நதியா
நதியா (பிறப்பு: அக்டோபர் 24, 1966) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு ஆகும். 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
நதியா மோய்டு | |
---|---|
பிறப்பு | சரீனா அனுஷா மோய்டு 24 அக்டோபர் 1966[1] செம்பூர், மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | நதியா, |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1984-1994, 2004-தற்போது வரை |
பெற்றோர் | மோய்டு, லலிதா |
வாழ்க்கைத் துணை | சிரீஷ் காட்போல் (1988-தற்போது வரை) |
விருதுகள் | நோக்கெத்த தூரத்து கண்ணும் நாட்டு க்காக சிறந்த நடிகை விருது (கேரளா) |
நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.[3]
குடும்ப வாழ்க்கைதொகு
இவரின் தந்தை மோய்டு இஸ்லாம் மதத்தையும், தயார் லலிதா இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர் தமிழ், மலையாளம், மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் பெற்றவர்.[சான்று தேவை] இவர் மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை 1988 ஆம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்தொகு
- ↑ https://starsfact.com/nadhiya-height-weight-age-husband-children-wiki-facts/
- ↑ "Nadhiya gets a dream role". http://www.indiaglitz.com+(24 May 2008). பார்த்த நாள் 10 September 2012.
- ↑ http://m.newstm.in/cinema/1518837028932