லட்சுமி ஸ்டோர்ஸ்
லட்சுமி ஸ்டோர்ஸ் என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 24, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நந்தினி தொடருக்கு பதிலாக ஒளிபரப்பாகி, 18 மார்ச் 2019 முதல் இரவு 9 : 30 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் மற்றும் காதல் சார்ந்த தொலைக்காட்சித் தொடர் ஆகும்.
லட்சுமி ஸ்டோர்ஸ் | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் நாடகம் |
கதை | சுந்தர் சி |
இயக்கம் | ஜவஹர் (1-40) சுந்தர் கே. விஜயன் (41-) |
படைப்பு இயக்குனர் | குஷ்பூ |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 332 |
தயாரிப்பு | |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | அவ்னி டெலிமீடியா சன் என்டர்டெயின்மெண்ட் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி ஜெமினி தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 24 திசம்பர் 2018 25 சனவரி 2020 | –
Chronology | |
முன்னர் | நந்தினி 21:00 மணிக்கு சந்திரகுமாரி 21:30 மணிக்கு |
பின்னர் | ராசாத்தி 21:30 மணிக்கு |
இந்தத் தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் குஷ்பூவின் அவ்னி டெலிமீடியா நிறுவனத்துடன் இணைந்து தொடரை தயாரிக்க, ஜவஹர், சுந்தர் கே. விஜயன் போன்ற இயக்குனர்கள் இந்த தொடரை இயக்கியுள்ளார்கள். நந்தினி தொடருக்கு கதை எழுதிய சுந்தர் சி இந்தத் தொடருக்கும் கதை எழுதி உள்ளார்.[1]
இந்தத் தொடரில் குஷ்பூ, சுதா சந்திரன், சுரேஷ், முரளி மோகன், டெல்லி குமார், டெல்லி கணேஷ், அபிதா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சன் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி நட்சத்திரா பாக்கியலட்சுமியாகவும் புதுமுக நடிகர் குசைன் ரவியாக நடித்துள்ளார்கள்.[2][3][4] இந்தத் தொடர் சனவரி 25, 2020 ஆம் ஆண்டு 332 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. 2019 ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் 2019ல் சிறந்த சிறந்த கதாநாயகி கதாபாத்திரம், சிறந்த காதல் ஜோடி போன்ற விருதுகளை வென்றுள்ளது.
கதைச்சுருக்கம் தொகு
இந்த தொடரின் கதை லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகாலிங்கம். இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஓரு மகள். இவரின் மூத்த மருமகள் மகாலட்சுமி தனது அன்பயும் ,ஆதரவையும் குடும்பத்திற்கும், லட்சுமி ஸ்டோர்ஸுக்கும் தருகிறார். இவரது கணவன் தேவராஜ் ஒரு சட்டவல்லுனர். ரவி தேவராஜின் சகோதரன்.
பாக்கியலட்சுமி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். தாத்தா அண்ணா, தங்கை என்ற உறவுகளுடன் வாள்பவள் இவள் லட்சுமி ஸ்டோர்ஸ் கடையில் வேலை செய்கிறாள். சகுந்தலா தேவி ஒரு அரசியல் வாதி, லட்சுமி ஸ்டோர்ஸ் கடையை எப்படியாவது விலைக்கு வாங்க வேண்டும் என நினைக்கிறார். இதற்கிடையில் பாக்யலட்சுமிக்கும், ரவிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. சகுந்தலாதேவி மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் மோதல்கள் மற்றும்உறவுகளின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து கதை நகர்கின்றது.
நடிகர்கள் தொகு
முதன்மை கதாபாத்திரம் தொகு
- குஷ்பூ - மகாலட்சுமி தேவராஜ்
- மகாலிங்கம் குடும்பத்தின் மூத்த மருமகள் மற்றும் தேவராஜின் மனைவி.
- நட்சத்திரா - பாக்கியலட்சுமி
- லட்சுமி ஸ்டோர்ஸ்ஸில் வேலை செய்பவள். ரவியின் மனைவி மற்றும் மகாலிங்கம் குடும்பத்தின் மூன்றாவது மருமகள்.
- சுதா சந்திரன் - சகுந்தலா தேவி, தொடரில் இறந்து விட்டார் (அத்தியாயங்கள்: 1-230)
- சுரேஷ் - தேவராஜ்
- புகழ் பெற்ற வக்கியில். மகாலட்சுமி மற்றும் சியாமளா கணவன்.
- குசைன் - ரவி
- மகாலிங்கத்தின் நான்காவது மகன். பாக்கியலட்சுமியின் கணவன்.
- அபிதா - சியாமளா
- ஒரு வைத்தியர். பிரியாவின் தாய் மற்றும் தேவராஜின் இரண்டாவது மனைவி.
