கவிதாலயா கிருஷ்ணன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

கவிதாலயா கிருஷ்ணன் என நன்கறியப்பட்ட டி. கிருஷ்ணன் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மறறும் தொலைக்காட்சித் தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தமைக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்.[1] இவர் கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து, இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்ததால் இவருடைய பெயருடன் கவிதாலயா என்பது அடைமொழியாக ஒட்டிக்கொண்டது.

தொழில் வாழ்க்கை

தொகு

இவர் எண்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், அறுபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் மேடை நாடகங்களில் 1000 முறைக்கும் மேலாக நடித்தவர் ஆவார். இவருக்கு 2005 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது.[2] சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் தன்னுடன் வகுப்புத் தோழனாக இருந்த கிரேசி மோகனுடன் இணைந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். கிரேசி மோகனின் நாடகமான சலுானில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற நாடகத்தை இயக்குநர் கே. பாலச்சந்தர் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படமாக இயக்கிய போது அத்திரைப்படத்தில் அறிமுகமானார்.[3]

நடித்த திரைப்படங்கள்

தொகு

தொலைக்காட்சித் தொடர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதாலயா_கிருஷ்ணன்&oldid=2645432" இலிருந்து மீள்விக்கப்பட்டது