இன்ஸ்ட்டாகிராம்
இன்ஸ்ட்டாகிராம் (Instagram ) தமிழில் படவரிஅக்டோபர் 2010இல் வெளியான ஓர் இலவச, ஒளிப்படங்கள் பகிர்ந்துகொள்ள உதவும் மென்பொருளாகும். பயனர்கள் ஒளிப்படம் எடுக்கவும் எண்ணிம ஒளிவடிகட்டியை செயல்படுத்தவும் இன்ஸ்ட்டாகிராமின் வலைத்தளம் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரவும் உதவுகிறது.[2] நகர்பேசி ஒளிப்படக் கருவிகளில் வழக்கமாக இருக்கும் 4:3 உருவ விகிதம் போலன்றி இதில் சதுரமாக உள்ளது இதனை வேறுபடுத்தும் சிறப்பியல்பாகும் .
நிறுவுகை | 2010 |
---|---|
நிறுவனர்(கள்) | கெவின் சிஸ்ட்ராம், மைக் கிரிகேர் |
தலைமையகம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தொழில்துறை | நகர்பேசி மின்பொருள் |
உற்பத்திகள் | இன்ஸ்ட்டா கிராம் |
பணியாளர் | 13 (as of ஏப்ரல் 2012[update])[1] |
தாய் நிறுவனம் | ஃபேஸ்புக் |
இணையத்தளம் | instagram |
வடிவமைப்பு | புர்பின் நிறுவனம். |
---|---|
தொடக்க வெளியீடு | அக்டோபர் 6, 2010 |
இயக்கு முறைமை | ஐ ஓஎசு 3.1.2 அல்லது பிந்தைய; அண்ட்ராய்டு 2.2 அல்லது பிந்தைய |
கோப்பளவு | 12.5 மெகாபைட் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலி, சப்பானிய மொழி, கொரிய மொழி, போர்த்துக்கேசிய மொழி, இசுப்பானியம் |
உருவாக்க நிலை | இயக்கத்தில் |
மென்பொருள் வகைமை | ஒளிப்படம் & ஒளிதம் |
உரிமம் | இலவசம் |
இன்ஸ்ட்டாகிராம் துவக்கத்தில் ஐ-போன், ஐ-பேடு, மற்றும் ஐ-பாடு டச்களில் மட்டுமே இருந்தது; ஏப்ரல் 2012 முதல் அண்ட்ராய்டு ஒளிப்படக்கருவி இணைந்த நகர்பேசிகளிலும் இயங்கவல்லதாக உள்ளது. இந்த மென்பொருள் ஆப்பிள் ஸ்டோர் மூலமாகவும் கூகுள் பிளே மூலமாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.[3]
ஏப்ரல் 12, 2012 அன்று ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை, அதன் 13 பணியாளர்கள் உட்பட,[1] ஏறத்தாழ $1 பில்லியன் பணம் கொடுத்து வாங்கியுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ante, Spencer E. "Financing to Value Instagram at $500 Million". Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Frommer, Dan (1 நவம்பர் 2010). "Here's How To Use Instagram". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 20 May 2011.
- ↑ "Instagram comes to Android, available to download now". Engadget. 3 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Segall, Laurie. "Facebook acquires Instagram for $1 billion". CNNMoney.com. CNN. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)