மகாலிங்கம் குடும்பத்தினர் தொகு
- முரளி மோகன் - மகாலிங்கம்
- சுரேஷ் - தேவராஜ் (மூத்த மகன்)
- குஷ்பூ - மகாலட்சுமி தேவராஜ் (மூத்த மருமகள்)
- சாம்சன் வில்சன் - வைத்தியர். சரவணன் (இரண்டாவது மகன்)
- சுவாதி தாரா - வைத்தியர். உமா சரவணன் (இரண்டாவது மருமகள்)
- கிரிதரன் - அர்ஜுன் (மூன்றாவது மகன்)
- குசைன் - ரவி (நான்காவது மகன்)
- ஜென்னிபர் → ஷெரின் ஜானு - கமலா (மகள்)
- தீபா சங்கர் - பொன்னம்மா (பணிப்பெண்)
- தியா - பிரியா (தேவராஜ் மற்றும் சியாமளா மகள்)
- அபிதா - சியாமளா (தேவராஜின் இரண்டாவது மனைவி)
தில்லை குடும்பத்தினர் தொகு
- டெல்லி குமார் - தில்லை (பாக்கியலட்சுமி, வனிதா மற்றும் செந்திலின் தாத்தா)
- அரவிந் - செந்தில் (பாக்கியலட்சுமியின் அண்ணா)
- நட்சத்திரா - பாக்கியலட்சுமி
- நிஷா யாழினி - வனிதா (பாக்கியலட்சுமியின் தங்கை)
- தனிஷா குப்பண்டா - மல்லிகா (செந்திலின் மனைவி)
- பியசில் ஹிதாய - திவ்யா (மல்லிகாவின் தங்கை)
- பாரி - மீனு (செந்தில் மற்றும் மல்லிகாவின் மகள்)
சகுந்தலா தேவி குடும்பத்தினர் தொகு
- சுதா சந்திரன் - சகுந்தலா தேவி
- சாக்ஷி சிவா - ராஜு (சகுந்தலா தேவியின் சகோதரன்)
- சாம்பவி → சுருதி - தேஜா (சகுந்தலா தேவியின் மகள்)
- வினய் யு.ஜே - ராஜ்குமார் (சகுந்தலா தேவியின் மகன் மற்றும் கமலாவின் முன்னாள் காதலன்)
- ரேகா கிருஷ்ணப்பா- சாமுண்டேஸ்வரி (சகுந்தலா தேவியின் சகோதரி) (2019-2020)
- மங்கிரவி - உத்தமன் (சகுந்தலா தேவியின் உதவியாளர் மற்றும் பொன்னம்மாவின் முன்னாள் காதலன்)
- பேயில்வன் ரங்கநாதன் - பட்டாபி (சகுந்தலா தேவியின் உதவியாளர்)
துணை கதாபாத்திரம் தொகு
- டெல்லி கணேஷ் - ராஜேந்திரன்
- நிஷா - மரகதம்
- ஸ்மாலீன் மோனிகா -லதா
- ஆர். பூங்கோடி
- பெரோஸ் கான்
முந்தைய கதாபாத்திரம் தொகு
- ஜென்னிபர் - கமலா
- முரளி மோகன் - மகாலிங்கம்
- சாம்பவி - தேஜா (சகுந்தலா தேவியின் மகள்)
- அஞ்சலி ராவ் - திவ்யா
சிறப்பு தோற்றம் தொகு
- நித்யா ராம் - நித்யா (மகாலட்சுமியின் உறவினர்) (அத்தியாயங்கள்: 214-219)
மகா சங்கமம் தொகு
ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொகு
இந்த தொடர் முதலில் 24 திசம்பர் 2018 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் ரோஜா மற்றும் ரன் போன்ற தொடர்கள் ஒளிபரப்பானது. தற்பொழுது இரவு 9 மணிக்கு ராசாத்தி என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் | |
---|---|---|---|---|
24 திசம்பர் 2018 - 16 மார்ச்சு 2019 | 21:00 | 1-67 | ||
18 மார்ச்சு 2019 – 14 செப்டம்பர் 2019 | 21:30 | 68-213 | ||
16 செப்டம்பர் 2019 – 21 செப்டம்பர் 2019 | 21:00 - 22:00 | 214-219 | ஒரு மணித்தியால சிறப்பு அத்தியாயங்கள் | |
23 செப்டம்பர் 2019 – 25 சனவரி 2020 | 21:30 | 220-332 |
மதிப்பீடுகள் தொகு
கீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.
