அவினி சினிமேக்ஸ்

அவினி சினிமாக்ஸ் (Avni Cinemax) என்பது ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது குஷ்பூ மற்றும் சுந்தர் சி. தலைமையிலான நிறுவனமாகும். [1]

அவினி சினிமேக்ஸ்
வகைதிரைப்பட தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
நிறுவுகை2004
தலைமையகம்சென்னை, இந்தியா
முக்கிய நபர்கள்குஷ்பூ
சுந்தர் சி.
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படம் (தமிழ்)

வரலாறுதொகு

குஷ்பூ தன் கனவர் சுந்தர் சி. இயக்கிய கிரி (2004) என்ற அதிரடி நாடக திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் அர்ஜுன், ரீமா சென், திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அந்த படம் வணிக ரீதியான வெற்றியையும் ஈட்டியது. அது அவரை தயாரிப்பாளராக தொடரத் தூண்டியது, அடுத்ததாக மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரெண்டு என்ற நகைச்சுவை நாடக படத்தை உருவாக்கினார். [2] [3]

அவினி குரூப்ஸ் என்ற பெற்றோர் நிறுவனத்தின் பங்குதாரர் குழுவான அவினி மூவிஸ் என்ற நிறுவனமானது, 2016 ஆம் ஆண்டில் ஹலோ நான் பேய் பெசுறேன் என்ற படத்தை தயாரித்தது. தயாரிப்பாளர் பெயராக சுந்தர் சி. பெயர் இடப்பட்டது. இருப்பினும் இந்த படம் அவ்னி சினிமாக்ஸின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது. மீசைய முறுக்கு (2017) கடத்துக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

திரைப்படவியல்தொகு

படம் ஆண்டு இயக்குநர் நடிகர்கள் சுருக்கம் குறிப்பு
கிரி 2004 C., SundarSundar C. அர்ஜுன், ரீமா சென், திவ்யா ஸ்பந்தனா, வடிவேலு ஒரு நபர் தனது எதிரியிடமிருந்து தனது நண்பனின் மனைவியையும் மகனையும் பாதுகாக்க கிராமத்திற்குத் திரும்புகிறார். [4]
ரெண்டு 2006 மாதவன், ரீமா சென், அனுசுக்கா செட்டி, வடிவேலு தன்னைப்போலவே தோற்றமுள்ள பாரவையற்றவனால் செய்யப்பட்ட கொலைகளுக்கு ஒரு இளைஞன் குற்றம் சாட்டப்படுகிறான்.
ஐந்தாம் படை 2009 பத்ரி சுந்தர் சி., அதிதி சவுத்ரி, சிம்ரன், விவேக் இப்படம் இரண்டு குடும்பங்களின் பகையையும் அவர்களுக்கு இடையில் நடக்கும் மோதல்களை சுற்றி வருகிறது. [5]
நகரம் 2010 C., SundarSundar C. சுந்தர் சி., அனுயா பகவத், வடிவேலு தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொண்டு திருந்தி வாழ விரும்பும் ஒரு முன்னாள் குண்டர்கள் அவரது கடந்த காலத்தின் தோடர்ச்சியால் வேட்டையாடப்படுகிறார்கள்.
கலகலப்பு 2012 விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் தங்கள் மூதாதையரின் உணவகத்தை வைத்திருக்கும் இரண்டு சகோதரர்கள் அதை அபகரிக்க நினைப்பவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்கள். [6]
தீயா வேலை செய்யணும் குமாரு 2013 சித்தார்த், ஹன்சிகா மோட்வானி, கணேஷ் வெங்கட்ராமன், சந்தானம் கூச்ச சுபாவமுள்ள ஒரு இளைஞன் தனது காதலியைக் கவர ஒரு காதல் நிபுணனின் உதவியை நாடுகிறான். பையனின் காதலி தன் தங்கை என்பதை அறிந்த பிறகு, நிபுணன் காதலர்களை பிரிக்க திட்டமிட்டுள்ளார். [7]
அரண்மனை 2 2016 சித்தார்த், திரிசா, சுந்தர் சி., ஹன்சிகா மோட்வானி, பூனம் பஜ்வா தங்களது மூதாதையர் அரண்மனையில் தங்குவதற்கு வரும் ஒரு தம்பதியினர் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் வேட்டையாடப்படுகிறார்கள். [8]
ஹலோ நான் பேய் பேசுறேன் 2016 எஸ். பாஸ்கர் வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திருடனால் ஒரு செல்பேசி திருடுகிறது. அதன் வழியாக ஒரு ஆவியால் வேட்டையாடுகிறார்கள். [9]
முத்தின கத்திரிக்கா 2016 வெங்கட் ராகவன் சுந்தர் சி., பூனம் பஜ்வா, சதீஸ் ஒரு நடுத்தர வயது அரசியல்வாதி தனது முன்னாள் காதலியின் மகளான மிகவும் இளம்வயதான பெண்ணை காதலிக்கிறான். [10]
மீசைய முறுக்கு 2017 Tamizha, HiphopHiphop Tamizha ஹிப்ஹாப் தமிழா, ஆத்மிகா, விவேக் இந்த படம் ஹிப்ஹாப் தமழாவின் பகுதி வாழ்க்கைக் கதை [11]
கலகலப்பு 2 2018 C., SundarSundar C. ஜீவா, ஜெய், சிவா, காத்ரீன் திரீசா, நிக்கி கல்ரானி [12]
நட்பே துணை 2019 பார்த்திபன் தேசிங்கு ஹிப்ஹாப் தமிழா, Anagha, கரு பழனியப்பன் ஒரு முன்னாள் வலைகோலாட்ட வீரர் ஒரு ஊழல் அரசியல்வாதியிடமிருந்து தங்கள் மைதானத்தை காப்பாற்ற ஒரு அணி ஒரு ஆட்டத்தை விளையாடி வெல்ல உதவுகிறார்.
நான் சிரித்தால் 2020 ராணா ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன்
நாங்க ரொம்ப பிசி 2020 பத்ரி பிரசன்னா, சாம், அஸ்வின் ககுமனு, யோகி பாபு, சுருதி மராத்தே, ரித்திகா சென், விடிவி கணேஷ் [13]
அரண்மனை 3 2021 C., SundarSundar C. ஆர்யா, ராசி கன்னா, விவேக், சுந்தர் சி., சாக்‌ஷி அகர்வால்.
விநியோகித்த படங்கள்

