சுருதி மராத்தே

மராத்தி நடிகை

சுருதி மராத்தே (Shruti Marathe, பிறப்பு 9 அக்டோபர் 1986) [2] என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மராத்தித் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தனது பணிகளுக்காக பெயர் பெற்றவர்

சுருதி மராத்தே
சுருதி மராத்தே
பிறப்பு9 அக்டோபர் 1986 (1986-10-09) (அகவை 37)
இந்தியா, வடோதரா
தொழில்வடிவழகி
நடிகை
வாழ்க்கை துணைகௌரவ் காட்னேக்கர் [1]

தொழில் தொகு

இவர் மராத்தி திரைப்படத் துறையில் சனாய் சௌகதே (2008) படத்தின் வழியாகவும், தமிழில் இந்திர விழா (2009) படத்தின் மூலமும் அறிமுகமானார். [3] [4] இவர் நடித்த பிற படங்கள் நான் அவனில்லை 2 (2009), [5] குரு சிஷ்யன் (2010), [6] ராம மாதவ் (2014), [7] தப்தபாடி (2014), [8] பந்த் நைலான் சே (2016), [9] புதியா சிங் - பார்ன் டு ரன் (2016) [10] ஆகும். ராம மாதவ் படத்தில் இவரது நடிப்பைப் பற்றி ஒரு விமர்சகர், "பார்வதிபாய் என்ற பாத்திரத்தில், சுருதி மராத்தே போரில் இறந்துவிட்ட தனது கணவர் போர் முடிந்து திரும்புவதற்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணாக சரியாக நடித்திருக்கிறார்" என்று கூறினார். திருட்டுப் பயலே (2006) படத்தின் கன்னட மறு ஆகமான ஆடு ஆட ஆடு மூலம் கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார். [11]

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2008 சனாய் சௌகதே அஸ்வினி மராத்தி
2009 இந்திரா விழா சாவித்ரி துரைசிமாலு தமிழ் ஹேமா மாலினி [12]
நான் அவனில்லை 2 சகி
ஆசா மி தாச மி மராத்தி
லகலி பைஜ் தீபாலி
2010 குரு சிஷ்யன் காயத்ரி தமிழ்
2011 டீச்சா பாப் தியாச்சா பாப் கனடா பை மராத்தி
2012 அரவான் கனகனுகா தமிழ் சிறப்புத் தோற்றம்
சத்ய, சாவித்ரி அனி சத்யவன் சுர்பிரியா ஜாதவ் மராத்தி
2013 பிரேமசூத்ரா மாளவிகா
துஜி மஜி லவ் ஸ்டோரி
2014 ராம மாதவ் பார்வ்திபாய் பெஷ்வே
தப்தபதி சுனந்தா
2015 மும்பை-புனே-மும்பை 2 தனுஜா
2016 பந்த் நைலான் சே அனிதா ஜோகலேகர்
புதியா சிங் - பார்ன் டு ரன் கீதா இந்தி
2017 வெட்டிங் ஆனிவசரி
ஆடு ஆட்டா ஆடு கன்னடம் ஸ்ருதி பிரகாஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
2020 நாங்க ரொம்ப பிசி சங்கீதா தமிழ் தொலைக்காட்சிப் படம்

தொலைக்காட்சி தொகு

  • சாந்த் சாகு
  • பேஷ்வாய்
  • ராதா ஹாய் பவாரி
  • லக்னபம்பல்
  • ஜாகோ மோகன் பியாரே
  • மஜ்யா நவ்ரியாச்சி பேக்கோ
  • ருத்ரகல்
  • பார்ட் ஆஃப் ரத்தம்

குறிப்புகள் தொகு

  1. "Shruti Marathe Weds Gaurav Ghatnekar Marriage Photos - MarathiCineyug.com | Marathi Movie News | TV Serials | Theater". marathicineyug.com. Archived from the original on 2020-07-30. பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
  2. "Shruti Marathe Wiki". starsbiog. பார்க்கப்பட்ட நாள் 15 February 2019.
  3. "Shruti has two different screen names - Times of India". The Times of India.
  4. "Exclusive: Shruti Marathe flies to Chennai for a film shoot - Times of India". The Times of India.
  5. "Naan Avan Illai-2". Sify.
  6. "Stay away from Guru Sishyan". Rediff.
  7. "Rama Madhav (Marathi) / A good attempt". 15 August 2014.
  8. "Taptapadi Movie Review {3/5}: Critic Review of Taptapadi by Times of India" – via timesofindia.indiatimes.com.
  9. "FILM REVIEW: BANDH NYLON CHE". Pune Mirror. Archived from the original on 2020-10-18. பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
  10. "Budhia Singh - Born To Run review: Incredible tale, honestly told". Sify.
  11. "Thiruttu Payale Kannada remake Aadu Aata Aadu to release on October 13th". Behindwoods. 11 October 2017.
  12. "Indira Vizha Movie Review {2/5}: Critic Review of Indira Vizha by Times of India" – via timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_மராத்தே&oldid=3767384" இலிருந்து மீள்விக்கப்பட்டது