ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்)
ராசாத்தி என்பது சன் தொலைக்காட்சியில் 23 செப்டம்பர் 2019 முதல் 3 ஏப்ரல் 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் தேவயானி, விசித்ரா, பவானி ரெட்டி, டெப்ஜனி மொடக், விஜயகுமார், செந்தில், ஆதித்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 160 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
ராசாத்தி | |
---|---|
வகை | குடும்பம் காதல் நாடகத் தொடர் |
எழுத்து | ரத்னகுமார் |
இயக்கம் | ராஜ்கபூர் (1-28) பாபுசிவன் (28-110) ஏ.ஜவஹர் (111-160) |
நடிப்பு | |
முகப்பிசை | பாடல் மோகன் ராஜா |
பிண்ணனி இசை | சபேஷ் முரளி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 160 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | அன்புராஜா |
ஒளிப்பதிவு | செந்தில்குமார் பிரகாஷ் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் ஏ ஆர் பிலிம் வேர்ல்ட் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 23 செப்டம்பர் 2019 31 மார்ச்சு 2020 | –
நடிகர்கள் தொகு
முதன்மை கதாபாத்திரம் தொகு
- தேவயானி (61-160) - இளவரசி சௌந்தரவல்லி
- விசித்ரா[2][3] (1-160) - சிந்தாமணி
- செந்தில்[4] (1-) - அழகர் சுவாமி (ராசாத்தியின் மாமா)
- பவானி ரெட்டி (1-100) → டெப்ஜனி மொடக் (100-160) - ராசாத்தி
- ஆதித்யா (1-160) - ராஜதுரை/பாண்டியன்
துணைக் கதாபாத்திரங்கள் தொகு
- தென்னவன் → ரமேஷ் பண்டிட் - ராசாப்பா
- சுலக்சனா - (பாண்டியனை வளர்ந்த தாய்)
- கீர்த்தி ஜெய் தனுஷ் - கயல் சிவா (சிந்தாமணியின் மகள்)
- நித்யா ரவீந்தர் - சரஸ்வதி (சண்முகசுந்தரத்தின் முதல் மனைவி, ராசாத்தியின் தாய்)
- ரீனா - (சண்முகசுந்தரத்தின் இரண்டாவது மனைவி, ராசாப்பாவின் தாய்)
- மனோஜ் குமார் - (சிந்தாமணியின் சகோதரன்)
- சிவன் ஸ்ரீனிவாசன் - தர்மதா
- சபரி - சிவா
- மீனா - சூடாமணி
- சுப்புலக்ஷ்மி - மேனகா
- உஷா சாய் - கல்யாணி
- மகேஷ் பிரபு - மாதவன்
- பொள்ளாச்சி பாபு
முந்தைய கதாபாத்திரங்கள் தொகு
- விஜயகுமார் - சண்முகசுந்தரம் (தொடரில் இறந்துவிட்டார்)
- மனோஜ்குமார்
- சபரி
- லூயிஸ்
- கீதா நாராயணன்
- ஜானகி
- மாயாக்கள் பாட்டி
- ரம்யா
- மீனாட்ச்சி
- ஹேமா ஸ்ரீ
- பண்டி ராவி
- அபிமன்யூ
- தமிழ் செல்வன்
நடிகர்களின் தேர்வு தொகு
இந்த தொடரில் முதலில் சின்னத் தம்பி தொடரில் நடித்த பவானி ரெட்டி இந்த தொடரில் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அத்தியாயம் 61 முதல் நடிகை தேவயானியின் வருகைக்கு பிறகு இவருக்கான முக்கியத்துவம் குறைந்ததால் இவர் இந்த தொடலிருந்து விலகினார். அத்தியாயம் 100 முதல் என்ற புதுமுக நடிகை டெப்ஜனி மொடக் என்பவர் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் தந்தையாக சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம், நந்தினி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுடன் சிந்தாமணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை விசித்ராவும் நடிக்கிறார். இவர் 18 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். பிரபல நகைசுச்சுவை நடிகர் செந்தில், சுலக்சனா, பொள்ளாச்சி பாபு, புதுமுக நடிகர் ஆதித்யா , நித்யா ரவீந்தர், கீர்த்தி, ரமேஷ் பண்டிட் போன்ற பலர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள்
ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொகு
இந்த தொடர் முதல் முதலில் 23 செப்டம்பர் 2019 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. சனவரி 28, 2020 ஆம் ஆண்டு முதல் இரவு 9:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.
மதிப்பீடுகள் தொகு
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 7.2% | 8.4% |
2020 | 6.9% | 7.9% |
மேற்கோள்கள் தொகு
- ↑ "'சின்னத்தம்பி நந்தினி'யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!". tamil.indianexpress.com. செப்டம்பர் 10, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "'என்ன ரஜினி சார் ரெகமெண்ட் பண்ணுனாரு': 18 வருஷத்துக்கு அப்புறம் நடிக்க வரும் விசித்ரா!". tamil.indianexpress.com. செப்டம்பர் 14, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rasathi Serial: நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!". tamil.oneindia.com. செப்டம்பர் 12, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Actor-politician Senthil to make his TV debut with 'Rasathi'". timesofindia.indiatimes.com. செப்டம்பர் 23, 2019 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள் தொகு
- ராசாத்தி[தொடர்பிழந்த இணைப்பு] மாஸ் பிளேயர்
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ராசாத்தி (28 சனவரி 2020 3 ஏப்ரல் 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
லட்சுமி ஸ்டோர்ஸ் (18 மார்ச்சு 2019 - 25 சனவரி 2020) |
சித்தி–2 ( 27 ஜூலை 2020 - ஒளிபரப்பில்) |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ராசாத்தி (23 செப்டம்பர் 2019 25 சனவரி 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
லட்சுமி ஸ்டோர்ஸ் (16 செப்டம்பர் 2019 - 21 செப்டம்பர் 2019) |
சித்தி–2 (27 சனவரி 2020 3 ஏப்ரல் 2020) |