2006 முதல் அவினி சினிமாக்ஸ் தயாரித்த படங்கள் அல்லாமல், பிற பதாகைகளில் தயாரிக்கபட்ட பின்வரும் படங்கள் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டன:

தொலைக்காட்சிதொகு

தலைப்பு ஆண்டு இயக்குனர் நடிகர்கள் அலைவரிசை சுருக்கம்
பம்பர்குழுக்கள் 2000-2004 நிரோஷா, ஆனந்த் பாபு ஜெயா தொலைக்காட்சி
கல்கி 2004-2007 கே. நட்ராஜ் குஷ்பூ, அபிஷேக்
ருத்ரா 2009-2010 குஷ்பூ ஜீ தமிழ்
பார்த்த ஞாபகம் இல்லையோ 2012–2014 என். பிரியன் கலைஞர் தொலைக்காட்சி
நந்தினி 2017–2018 ராஜ்கபூர் நித்யா ராம், மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி சன் தொலைக்காட்சி, உதயா தொலைக்காட்சி சூர்யா தொலைக்காட்சி, ஜெமினி தொலைக்காட்சி & சன் வங்காள (மொழிமாற்ற பதிப்புகள்)
மாயா 2018 நந்தாஸ் அஜய், ஸ்வேதா, அகங்க்ஷா காந்தி சன் தொலைக்காட்சி சூர்யா தொலைக்காட்சி, ஜெமினி தொலைக்காட்சி & சன் வங்காள (மொழிமாற்ற பதிப்புகள்)
லட்சுமி ஸ்டோர்ஸ் 2018–2020 கே. சுலைமான் பாபு குஷ்பூ, நக்ஷத்ரா நாகேஷ், உசேன். சூர்யா தொலைக்காட்சி, உதயா தொலைக்காட்சி & சன் வங்காள (மொழிமாற்ற பதிப்புகள்)
ஜோதி 2021 - தற்போது ராஜ்கபூர் மேகாஸ்ரி, சந்தனா ஷெட்டி, விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஜெமினி தொலைக்காட்சி, சன் வங்காள (மொழிமாற்றப் பதிப்புகள்)

குறிப்புகள்தொகு

 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவினி_சினிமேக்ஸ்&oldid=3363325" இருந்து மீள்விக்கப்பட்டது