018-2019) /சுனிதா (2019) - சாக்ஷி மருதநாயக்கம்
- இந்த தொடரின் வில்லி, அனுவின் தோழி.
- ராணி-சந்திரகாந்தா
- நேர்மையான போலீஸ் அதிகாரி
- சசீந்தர் புஷ்பலிங்கம் - கணேஷ்
முந்தைய கதாபாத்திரம் தொகு
- நிஷாந்த் - சந்தோஷ் குமார் (2018)
- டப்பிங் ஜானகி - (பாலுவின் தாய்)
சிறப்பு தோற்றம் தொகு
- நதியா
- அனுராதா - நீதிபதி சிவகாமி
- டெல்னா டேவிஸ்-பூமிகா
- ஒய். ஜி .மகேந்திரன்
- நளினி-பரமேஸ்வரி
மகாசங்கம் தொகு
இந்த தொடர் மே 13, 2019 முதல் மே 19 முதல் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடருடன் ஒரு வாரம் சிறப்பு மகாசங்கம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொகு
இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 9, 2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நாள் முதலில் இன்று வரை மதிய நேர தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் இருக்கும் காரணத்தால் 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் கல்யாணப்பரிசு 2 என்ற தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2019 முதல் இரவு 7 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது. 2021 மே மாதம் முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் 2022 டிசம்பரின் அதே நேரத்தில் நிறைவடைந்தது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
9 ஏப்ரல் 2018 - 16 மார்ச்சு 2019 | 15:00 | 1-277 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
18 மார்ச்சு 2019 – 3 ஆகஸ்ட் 2019 | 21:00 | 278-396 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
5 ஆகஸ்ட் 2019 - 3 ஏப்ரல் 2020 | 19:00 | 397-598 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
27 ஜூலை 2020 - 3 டிசம்பர் 2022 | 19:00 | 599-
1316|} மறு ஆக்கம் தொகு
மொழி மாற்றம் தொகுஇந்த தொடர் தெலுங்கு மொழியில் பிருந்தாவனம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 22 ஜூன் 2020 முதல் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.
மதிப்பீடுகள் தொகுகீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு
சர்வதேச ஒளிபரப்பு தொகு
மேற்கோள்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு
|