பிரியங்கா நல்காரி
பிரியங்கா நல்காரி என்பவர் ஒரு தமிழ் தெலுங்கு மொழித் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் இந்திய நடிகையாவார். சன் தொலைக்காட்சி ரோஜா தொலைக்காட்சித் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். [1] [2][3] [4][5]
பிரியங்கா நல்காரி | |
---|---|
2018 சனவரியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரியங்கா | |
தேசியம் | இந்தியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போதும் |
அறியப்படுவது | ரோஜா (2018 - 2022) |
வாழ்க்கை
தொகுபிரியங்கா நல்காரி ஐதராபாத்தில் பிறந்தார். ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை நீண்ட காலமாக காதலித்து வந்தார், 23 மார்ச் 2023 [6]அன்று எளிமையான முறையில் மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் நடந்தது.[7] பெற்றோர்கள் இல்லாது திருமணம் செய்து கொண்டதால் பலர் விமர்சித்தனர். இதை பற்றி பிரியங்கா இன்சுட்டாகிராமில் எனது பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றதாகவும், ராகுலின் பெற்றோர் இந்த திருமணத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறினார்.[6]
தொழில்
தொகு2010 இல், சந்திர சித்தார்த்தா இயக்கிய அந்தரி பந்துவாயா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரவி தேசா நடித்த கிக் 2 (2015) திரைப்படத்திலும் இவர் அங்கீகரிக்கப்படாத பாத்திரத்தில் நடித்தார். காஞ்சனா 3 (2019) பிரியங்கா நல்கரி நடித்த முதல் சிறப்பு திரைப்படமாகும். 2018 ஆம் ஆண்டில், ரோஜா என்ற தமிழ் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். முன்னதாக, ஈடிவி தெலுங்கில் ஒளிபரப்பான மேகமாலா என்ற தெலுங்கு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். இவர் அனுபவிஞ்சு ராஜா என்ற நகைச்சுவை உண்மைநிலை நிகழ்ச்சியிலும் இடம்பெற்றுள்ளார். சிவா மனசுலோ சுருதி (2012) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சுதீர் பாபுவின் சகோதரி பாத்திரத்தில் நடித்தார்.[சான்று தேவை] ரோஜா தமிழ் தொலைக்காட்சித் தொடர் முடிவுக்கு வந்த பிறகு சீதா ராமன் தொடரில் நடித்தார், 2023 சூலை சீதா ராமன் தொடரிலிருந்து வெளியேறினார், தனக்கு திருமணமானதால், கணவருடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும், வெளிநாட்டில் கணவருடன் தங்கியிருப்பதால் சீதா ராமன் படப்பிடிப்பிற்கு வந்து செல்ல முடியவில்லை என்று கூறினார். [8][9] செப்டம்பர் மாதம் என்ற நள தமயந்தி தொடரில் நடிக்க ஒப்பந்தமிட்டார், இதில் தற்போது நடித்து வருகிறார். [10]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2010 | அந்தரி பந்துவய | பிரியங்கா | தெலுங்கு | |
2013 | தீய வேலை செய்யணும் குமாரு | திவ்யசிறீ | தமிழ் | |
சம்திங் சம்திங் | மடூ | தெலுங்கு | ||
நா சாமி ரங்கா | லதா | |||
2014 | அமெரிக்கா உங்களை வரவேற்கிறது | சமந்தா | ||
2015 | உதை 2 | கமலா பாயின் மகள் | ||
2016 | ஹைப்பர் | பிரியங்கா | தமிழ் | |
2017 | நேனே ராஜு நேனே மந்திரி | சுசுமிதா | தெலுங்கு | |
2018 | வைப் ஆப் ராம் | சினேகா | சிறப்புத் தோற்றம் | |
2019 | காஞ்சனா 3 | மோசிகா |
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | தொலைக்காட்சி |
---|---|---|---|---|
2014 | ஆகுவானம் | தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | |
2014–2016 | மேகமாலா | ஈடிவி தெலுங்கு | ||
2014 | மங்கம்மா கேரி மணவரலு | ஜீ தெலுங்கு | ||
2015 | சிரவண சமீரலு | இந்து | ஜெமினி தொலைக்காட்சி | |
2018–2022 | ரோஜா | ரோஜா, செசிகா | தமிழ் | சன் டி.வி |
2023 | சீதா ராமன் | சீதை | ஜீ தமிழ் | |
