மைக் கிரிகேர்
மைகேல் "மைக்" கிரிகேர் (ஆங்கிலம்:Michel "Mike" Krieger, பிறப்பு:மார்ச் 4, 1986) என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபரும் மென்பொருள் பொறியியளாரும் ஆவார். இவர் தனது சக இசுட்டான்போர்டு பல்கலைக்கழக மாணவனான கெவின் சிஸ்ற்றோமுடன் சேர்ந்து இன்ஸ்ட்டாகிராம் எனும் ஒளிப்படங்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் மென்பொருளினை 2010 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்[2]. பிரேசிலின் சாவோ பாவுலோவிலிருந்து 2004 ஆம் ஆண்டு இசுட்டான்போர்டு பல்கலைக்கழக்துக்குச் செல்வதற்கு ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார்[3]. அங்கு அவர் சிம்பாலிக் சிஸ்டம்ஸ் (symbolic systems) கற்றார்.
மைக் கிரிகேர் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 4, 1986 சாவோ பாவுலோ, பிரேசில் |
இருப்பிடம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
பணி | தொழில் அதிபர் |
அறியப்படுவது | இன்ஸ்ட்டாகிராம் நிறுவனர் |
சொத்து மதிப்பு | US$99 million (2013)[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Katherine Rushton (2012-01-24). "Who's getting rich from Facebook's $1bn Instagram deal?". The Telegraph. http://www.telegraph.co.uk/technology/facebook/9195380/Whos-getting-rich-from-Facebooks-1bn-Instagram-deal.html.
- ↑ Christine Longorio (2012-04-09). "Kevin Systrom and Mike Krieger, Founders of Instagram". Inc. magazine. http://www.inc.com/30under30/2011/profile-kevin-systrom-mike-krieger-founders-instagram.html.
- ↑ Joe Garofoli (2012-01-24). "Steve Jobs’ widow, Instagram founder sitting with Michelle Obama at State of the Union". SFGate.com இம் மூலத்தில் இருந்து 2012-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120414140817/http://blog.sfgate.com/nov05election/2012/01/24/steve-jobs-widow-instagram-founder-sitting-with-michelle-obama-at-state-of-the-union/.