அத்தியாயங்கள் | ஒளிபரப்பான திகதி | BARC மதிப்பீடுகள் (தமிழ்நாடு + புதுச்சேரி)[5] | |
---|---|---|---|
தேசிய அளவில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) | |||
1-20 | 24 திசம்பர் 2018 - 21-ஜனவரி 2019 | 9.1% | |
21-40 | 22 ஜனவரி 2019 - 14 பிப்ரவரி 2019 | 8.6% | |
41-67 | 15 பிப்ரவரி 2019 - 16 மார்ச்சு 2019 | 8.7% | |
68 - 100 | 18 மார்ச்சு 2019 - 25 ஏப்ரல் 2019 | 6.3% | |
101 - 150 | 26 ஏப்ரல் 2019 - 1 ஜூலை 2019 | 7.5% | |
151 - 200 | 2 ஜூலை 2019 - 29 ஆகஸ்ட் 2019 | 7.2% | |
201 - 250 | 30 ஆகஸ்ட் 2019 - 28 அக்டோபர் 2019 | 8.2% | |
251 - 300 | 29 அக்டோபர் 2019 - 25 டிசம்பர் 2020 | 7.9% | |
301 - 322 | 26 டிசம்பர் 2019 - 25 சனவரி 2020 | 8.8% |
மொழி மாற்றம் தொகு
இந்த தொடர் மலையாளம் மொழியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற அதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சனவரி 7, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 180அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்சியில் 11 பிப்ரவரி 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி 35 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
நாடு | மொழி | அலைவரிசை | தலைப்பு | ஒளிபரப்பு | பகுதிகள் |
---|---|---|---|---|---|
இந்தியா | தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | లక్ష్మి స్టోర్స్ | 11 பிப்ரவரி 2019 - 29 மார்ச் 2019 | 35 |
బొమ్మరిల్లు | 22 ஜூன் 2020 - 23 அக்டோபர் 2020 | 90 | |||
மலையாளம் | சூர்யா தொலைக்காட்சி | ലക്ഷ്മി സ്റ്റോറുകൾ | 7 சனவரி 2019- 13 செப்டம்பர் 2019 | 180 | |
கன்னடம் | உதயா தொலைக்காட்சி | ಲಕ್ಷ್ಮಿ | 8 ஜூன் 2020 - 3 ஏப்ரல் 2021 | 220 | |
வங்காளம் | சன் வங்காள | 5 ஏப்ரல் 2021 - 11 ஜூலை 2021 | 68 | ||
இலங்கை | தமிழ் | சக்தி தொலைக்காட்சி | லட்சுமி ஸ்டோர்ஸ் | 29 ஏப்ரல் 2019 - 30 மே 2020 |
சர்வதேச ஒளிபரப்பு தொகு
- இந்த தொடர் திசம்பர் 24, 2018ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) ஒளிபரப்பானது.
- சன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் இந்த தொடரை பார்க்க முடியும்.
- இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காசி சேவையான சக்தி தொலைக்காட்சியில் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு சிங்களம் உபதலைப்புடன் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Khushbu to star in a new TV serial - Lakshmi Stores". 2018-12-24. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/khushbu-to-star-in-a-new-tv-serial-lakshmi-stores.html,%20https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/khushbu-to-star-in-a-new-tv-serial-lakshmi-stores.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Rayaan, Mohammed (2018-12-22). "Actress Khushbu returns to small screen, excited about new Sun TV serial" (in en-US). https://newstodaynet.com/index.php/2018/12/22/actress-khushbu-returns-to-small-screen-excited-about-new-sun-tv-serial/.
- ↑ "Lakshmi Stores" (in en-US). 2018-12-22 இம் மூலத்தில் இருந்து 2018-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224220122/https://www.onenov.in/lakshmi-stores-serial-cast/.
- ↑ "Khushbu Sundar returns to television after five years" (in en-IN). 2018-12-24. https://indianexpress.com/article/entertainment/television/khushbu-sundar-returns-tv-after-5-years-lakshmi-stores-5507332/.
- ↑ "barcindia.co.in Azhagu serial Ratings". http://www.barcindia.co.in/statistic.aspx.
வெளி இணைப்புகள் தொகு
- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9:30 மணிக்கு தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | லட்சுமி ஸ்டோர்ஸ் (18 மார்ச்சு 2019 - 25 சனவரி 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
சந்திரகுமாரி (10 திசம்பர் 2018 – 18 மார்ச்சு 2019) |
ராசாத்தி (27 சனவரி 2020 - ஒளிபரப்பில்) |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | லட்சுமி ஸ்டோஸ் (24 திசம்பர் 2018 – 16 மார்ச்சு 2019) |
அடுத்த நிகழ்ச்சி |
நந்தினி (23 சனவரி 2017 – 22 திசம்பர் 2018) |
ரோஜா (18 மார்ச்சு 2019 - 3 ஆகஸ்ட் 2019) |