2023-தற்போது | நள தமயந்தி | தமயந்தி | ஜீ தமிழ் |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தொகுஆண்டு | தலைப்பு | மொழி | சேனல் |
---|---|---|---|
2017 | சர்ரைனொல்லு | தெலுங்கு | ஈடிவி தெலுங்கு |
ஸ்ட்டார் மகிளா | |||
2018 | ஈடிவி சாரதா சங்கராந்தி சிறப்பு நிகழ்ச்சி | ||
அனுபவிஞ்சு ராஜா | ஈடிவி பிளஸ் | ||
கோல்ட் ரசு | ஜீ தெலுங்கு | ||
சவலே சமலி | தமிழ் | சன் டி.வி | |
2020 | கலை வித் கமல் | ஆதித்யா | |
வணக்கம் தமிழா | சன் டி.வி | ||
பிரதி ரோசு பாண்டேசு | தெலுங்கு | ஈடிவி தெலுங்கு | |
2021 | வட டா | தமிழ் | சன் மியூசிக் |
வணக்கம் தமிழா | சன் டி.வி | ||
ரவுடி பேபி | |||
பூவா தலையா | |||
2022 | அழகிய அம்மா | ||
ரோஜா ரோஜாதான் | |||
மாத்தி யோசி | |||
ஆனந்த ராகம் வரவெற்பு விழா | |||
ரோஜா வெற்றி விழா |
விருதுகள்
தொகுஆண்டு | விருது | வகை | தொடர் |
---|---|---|---|
2018 | சன் குடும்பம் விருதுகள் | சிப்பு சூர்யனுடன் சிறந்த வளர்ந்து வரும் சோடி | ரோஜா |
2019 | சன் குடும்பம் விருதுகள் | சிறந்த நடிகை [11] | ரோஜா |
2019 | சன் குடும்பம் விருதுகள் | சிப்பு சூர்யனுடன் பிரபலமான சோடி விருது | ரோஜா |
2023 | ஜீ தமிழ் கோல்டன் மொமெண்ட்சு விருதுகள் 2023 | சிறந்த நடிகை | சீதா ராமன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி". சமயம். 19 நவம்பர் 2019. Archived from the original on 20 திசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2020.
- ↑ "அப்போ ஹன்சிகா ஃப்ரெண்ட்... இப்போ தமிழ் சீரியல் ஹீரோயின்!" - 'ரோஜா' பிரியங்கா". விகடன். 30 மே 2018. Archived from the original on 24 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2020.
- ↑ "ரோஜா சீரியல்: அக்னி சட்டி, முள் செருப்பு, முள் படுக்கை... ஒரு நியாய தர்மம் வேண்டாமா?". இந்தியன் எக்சுபிரசு தமிழ். 28 நவம்பர் 2019. Archived from the original on 13 ஆகத்து 2020. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2020.
- ↑ "TV show Roja completes one year; actress Priyanka Nalkari thanks everyone". 30 ஏப்ரல் 2019. Archived from the original on 18 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2020.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Telugu remake of 'Roja' to launch soon". 25 பிப்ரவரி 2019. Archived from the original on 20 திசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2020.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 6.0 6.1 "Priyanka Nalkari Breaks Silence On The Absence Of Her Parents During Her Wedding". News18 (in ஆங்கிலம்). 2023-03-28. Archived from the original on 3 பெப்பிரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்பிரவரி 2024.
- ↑ "Roja Serial Actress Secretly Marries Her BoyFriend At Malaysia Murugan Temple; Wedding PICS Go Viral!". Filmibeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
- ↑ "Priyanka Nalkari Quits Acting In Seetha Raman Serial; Her Husband Rahul Is The Reason Behind This?". பிலிமிபேட். Archived from the original on 20 மே 2023.
- ↑ "மீண்டும் சீரியலுக்கு வரும் பிரியங்கா! ஒளிபரப்பு உரிமம் பெற்ற பிரபல டிவி!!". தினமணி. Archived from the original on 3 பிப்ரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Popular actress Priyanka Nalkari to play the titular role in upcoming show 'Nala Dhamayanthi'". டைம்சு ஆப் இந்தியா. Archived from the original on 21 அக்டோபர் 2023.
- ↑ Archived at Ghostarchive and the Wayback Machine:
{{cite AV media}}
: Empty citation (help)